Sai Abhyankkar : இத்தனை படங்கள் வெயிட்டிங்கா? உச்ச நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்!
Sai Abhyankkar films : தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராக இருந்து வருபவர் சாய் அபயங்கர். இவர் இசையமைப்பாளராக இசையமைத்த படங்கள் வெளியாகுவதற்கு முன்னே, முன்னணி நடிகர்களின் பல படங்களைத் தனது கைவசம் வைத்துள்ளார். அது என்ன என்பதைப் பற்றி பார்க்கலாம்.

சாய் அபயங்கர்
கோலிவுட் சினிமாவில் இளம் இசையமைப்பாளராக வலம்வருபவர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar). இவர் தமிழில் “கட்சி சேர” (Katchi sera) என்றார் ஆல்பம் பாடலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த பாடலை அடுத்ததாகத் தொடர்ந்து அடுத்தடுத்த ஆல்பம் பாடல்களை உருவாக்கி வெளியிட்டு மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்திருந்தார். இவரின் இசையமைப்பில் வெளியான ஆல்பம் பாடல்கள் அனைத்தும் இந்தியா அளவிற்கு ட்ரெண்டிங் பட்டியலில் இருந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து இவர் தற்போது சினிமாவிலும் இசையமைப்பாளராகப் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவருக்கு முதல் முதலில் சினிமா அறிமுக திரைப்படமாக அமைந்தது பென்ஸ் (Benz).
லோகேஷ் கனகராஜின் (Lokesh Kanagaraj) தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தின் மூலமாகத்தான், தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக நுழைந்தார். இதைத் தொடர்ந்து உச்ச நடிகர்களின் படங்களுக்கும் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி இசையமைத்து வருகிறார். இவரின் இசையமைப்பில் உருவாகும் படங்களைப் பற்றி பார்க்கலாம்.
இதையும் படிங்க : அட்லி படத்தில் 4 வேடங்களில் நடிக்கும் அல்லு அர்ஜுன்? வெளியான தகவல்
பென்ஸ் திரைப்படம் ;
லோகேஷ் கனகராஜின் தயாரிப்பில், இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் முன்னணி நடிகர்களாக நிவின் பாலி மற்றும் ராகவா லாரன்ஸ் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் நடந்துவரும் நிலையில், இப்படத்திற்காக இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். இது அவரின் முதல் படமாகும்.
கருப்பு திரைப்படம் :
நடிகர் சூர்யாவின் நடிப்பில் , இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருக்கும் படம்தான் கருப்பு. இந்த படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக திரிஷா கிருஷ்ணன் நடித்துள்ளார். இந்த படத்திலும் இசையமைப்பாளராகச் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படமானது வரும் 2025ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகிறது எனக் கூறப்படுகிறது.
டியூட் திரைப்படம் :
அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில், நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்துவரும் படம்தான் டியூட் . இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்துவருகிறார். இந்த படத்திற்குச் சாய் அபயங்கர் இசையமைத்துவரும் நிலையில், இப்படமும் 2025 தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தனுஷ் – விக்னேஷ் ராஜா கூட்டணி.. ‘டி54’ பட பூஜை வீடியோ இதோ!
கார்த்தியின் மார்ஷல் :
Welcome @thinkmusicindia to the world of #Marshal! 🎶
A @SaiAbhyankkar Musical 🎹🥁@Karthi_Offl #Sathyaraj #Prabhu @kalyanipriyan #Lal @highonkokken #EaswariRao #Muralisharma @directortamil77 @sathyaDP #ArunVenjaramoodu @philoedit @DreamWarriorpic @prabhu_sr #IshanSaksena pic.twitter.com/YCBTUAvmFG
— MarshalMovie (@MarshalMovie) July 12, 2025
நடிகர் கார்த்தியின் 29வது திரைப்படமாக உருவாகிவருவது இந்த மார்ஷல். இதை இயக்குநர் தமிழ் இயக்கிவருகிறாரா. இவர் ஏற்கனவே டாணாக்காரன் என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் கார்த்தியுடன் சத்யராஜ் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் இணைந்து நடித்தது வருகின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளார்.
பல்டி மற்றும் எஸ்.டி. ஆர் 49:
இசையமைப்பாளர் சாய் அபயங்கர் மலையாளத்தில் நடிகர் ஷேன் நிகம் நடிப்பில் உருவாகிவரும் பல்டி என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இவருக்கு இதுதான் மலையாளத்தில் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் சிலம்பரசனின் STR 49 படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமானார். ஆனால் இப்படத்தின் ஷூட்டிங் கைவிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.