Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Tamil Cinema: கோலிவுட் சினிமா.. ஜூன் மாதத்தில் இத்தனை படங்கள் ரிலீஸா?

2025 June Tamil Film Releases : தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒவ்வொரு மாதத்திலும் பல படங்கள் வெளியாகி வெற்றி பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த 2025ம் ஆண்டு ஜூன் மாதத்தில், கோலிவுட் சினிமாவில் ரிலீசிற்கு காத்திருக்கும் படங்கள் என்னவென்று பார்க்கலாம். மேலும் அந்த படமானது எப்போது ரிலீசாகிறது என்பது குறித்தும் பார்க்கலாம்.

Tamil Cinema: கோலிவுட் சினிமா.. ஜூன் மாதத்தில் இத்தனை படங்கள் ரிலீஸா?
தமிழ் திரைப்படங்கள்
barath-murugan
Barath Murugan | Published: 31 May 2025 22:23 PM

தக் லைஃப் : நடிகர்கள் கமல் (Kamal) மற்றும் சிம்புவின் (Simbu) முன்னணி நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம்தான் தக் லைஃப் (Thug Life). இந்த படத்தை இயக்குநர் மணிரத்னம் (Mani Ratham) இயக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் முக்கிய நாயகிகளாக நடிகைகள் திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) மற்றும் அபிராமி இணைந்து நடித்துள்ளனர். அதிரடி ஆக்ஷ்ன் மற்றும் எமோஷனல் காட்சிகளுடன் இந்த படமானது உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தின் கதையையும், இந்த படத்தையும் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணைந்துதான் உருவாக்கியுள்ளனர். முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்த படமானது, வரும் 2025, ஜூன் 5ம் தேதி முதல், தமிழ், தெலுங்கு என 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.

மெட்ராஸ் மேட்டினி திரைப்படம் :

அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகியுள்ள படம் மெட்ராஸ் மேட்டினி. இந்த படத்தில் நடிகர் காளி வெங்கட் முக்கிய தோற்றத்தில் நடித்துள்ளார். அவருடன் நடிகர்கள் சத்யராஜ், கண்ணம்மா சீரியல் பிரபலம் ரோஷினி ஹரிப்ரியன், ஷெல்லி கிஷோர், ஜார்ஜ் மரியான் உட்படப் பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது வித்தியாசமான கதைக்களத்தில் வரும் 205, ஜூன் 6ம் தேதியில் திரையரங்குகளில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

பரமசிவன் பாத்திமா :

நடிகர் விமலின் முன்னணி நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் பரமசிவன் பாத்திமா. இந்த படத்தை பகிரி மற்றும் பெட்டிக்கடை போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார். கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் இந்த படத்தின் அறிவிப்புகள் வெளியான நிலையில், படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக நடிகை சாயாதேவி நடித்துள்ளார். இந்த படமானது வரும் 2025, ஜூன் 6ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

குபேரா திரைப்படம் :

நடிகர் தனுஷின் நடிப்பில் தெலுங்கில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் குபேரா. இயக்குநர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தனுஷ் பிச்சைக்காரன் வேடத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் நாகார்ஜுனாவும் முக்கிய ரோலில் நடித்துள்ளார். தனுஷின் இந்த படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் வரும் 2025, ஜூன் 20ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் :

புதுமுக இயக்குனர் விக்ரம் ராஜேஷ்வர் இயக்கத்தில் உருவாகியுள்ள, காமெடி கலந்த படம்தான் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ். இந்த படத்தில் நடிகர் வைபவ், அதுல்யா ரவி, ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, பாலா சரவணன் மாற்று சுனில் ரெட்டி எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படமானது நகைச்சுவை கலந்த , திருட்டு கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. கோலிவுட் திரைப்படங்களில் இந்த சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் படமானது வரும், 2025, ஜூன் 20ம் ஹிந்தியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மார்கன் திரைப்படம் :

நடிகர் விஜய் ஆண்டனியின் முன்னணி நடிப்பில் உருவாகியுள்ள படம் மார்கன். இந்த படத்தை இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கியுள்ளார். இந்த படத்தை விஜய் ஆண்டனி தயாரித்தும் மற்றும் இசையும் அமைத்துள்ளார். குற்றம் சார்ந்த கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்த படத்தில் முக்கிய பிரிகிதா சகா நடித்துள்ளார். அதிரடி ஆக்ஷ்ன் கதையுடன் உருவாகியுள்ள இப்படம் வரும் 2025, ஜூன் 27ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் குறித்து ஓப்பனாக பேசிய நடிகை பூஜா ஹெக்டே
பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் குறித்து ஓப்பனாக பேசிய நடிகை பூஜா ஹெக்டே...
தமிழ்நாட்டில் மீண்டும் மழைக்கு வாய்ப்பா.? வெப்பநிலை உயருமா?
தமிழ்நாட்டில் மீண்டும் மழைக்கு வாய்ப்பா.? வெப்பநிலை உயருமா?...
வடசென்னை 2 ஷூட்டிங் எப்போது.. தனுஷ் கொடுத்த அப்டேட்!
வடசென்னை 2 ஷூட்டிங் எப்போது.. தனுஷ் கொடுத்த அப்டேட்!...
மருத்துவ செலவுக்காக உதவியாக பெறும் பணத்துக்கு வரி விதிக்கப்படுமா?
மருத்துவ செலவுக்காக உதவியாக பெறும் பணத்துக்கு வரி விதிக்கப்படுமா?...
ஜூன் 4ல் ராமேஸ்வரம் செல்ல திட்டமா?.. கோயில் 10 மணி நேரம் அடைப்பு!
ஜூன் 4ல் ராமேஸ்வரம் செல்ல திட்டமா?.. கோயில் 10 மணி நேரம் அடைப்பு!...
தினமும் ரூ.100 முதலீடு செய்து ரூ.2 லட்சம் சேமிக்கலாம் - எப்படி?
தினமும் ரூ.100 முதலீடு செய்து ரூ.2 லட்சம் சேமிக்கலாம் - எப்படி?...
ஐபிஎல்லில் இதுவரை எந்த சீசனில் எந்த அணி சாம்பியன்? முழு பட்டியல்!
ஐபிஎல்லில் இதுவரை எந்த சீசனில் எந்த அணி சாம்பியன்? முழு பட்டியல்!...
மார்பு வலி: மாரடைப்பு vs. வாயுத்தொல்லை - எப்படி வேறுபடுத்துவது?
மார்பு வலி: மாரடைப்பு vs. வாயுத்தொல்லை - எப்படி வேறுபடுத்துவது?...
நல்ல ஸ்கிரிப்ட் கிடைச்சுதுனா தமிழ் சினிமாவிற்கு ஓடோடி வந்துடுவேன்
நல்ல ஸ்கிரிப்ட் கிடைச்சுதுனா தமிழ் சினிமாவிற்கு ஓடோடி வந்துடுவேன்...
கர்நாடகாவில் காங்கிரஸ் மீது அதிருப்தி.. உயரும் பாஜக செல்வாக்கு!
கர்நாடகாவில் காங்கிரஸ் மீது அதிருப்தி.. உயரும் பாஜக செல்வாக்கு!...
இசைஞானி இளையராஜாவிற்கு இன்று பிறந்த நாள்...
இசைஞானி இளையராஜாவிற்கு இன்று பிறந்த நாள்......