Theatrical Release Movies: இன்று ஒரே நாளில் வெளியான 14 படங்கள்.. விவரம் இதோ!

List Of Movies Releasing In Theaters On July 18 2025 : கோலிவுட் சினிமாவில் மாதந்தோறும் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் வெளியாகிவருகின்றனர். அந்த வகையில் இன்று 2025, ஜூலை 18ம் தேதியில் திரையரங்குகளில் சுமார் 14 படங்கள் வெளியாகியுள்ளன. என்னென்ன திரைப்படங்கள் வெளியாகின்றன என்பதைப் பற்றி விவரமாகப் பார்க்கலாம்.

Theatrical Release Movies: இன்று ஒரே நாளில் வெளியான 14 படங்கள்.. விவரம் இதோ!

திரைப்படங்கள்

Updated On: 

18 Jul 2025 11:14 AM

ட்ரென்டிங் மற்றும் டைட்டானிக் : தமிழில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் கலையரசன் (Kalaiyarasan) . இவரின் நடிப்பில் நாளாய் 2025, ஜூலை 18ம் தேதியான ஒரே நாளில் சுமார் இரு திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. அதில் முதலில் ட்ரென்டிங் (Trending). இந்த ட்ரென்டிங் படத்தை அறிமுக இயக்குநர் சிவராஜ் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் கலையரசனுக்கு ஜோடியாக அறிமுக நடிகை பிரியாலயா (Priyalaya)  நடித்துள்ளார். இந்த படமானது மர்ம திரில்லர் கதைக்களத்துடன் உருவாகியிருக்கும் நிலையில் 2025, ஜூலை 18ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தை அடுத்ததாக நடிகர் கலையரசன் மற்றும் கயல் ஆனந்தியின்(Kayal Ananthi) நடிப்பில் உருவாகியிருக்கும் படம் டைட்டானிக் (Titanic). இந்த படத்தை இயக்குநர் ஜானகிராமன் இயக்கியுள்ளார்.

இந்த படமானது முழுக்க காதல் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இந்த படமும் வரும் 2025, ஜூலை 18ம் தேதியில் வெளியாகிறது. நடிகர் கலையரசனின் நடிப்பில் சுமார் 2 படங்கள் திரையரங்குகளில் வெளியாவதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

டைட்டானிக் பட ரிலீஸ் தேதி பதிவு :

பன் பட்டர் ஜாம் :

பிக் பாஸ் புகழ் ராஜுவின் முன்னணி நடிப்பில் உருவாகியுள்ள படம் பன் பட்டர் ஜாம். இந்த படத்தை இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படமானது காதல், நகைச்சுவை மாற்றம் ஹாரர் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர்கள் ஆதியா பிரசாத், பவ்யா த்ரிகா, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சார்லி மற்றும் வி.ஜே. பப்பு என பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படமும் 2025, ஜூலை 18ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஜூனியர் :

நடிகை ஸ்ரீ லீலா, ஜெனிலியா மற்றும் கிரீதி ரெட்டி முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஜூனியர். இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் ராதாகிருஷ்ணா ரெட்டி எழுதி, இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். அதிரடி ஸ்டண்ட் மற்றும் காதல் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படம் 2025, ஜூலை 18ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் :

  • ஜென்ம நட்சத்திரம்
  • கெவி
  • சாயாரா
  • நீல்கிரிஸ் எ ஷார்ட் வில்டர்ன்ஸ்
  • இரவுப்பறவை
  • டியர் மா
  • பிளாஸ்க்
  • தன்வி தி க்ரேட்
  • சென்ட்ரல்