Legend Saravanan: விக்ரம்.. லியோ படத்திற்கு இணையானது.. லீடர் உங்களை 100% திருப்திப்படுத்தும் – லெஜெண்ட் சரவணா அதிரடி பேச்சு!

Legend Saravana About Leader Movie: பிரபல தொழிலதிபராகவும், நடிகராகவும் இருந்துவருபவர் லெஜெண்ட் சரவணா. இவரின் நடிப்பிலும், தயாரிப்பிலும் உருவாகியுள்ள 2வது படம்தான் லீடர். இந்த படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றிருந்த நிலையில், அதில் லீடர் படம் எப்படி இருக்கும் என்பது குறித்து பேசியுள்ளார்.

Legend Saravanan: விக்ரம்.. லியோ படத்திற்கு இணையானது.. லீடர் உங்களை 100% திருப்திப்படுத்தும் - லெஜெண்ட் சரவணா அதிரடி பேச்சு!

லெஜண்ட் சரவணா

Updated On: 

30 Mar 2026 15:53 PM

 IST

தமிழ் மக்கள் மத்தியில் பிரபல பிஸ்னஸ் மேனாகவும், பிரபல நடிகராகவும் இருந்துவருபவர் லெஜெண்ட் சரவணா (Legend Saravana). இவரின் உண்மையான பெயர் அருள் சரவணன் (Arul Saravanan). இவர் லெஜண்ட் சரவணா என்ற பிரபல கடை ஒன்றை நடத்திவருகிறார். அந்த விதத்தில் தொழிலதிபராக இருந்த இவர், தற்போது நடிகராகவும் சினிமாவில் நுழைந்துவிட்டார். கடந்த 2022ம் ஆண்டில் வெளியான “லெஜெண்ட்” என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகராகி இவர் நுழைந்த நிலையில், தற்போது இவரின் நடிப்பில் 2வது திரைப்படமும் வெளியாக தயாராகியுள்ளது. இதை தமிழ் பிரபல இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் (RS.Dhurai Senthilkumar) , லெஜெண்ட் சரவணா தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு “லீடர்” (Leader) என டைட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இதன் டீசர் மற்றும் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகியிருந்தது.
அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது என்று கூறலாம்.

அந்த விதத்தில் இப்படத்தின் ப்ரீ- ரிலீஸ் நிகழ்ச்சி, நேற்று 2026 மார்ச் 29ம் தேதியில் நடைபெற்றிருந்தது. அந்த நிகழ்ச்சியின்போது பேசிய லெஜெண்ட் சரவணா, லீடர் திரைப்படம் எப்படி இருக்கும் என்பது குறித்து பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: இது இளைஞர்களின் வெற்றி… வசூலில் கெத்து காட்டும் கென் கருணாஸின் யூத் படம்

லீடர் திரைப்படம் குறித்து பேசியிருந்த லெஜெண்ட் சரவணா:

அந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “இந்த லீடர் படத்தின் மீது எனக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கிறது. ஜெயிலர், விக்ரம் மற்றும் லியோ போன்ற படங்களின் வெற்றிக்கு ஈடுகொடுக்கும், அத்தனை அம்சங்களும் இப்படத்திலும் இருக்கு. ஒரு பிளாக் பாஸ்டர் திரைப்படத்திற்கு தேவையான அனைத்து விஷயங்களும், லீடர் படத்திலும் உள்ளது.

இதையும் படிங்க: என்னிடம் அந்த விஷயத்தை மாற்றவேண்டும் நினைப்பேன் – ருக்மிணி வசந்த் பேச்சு!

இப்படமானது குடும்பத்துடன் பார்ப்பதற்கு ஒரு சரியான திரைப்படம், இது நிச்சயமாக உங்களுக்கு 100 சதவீதம் திருப்திப்படுத்தும். 2026ம் ஆண்டில் ஒரு மிகப்பெரிய வெற்றிப்படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என நான் உறுதியாக இருக்கிறேன்” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

லீடர் திரைப்படத்தின் ட்ரெய்லர் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

இந்த லீடர் திரைப்படமானது ஒரு மகள் மற்றும் அப்பாவிற்கும் இடையே உள்ள பாசத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதையானது தனது குடும்பத்தை பாதுகாக்க ஏங்கும் ஹீரோவை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படமானது வரும் 2026 ஏப்ரல் 3ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாக தயாராகியுள்ளது. இப்படம் இவருக்கு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..