தக் லைஃப் படத்தில் வேலை செய்த குஷ்புவின் மகள்… நெகிழ்ச்சிப் பதிவு!
Thug Life: நடிகரும் இயக்குநருமான சுந்தர் சி மற்றும் நடிகை குஷ்புவின் இளைய மகள் அனந்திகா சுந்தர் இயக்குநர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குநராக தக் லைஃப் படத்தில் பணிபுரிந்துள்ளார். இதுகுறித்து நடிகை குஷ்பு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குஷ்புவின் இளைய மகள் அனந்திதா சுந்தர்
தமிழ் சினிமாவில் கணவன் மற்றும் மனைவி என இருவருமே சினிமா துறையில் கொடிக்கட்டி பறக்கும் நிலையில் தற்போது தங்கள் குடும்பத்தில் இருந்து அடுத்த தலைமுறை சினிமாவிற்கு வந்ததை நடிகை குஷ்பு அறிவித்துள்ளார் (Actress Kushboo). நடிகை குஷ்பு இயக்குநரும் நடிகருமான சுந்திசியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் நடிகை குஷ்புவின் இளைய மகள் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள தக் லைஃப் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார் என்று அவர் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி நடிகை குஷ்பு தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தக் லைஃப் படத்தின் போது படக்குழுவின் பெயரில் தனது மகளின் பெயர் உதவி இயக்குநர் பட்டியலில் வந்ததை புகைப்படமாக பதிவிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மகள் குறித்து நெகிழ்ந்து பேசியுள்ள நடிகை குஷ்பு:
ஒரு பெற்றோராக, மணிரத்னம் படத்தில் அவரது சீடராக என் மகளின் பெயரைப் பார்ப்பது எனக்கு மிகுந்த பெருமையை அளிக்கிறது. கணுக்கால் எலும்பு முறிவு காரணமாக எனது மகளால் தொடர்ந்து தக் லைஃப் படத்தில் பணியாற்ற முடிவில்லை. அவள் சிறிது காலம் உதவி இயக்குநராக வேலை செய்தாள். ஆனால், அவள் சேகரித்த அறிவும், மணி சாரிடமிருந்து அவள் கற்றுக்கொண்ட விஷயங்களும் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.
அந்த அனுபவம் எனது மகளுக்கு உண்மையிலேயே செழுமையாக இருந்தது என்றே சொல்ல வேண்டும். மேலும் உங்கள் பெரிய மனதுக்கும், படத்தின் இறுதியில் எனது மகளின் பெயரையும் இணைத்து தவறவிடாமல் போட்டதற்கு நன்றி ஐயா என்று மணிரத்னத்திற்கு நன்றி தெரிவித்து இருந்தார்.
நடிகை குஷ்புவின் இன்ஸ்டா பதிவு:
கமல் ஹாசன் நடிப்பில் வெளியான தக் லைஃப் படம்:
நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் இன்று ஜூன் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் தக் லைஃப். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் சிலம்பரசனும் நாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் இவர்களுடன் இணைந்து பலர் நடித்துள்ளனர்.
படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் பலரும் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தப் படம் தமிழ். தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.