KH x RK படத்தின் ஓடிடி விற்பனையில் பேரம் பேசும் நிறுவனங்கள் – வைரலாகும் தகவல்

KH x RK Movie OTT Rights Update: தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் இருவரும் இணைந்து நடிக்கும் படம் தான். இந்தப் படம் ஓடிடி விற்பனை குறித்து சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

KH x RK படத்தின் ஓடிடி விற்பனையில் பேரம் பேசும் நிறுவனங்கள் - வைரலாகும் தகவல்

கமல் ஹாசன் - ரஜினிகாந்த்

Published: 

30 Apr 2026 17:58 PM

 IST

தமிழ் சினிமா ரசிகர்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்து இருந்தது தற்போது நடக்க உள்ளது. ஆம் தமிழ் சினிமா மட்டும் இன்றி உலக அளவில் அவர் அவர் மொழிகளில் முன்னணி நடிகர்களாக உள்ளவர்கள் தொடர்ந்து இணைந்து நடிப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. ஆனால் அப்படியான நிகழ்வு என்பது அடிக்கடி நடைபெறாது. தொடர்ந்து இந்த நிகழ்விற்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். அப்படி இந்திய சினிமாவிலும் அவ்வபோது முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழ் மற்றும் மலையாள சினிமா ரசிகர்களுக்கு தற்போது அந்த நிகழ்வு நடைபெற உள்ளது. அதன்படி மலையாள சினிமாவில் நடிகர்கள் மோகன்லால் மற்றும் மம்முட்டி இருவரும் பல ஆண்டுகளுக்குப் பிறகு பேட்ரியாட் என்ற படத்தில் இணைந்து நடித்து உள்ளனர். இந்தப் படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் இணைந்து நடிக்கும் படக் குறித்த அப்டேட் சமீபத்தில் வெளியானது. அதன்படி அந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் எழுதி இயக்க உள்ள நிலையில் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க உள்ளார். இந்தப் படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.

KH x RK படத்தின் ஓடிடி விற்பனையில் பேரம் பேசும் நிறுவனங்கள்:

இந்த நிலையில் படத்தின் ஓடிடி விற்பனை குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி ஓடிடி விற்பனைக்காக வெளியிடப்பட்ட விளம்பரக் காணொளியைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணையும் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமைகளை ரூ.250 கோடிக்கு மதிப்பிட்டு, ரெட் ஜெயண்ட் ஸ்டுடியோஸ் நிறுவனம் நெட்ஃபிக்ஸிடம் விற்பனை முன்மொழிவைச் சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அந்நிறுவனம் வெறும் ரூ.110 கோடியை மட்டுமே வழங்க முன்வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன; இது தயாரிப்பு நிறுவனத்திற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… நூறு சாமி படத்திலிருந்து வெளியானது அம்மா அம்மா தான் பாடலின் புரோமோ வீடியோ

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… 23 ஆண்டுகளாகத் தொடர்ந்து உச்சத்தில் நீடிப்பது ஒரு நம்பமுடியாத சாதனை – த்ரிஷா குறித்து புகழ்ந்து பேசிய ஆர்.ஜே.பாலாஜி

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..