Ken Karunas: யூத் பார்ட் 2 தனுஷ் சாரை வெச்சி எடுக்குறேனா?.. எனக்கு அவர பாத்தாலே பயம் – கென் கருணாஸ்!
Ken Karunas About Dhanush: கென் கருணாஸ் ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது ஹீரோவாக யூத் என்ற படத்தின் மூலம் களமிறங்கியுள்ளார். இந்நிலையில் யூத் படத்தின் பார்ட் 2 தனுஷை வைத்து இயக்குவதாக கேட்ட கேள்விக்கு, கென் கருணாஸ் சொன்ன பதில் குறித்து பார்க்கலாம்.

கென் கருணாஸ் மற்றும் தனுஷ்
தமிழில் நடிகர் மற்றும் அரசியல்வாதியாக இருப்பவர் கருணாஸ் (Karunas). இவர் ஆரம்பகாலகட்டத்தில் படங்களில் நாயகனாக நடித்துவந்த நிலையில், தற்போது முக்கிய வேடங்களில் நடித்துவருகிறார். இவரின் மகன் தான் கென் கருணாஸ் (Ken Karunas). இவர் சினிமாவில் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாகவும், படங்களில் சிறு சிறு வேடங்களிலும் நடித்துவந்தார். இந்நிலையில் தற்போது இவர் இயக்குநராகவும், கதாநாயகனாகவும் அறிமுகமாகியுள்ள படம்தான் யூத் (Youth). இதை கென் கருணாஸ் எழுதி இயக்கியுள்ள நிலையில், வித்தியாசமான காதல் கதையில் தயாராகியுள்ளது. இப்படத்தில் கென் கருணாஸுடன் ஜோடியாக சிறை பட நடிகை அனிஷிமா அனில்குமார் (Anishma Anilkumar) நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு ஜி.வி..பிரகாஷ் குமார் (GV. Prakash Kumar) இசையமைத்துள்ள நிலையில், வரும் 2026 மார்ச் 19ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியுள்ளது.
இதை முன்னிட்டு இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட கென் கருணாஸிடம், யூத் பார்ட் 2 (Youth Part 2) தனுஷை (Dhanush) வைத்து தேடுகிறீர்களா? என கேள்வி கேட்டது. அதற்கு அவர் கொடுத்த சுவாரஸ்ய பதில் குறித்து பார்க்கலாம்.
இதையும் படிங்க: சென்னையில் உள்ள வீட்டுற்குள் அனுமதிக்க விஜய் மறுக்கிறார் – நீதிமன்றத்தில் சங்கீதா மனு!
யூத் பார்ட் 2 படத்தை பற்றி கென் கருணாஸ் சொன்ன விஷயம் :
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட கென் கருணாஸிடம், “யூத் படத்தின் பார்ட் 2 படத்தில் தனுஷை வைத்து நீங்கள் இயக்குகிறீர்கள் என்ற எப்படி இருக்கும்? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கென் கருணாஸ், “அய்யயோ..எனக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்ல. அவ்வாறு தனுஷ் சாரை வைத்து படம் எடுக்கவேண்டும் என்றால் நான் இன்னும் நிறைய கத்துக்கணும்.
இதையும் படிங்க: எனது ஃபேஸ் க்ளோவிங்-காக இதை மறக்காமல் செய்வேன்.. ஜான்வி கபூர் சொன்ன பியூட்டி சீக்ரட்!
எனக்கு இந்த கேள்வியை கேட்கும்போது பயமாக இருக்கிறது. தனுஷ் சார் கிட்ட நான் பேசுவதற்கே பயப்படுவேன். உண்மையை சொல்லப்போனால் தனுஷ் சாரை வைத்து படம் இயக்கவேண்டும் என எனக்கு ஆசை இருக்கிறது. ஆனால், அதை கடவுளாக எப்போது நடத்துறாரோ அப்போது நடக்கட்டும்” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.
தனுஷ் குறித்து கென் கருணாஸ் பேசிய வீடியோ பதிவு:
What if KenKarunaas Direct #Youth Part-2 with #Dhanush 😂♥️ pic.twitter.com/eztW0nhb1A
— AmuthaBharathi (@CinemaWithAB) March 7, 2026
கென் கருணாஸ் ஏற்கனவே தனுஷுடன் அசுரன், வாத்தி போன்ற திரைப்படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். அதிலும் அசுரன் படத்தில் அவரின் 2வது மகன் வேடத்தில் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனுஷின் இயக்கத்தில் உருவாகியுள்ள படங்களில் உதவி இயக்குநராகவும் கென் கருணாஸ் பணியாற்றியுள்ளாராம். இது குறித்து அவரே பல நேர்காணலில் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.