Ken Karunas: யூத் பட கதை நல்லா இருக்குன்னு சொன்னாங்க.. ஆனா என்னை ஹீரோவா ஏற்றுக்கொள்ளல – கென் கருணாஸ் வேதனை!

Ken Karunas About Youth Movie: கென் கருணாஸின் யூத் படமானது வரும் 2026 மார்ச் 19ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் கதையை சொல்லும்போது, தயாரிப்பு நிறுவனங்கள் கூறியது மற்றும் தன்னை யாரும் ஹீரோவாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறித்த வேதனையை தெரிவித்துள்ளார்.

Ken Karunas: யூத் பட கதை நல்லா இருக்குன்னு சொன்னாங்க.. ஆனா என்னை ஹீரோவா ஏற்றுக்கொள்ளல -  கென் கருணாஸ் வேதனை!

கென் கருணாஸ்

Updated On: 

05 Mar 2026 15:02 PM

 IST

நடிகர் கென் கருணாஸ் (Ken Karunas), தமிழ் சினிமாவில் சிறுவயதிலே படங்களில் நடிக்க தொடங்கினார். இவர் நடிகர் கருணாஸின் (Karunas) மகன் என்ற நிலையில், தனது சிறுவயதிலே சினிமாவில் முக்கிய வேடங்களில் நடித்துவந்தார். இவரின் நடிப்பில் அழகு குட்டிச் செல்லம் என்ற படமானது நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து வாத்தி (Vaathi), அசுரன் (Asuran) மற்றும் விடுதலை பார்ட் 2 போன்ற திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். திரைப்படங்களில் வெறும் முக்கிய வேடங்களில் நடித்துவந்த இவர், தற்போது ஹீரோவாகவும், இயக்குநராகவும் நுழைந்துள்ள திரைப்படம்தான் யூத் (Youth). இப்படத்தில் கென் கருணாஸ், இயக்குநர், நடிகர் மற்றும் பாடகராகவும் பாடல்களைப் பாடியுள்ளார்.

இப்படமானது பள்ளிப்பருவ காதல் மற்றும் நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கை போன்ற கதையில் தயாராகியுள்ள நிலையில், வரும் 2026 மார்ச் 19ம் தேதியில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய கென் கருணாஸ், யூத் படத்தின் கதையை சொல்லும்போது தயாரிப்பு நிறுவனங்கள் கூறியது மற்றும் தன்னை ஹீரோவாக யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறித்த வேதனையை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தல இங்க! முண்டம் எங்க? விஜய் சேதுபதியின் காட்டான் படத்திலிருந்து வெளியானது நியூ போஸ்டர்

யூத் படத்தின் தயாரிப்பு மற்றும் தான் பட்ட கஷ்டங்கள் குறித்து கென் கருணாஸ் பேச்சு:

அண்ட் நேர்காணலில் பேசிய கென் கருணாஸ், “உண்மையை சொல்லவேண்டும் என்றா, நான் யூத் பட கதையை பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு சொன்னேன். கதை நல்ல இருக்குனு எல்லாருமே சொன்னாங்க, ஆனால் என்னை ஹீரோவாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஏன் என எனக்குக் கூட தெரியல. சிலர் என்னோட பட்ஜெட் கொடுக்க முடியாதுனு சொன்னாங்க, சிலர் வேற ஹீரோக்களை வைத்து பண்ணலன்னு சொன்னாங்க.

இதையும் படிங்க: பவன் கல்யாணின் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்… உஸ்தாத் பகத் சிங் படத்தின் நியூ ரிலீஸ் தேதி இதோ

ஆனாலும் எனக்கு நம்பிக்கை இருந்தது. வேறு எங்கேயும் இருந்து ஆதரவு கிடைக்கல. ஜி.வி. பிரகாஷ் அண்ணா, இந்த படத்தின் இசையமைப்பிற்காக சம்பளமே வாங்கல. ஏன்னா ஒரு புது ஹீரோவிற்கு படத்தின் பட்ஜெட் அதிகமாக இருந்துச்சி. ஆனா அவர் என்னிடம், “எதுவா இருந்தாலும் நாங்க செய்வோம் என சொன்னாரு. அவருக்கு நான் எப்போதும் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன்” என கென் கருணாஸ் தெரிவித்திருந்தார்.

யூத் திரைப்படம் குறித்து கென் கருணாஸ் பகிர்ந்த எக்ஸ் பதிவு:

இந்த யூத் திரைப்படமானது 2026 மார்ச் 19ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்துடன் தமிழில் வேறு இந்தத் படமும் வெளியாகவில்லை. இப்படத்துடன் யாஷின் டாக்ஸிக் மற்றும் துரந்தர் 2 போன்ற படங்கள் வெளியாகவிருந்த நிலையில், போர் பதற்றம் காரணமாக டாக்ஸிக் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழில் சோலோவாக யூத் படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
Related Stories
வாட்ஸ்அப், டெலிகிராம் செயல்பாடுகளில் அதிரடி மாற்றம்.. இந்தியாவில் அமலுக்கு வந்தது..
துபாய், தோஹா, பஹ்ரைனில் ஈரான் தொடர் ஏவுகணைத் தாக்குதல்.. அமெரிக்கத் தளங்கள் இலக்கு!
ஐதராபாத் - ஈரான்.. பல நூற்றாண்டுகளைக் கடந்த கலாச்சார பந்தம்..
ஒவ்வொரு லைக்கிற்கும் ஒருமுறை ஸ்கிப்பிங் செய்வேன்... 1.8 மில்லியன் லைக்குகளை பெற்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி