10 நாட்கள் கடுமையான வலியில் துடித்தேன்.. கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி வெளியிட்ட வீடியோ!

Kayal Serial Chaitra Reddy: தமிழில் பிரபல சீரியல் நடிகையாக இருந்துவருபவர் சைத்ரா ரெட்டி. இவர் சன் தொலைக்காட்சியில் கயல் என்ற சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். அந்த வகையில் இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்ட நிலையில், ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

10 நாட்கள் கடுமையான வலியில் துடித்தேன்.. கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி வெளியிட்ட வீடியோ!

சைத்ரா ரெட்டி

Updated On: 

21 Apr 2026 19:20 PM

 IST

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருந்துவருவது சன் டிவி (Sun TV). இந்த டிவியில் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மட்டுமில்லாமல் சீரியல்களை தொடர்ந்து வெளியாகிவருகிறது. அந்த விதத்தில் இந்த தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான சீரியலில் ஒன்றாக இருந்துவருவதுதான் கயல் (Kayal). இந்த கயல் சீரியலில் நாயகியாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர் நடிகை சைத்ரா ரெட்டி (Chaitra Reddy). இவர் சின்னத்திரை சீரியல்களை கடந்து சில படங்களிலும் நடித்துள்ளார். இவ்வாறு தொடர்ந்து சினிமா ஏமாற்றும் சீரியலிலும் தனது கவனத்தை செலுத்திவருகிறாரா. இவர் நடித்துவரும் கயல் சீரியல்தான், சன் டிவியில் அதிகம் டிஆர்பியில் உள்ள சீரியல் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் நடிகை சைத்ரா ரெட்டி, இந்த சீரியலின் லீட் நாயகியாக இருக்கும் நிலையில், தமிழ் மக்கள் மத்தியில் இவருக்கு பிரபலம் அதிகம். அந்த விதத்தில் இவர் சமூக ஊடகங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருந்துவருகிறார். இந்நிலையில், இவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவிவருகிறது.

இதையும் படிங்க: அலப்பறை கிளப்புறோம்… தலைவரு நிரந்தரம்… ஷூட்டிங்கை நிறைவு செய்தது ஜெயிலர் 2 படக்குழு

நடிகை சைத்ரா ரெட்டி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவு:

இந்த வீடியோவில் நடிகை சைத்ரா, தனது மேல் காது குத்தியுள்ளார். புதிதாக அவர் மேல் காது குத்தியிருந்த நிலையில், அவர் காது குத்தும்போது எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் கீழ் அவர், “நிஜம்தான், இது குணமாக கிட்டத்தட்ட 10 நாட்கள் ஆனது. ஆனலும் அது வேடிக்கையாக இருந்தது” என அவர் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் கீழ் நடிகை சைத்ரா ரெட்டியின் ரசிகர்களும் தங்களின் கருத்துக்களை தெரிவித்துவருகிறார்கள்.

இதையும் படிங்க: சீரியல் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. விஜய் டிவியில் புதிதாக வரும் தாய் மாமன் சீரியல்! வெளியாகும் நாள், நேரம் தெரியுமா?

நடிகை சைத்ரா ரெட்டி கர்நாடகாவில் பிறந்தவர். இவர் ரக்கெட் என்ற கன்னட படத்தில் லீட் நடிகையாக நடித்துள்ளார். மேலும் 2014ம் ஆண்டு தொடக்கத்தில் அவுனு மாதே ஷர்வானி என்ற கன்னட சீரியலில் நடித்துள்ளார். மேலும் இவருக்கு தமிழில் முதல் சீரியலாக அமைந்தது கல்யாணம் முதல் காதல் வரை. இதில் நடிகை பிரியா பவனி ஷங்கர் நடித்த வேடத்தில் இவர் நடித்திருந்தார்.

பின் ஜீ தமிழில் வெளியான யாரடி நீ மோகினி என்ற சீரியலில் வில்லியாக நடித்திருந்தார். அந்த வகையில் இவர் அஜித் குமாரின் வலிமை படத்திலும் சிறு வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது முழுவதுமாக கயல் என்ற சீரியலில் லீட் நாயகியாக நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..