Pallichattambi: கயாடு லோஹரின் ‘பள்ளிச்சட்டம்பி’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Kayadu Lohar Pallichattambi First Look: தென்னிந்திய சினிமாவில் இளம் கதாநாயகியாக படங்களில் நடித்து அசத்திவருபவர் கயாடு லோஹர். இவர் மலையாளத்தில் நடிகர் டோவினோ தாமஸுக்கு ஜோடியாக பள்ளிச்சட்டம்பி என்ற படத்தில் நடித்துள்ள நிலையில், இதிலிருந்து கயாடு லோஹரின் முதல் பார்வை வெளியாகியுள்ளது.

Pallichattambi: கயாடு லோஹரின் பள்ளிச்சட்டம்பி பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

கயாடு லோஹரின் பள்ளிச்சட்டம்பி

Updated On: 

02 Feb 2026 15:19 PM

 IST

நடிகை கயாடு லோஹர் (Kayadu Lohar) தமிழ் சினிமாவில் பிரபலம் மிக்க நடிகைகளில் ஒருவராக இருந்துவருகிறார். கடந்த 2025ம் ஆண்டு வெளியான டிராகன் (Dragon) என்ற திரைப்படத்தில் பல்லவி என்ற கதாபாத்திரத்தில் நடித்து, ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருந்தார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு (Pradeep Ranganathan) ஜோடியாக நடித்து, லியோன் ஜேம்ஸ் இசையமைப்பில் வெளியான “வழித்துணையே” என்ற பாடலின் மூலமாக பேமஸானார். அந்த வகையில் இவருக்கு தற்போது தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்துவருகிறது. மேலும் இவர் ஏற்கனவே மலையாளத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டு (Pathonpatham Noottandu) (2022) என்ற படத்தில் படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமாகியிருந்தார். இப்படத்தை அடுத்ததாக இவர் நடித்துள்ள இரண்டாவது மலையாள திரைப்படம்தான் பள்ளிச்சட்டம்பி (Pallichattambi). இப்படத்தில் இவர் டோவினோ தாமஸுக்கு (Tovino Thomas) ஜோடியாக நடித்துள்ளார்.

இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. இந்நிலையில் தற்போது இப்படத்திலிருந்து கயாடு லோஹரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இது தற்போது அவரின் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவிவருகிறது.

இதையும் படிங்க: தவெக 3-ம் ஆண்டு விழாவில் சர்ப்ரைஸாக டான்ஸ் ஆடிய விஜய்… வைரலாகும் வீடியோ

டோவினோ தாமஸ் வெளியிட்ட கயாடு லோஹரின் பள்ளிச்சட்டம்பி பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பதிவு:

டோவினோ தாமஸின் பள்ளிச்சட்டம்பி படத்தின் ரிலீஸ்:

டோவினோ தாமஸின் இந்த படமானது கிட்டத்தட்ட 90-களில் நடக்கும் ஆக்ஷன் டிராமாவாக உருவாகியுள்ளது. இப்படத்தில் நடிகை கயாடு லோஹரின் கதாபாத்திரமும் மிக முக்கிய கதாபாத்திரமாகவே அமைந்துள்ளது. இப்படத்தை பிரபல மலையாள இயக்குநரான டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்க, இதன் கதையை சுரேஷ் பாபு என்பவர் எழுதியுள்ளார். இப்படத்தில் டோவினோ தாமஸ் மற்றும் கயாடு லோஹருடன், நடிகர் விஜயராகவனும் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: ஜெயிலர் 2 படத்தில் தனது போர்ஷனை நடித்து முடித்த நடிகர் ரஜினிகாந்த் – வைரலாகும் தகவல்

மேலும் இப்படத்திற்கு லோகா திரைப்படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு இறுதியிலே நிறைவடைந்த நிலையில், ரிலீஸிற்காக மிக பிரம்மாண்டமாக தயாராகிவருகிறது. அந்த வகையில் இப்படத்தை வரும் 2026 ஆண்டு ஏப்ரல் 9ம் தேதியில் படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் இப்படம் டோவினோ தாமஸுக்கு சூப்பர் ஹிட் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.15 லட்சம் செலவுசெய்து வளரப்பு நாயை ஆஸ்திரேலியா கொண்டு சென்ற இந்திய தம்பதி
அசாமில் 80 மீட்டர் பாலத்தை உருவாக்கிய அசாம் இளைஞர்
மரணத்திற்குப் பின்னும் வாழ்க்கை உண்டா? மரணத்தை வெல்ல நிபுணர்கள் முயற்சி
உருவாகிறது ரஜினிகாந்தின் பயோபிக்.. இணையும் தனுஷ் - ஐஸ்வர்யா?.. வந்தது குட்நியூஸ்!!