விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன கவின் – என்ன காரணம் தெரியுமா?

Actor Kavin: சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து பின்பு சீரியல்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலம் ஆன நடிகர் கவின் தற்போது வெள்ளித்திரையில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக வலம் வருகிறார். இந்த நிலையில் இவர் தற்போது நடிகர் விஜய் சேதுபதிக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன கவின் - என்ன காரணம் தெரியுமா?

விஜய் சேதுபதி, கவின்

Published: 

14 Sep 2025 16:03 PM

 IST

சின்னத்திரையில் தொகுப்பாளர், சீரியல் நடிகர், பிக்பாஸ் போட்டியாளர் என தொடர்ந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் நடிகர் கவின் (Actor Kavin). சின்னத்திரையில் நடித்தபோதே தமிழக ரசிகர்களிடையே பிரபலமானவராக மாறினார் கவின். அதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் நடிகர் கவின் நடித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான நட்புனா என்னன்னு தெரியுமா என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார் நடிகர் கவின். இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு வெளியான படம் லிஃப்ட். இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் வெளியான நிலையில் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

கொரோனா காலத்தில் இந்தப் படம் உருவானதால் நேரடியாக ஓடிடியில் வெளியானது. ஆனால் இந்தப் படம் தியேட்டரில் வெளியாகி இருந்தல் சிறப்பாக இருந்து இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து நடிகர் கவின் நடிப்பில் வெளியான டாடா, ஸ்டார் மற்றும் ப்ளடி பெக்கர் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படங்கள் கவினை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகர்களின் பட்டியளில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி குறித்து நெகிழ்ந்து பேசிய கவின்:

இந்த நிலையில் நடிகர் கவின் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் கிஸ். டான்ஸ் மாஸ்டர் சதீஸ் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகியுள்ளார். படம் வருகின்ற 19-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது.

இந்த நிலையில் இந்தப் படத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளதாகவும் அதற்கு நன்றி தெரிவித்து நடிகர் கவின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Also Read… டான்ஸ் கோரியோவில் அந்த விசயம் மிகவும் பிரஷரா இருக்கு – சாண்டி மாஸ்டர்!

நடிகர் கவின் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… துணிவு படம் எனது சினிமா வாழ்க்கையே மாற்றியது – இயக்குநர் எச். வினோத்