Kavin : பிளடி பெக்கர் படத்துக்கு வரவேற்பு இல்லை.. வருத்தமாக இருந்தது- கவின் வேதனை!

Kavin About Bloody Beggar Movie Failure: தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகரான கவினின் நடிப்பில் வெளியாகி தோல்வியடைந்த படம் பிளடி பெக்கர். இந்த படத்தின் தோல்வி குறித்து நடிகர் கவின் வருத்தம் தெரிவித்து பேசியிருக்கிறார். அது பற்றி விவரமாக பார்க்கலாம்.

Kavin : பிளடி பெக்கர் படத்துக்கு வரவேற்பு இல்லை.. வருத்தமாக இருந்தது- கவின் வேதனை!

கவின் ராஜ்

Updated On: 

16 Sep 2025 19:18 PM

 IST

நடிகர் கவின் (Kavin) நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில், இந்த 2025 ஆம் ஆண்டு வெளியாக காத்திருக்கும் படம் கிஸ் (Kiss). இந்த படத்தை பிரபல நடன இயக்குநரான சதீஷ் கிருஷ்ணன் (Sathish Krishnan) இயக்கியிருள்ளர். இந்த படமானது ரொமாண்டிக் காமெடி படமாக உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக அவருடன் நடிகை ப்ரீத்தி அஸ்ரானி (Preethi Asrani) நடித்திருக்கிறார். இந்த கிஸ் படமானது வரும் 2025 செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட கவின், தனது நடிப்பில் கடந்த 2024ம் ஆண்டில் வெளியான பிளெடி பெக்கர் தோல்வியடைந்தது குறித்து மனம்திறந்துள்ளார். அவர் பேசியது பற்றி தெளிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : அந்த படத்தில் ஒரு பகுதியாக இருக்கவேண்டும்.. தனது ஆசையை தெரிவித்த பிரியங்கா மோகன்!

தனது படம் தோல்வி குறித்து நடிகர் கவின் பேசிய விஷயம் :

அந்த நேர்காணலில் நடிகர் கவின் பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். தொடர்ந்து பேசிய அவரிடம் தொகுப்பாளர், கடந்த 2024ம் ஆண்டில் கவினின் நடிப்பில் வெளியான படங்களை பற்றி கேள்விகளை கேட்டிருந்தார். அதற்கு நடிகர் கவின், ” ஸ்டார் படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது, மேலும் படங்களுக்கு வசூலும் மிக முக்கியம். அப்போதான் தயாரிப்பாளரின் மகிழ்ச்சிதான் நமக்கும் மகிழ்ச்சி. அந்த விஷயத்தில் ஸ்டார் படம் ஓகேதான், தயாரிப்பாளர் ஹேப்பி.

இதையும் படிங்க : கோவா படத்தில அந்த கதாப்பாத்திரம் ரொம்ப பிடிச்சு செஞ்சேன் – நடிகர் சம்பத் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்

பிளடி பெக்கர் படத்தில் நான் அதிகமாக எதிர்பார்த்தேன். அந்த படத்தின் வரவேற்பை பார்க்கும்போதுதான் கொஞ்சம் சங்கடமாக இருந்தது. என்னையும் தாண்டி அந்த படத்தில் நிறைய பேருக்கு நல்லது நடக்கும் என நினைத்தேன், அதெல்லாம் மிஸ்ஸானது. பிளடி பெக்கர் படத்தை மட்டும் பற்றி பேசவேண்டும் என்றால் எனக்கு தெரிந்து, ரசிகர்களின் ரசனையில் குறை சொல்லமுடியாது” என நடிகர் கவின் பிளடி பெக்கர் பட தோல்வி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இந்த தகவலானது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

கிஸ் படத்தின் பாடல் குறித்து கவின் வெளியிட்ட எக்ஸ் பதிவு :

கவின் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானியின் கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்த கிஸ் படமானது, வரும் 2025 செப்டம்பர் 19ல் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படமானது கவினுக்கு வெற்றி படமாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.