தக் லைஃப் படத்தைப் வெகுவாகப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ் – வைரலாகும் பதிவு

Director Karthik Subbaraj: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குநர் கர்த்திக் சுப்பராஜ். இவர் நேற்று கமல் ஹாசன் நடிப்பில் வெளியான தக் லைஃப் படத்தைப் பார்த்துவிட்டு தனது வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் படக்குழுவினருக்கு எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

தக் லைஃப் படத்தைப் வெகுவாகப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ் - வைரலாகும் பதிவு

கார்த்திக் சுப்பராஜ்

Published: 

06 Jun 2025 21:19 PM

கோலிவுட் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட இயக்குநர்களில் ஒருவர் கார்த்திக் சுப்பராஜ் (Director Karthik Subbaraj). இவர் நேற்று நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் ஜூன் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரயரங்குகளில் வெளியான தக் லைஃப் படத்தை பார்த்துவிட்டு தனது கருத்தை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் சிலம்பரசனும் நாயகனாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் அசோக் செல்வன், நாசர், ஜோஜூ ஜார்ஜ், வையாபுரி மற்றும் நடிகைகள் த்ரிஷா கிருஷ்ணன், ஐஸ்வர்யா லட்சுமி, சான்யா மல்கோத்ரா, அபிராமி என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேறபைப் பெற்று வரும் நிலையில் பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

தக் லைஃப் படத்தை பார்த்து புகந்து தள்ளிய கார்த்திக் சுப்பராஜ்:

தக் லைஃப் படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்களும் பிரபலங்களும் தங்களது வாந்துகளையும் கருத்துகளையும் சமூக வலைதளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, தக் லைஃப் படத்தில் பெரும்பாலான காட்சிகளில் மணி சாரின் அதிர்வைக் கண்டேன் ரசித்தேன்.

மணிரத்னம் சார் விண்டேஜ் ட்ராமாக்களின் மாஸ்டர். மேலும் நடிகர் கமல் ஹாசன் சாரின் நடிப்பு வழக்கம் போலதான் இதுவும் ஒரு தலைசிறந்த படைப்பாக அமைந்துள்ளது. தொடர்ந்து சிலம்பரசன் மற்றும் அனைத்து நடிகர்களின் நடிப்பும் மிகவும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பாடல்களை செதுக்கியுள்ளார் என்றும் கார்த்திக் சுப்பராஜ் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

தக் லைஃப் படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி ரசிகர்களிடையே வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு பெரிய படங்கள் எதுவும் வெளியாவதாக இதுவரை அறிவிப்பு இல்லாததால் தக் லைஃப் இரண்டு வாரங்களுக்கு நிச்சயமாக ஓடும் என்று தெரிவிக்கப்படுகின்றது.