லவ்வர் படத்தில் என் கதாப்பாத்திரத்திற்கு வந்த ரிவியூ ரொம்ப கஷ்டமா இருந்துச்சு – கண்ணா ரவி பேட்டி
Actor Kanna Ravi: சமீபத்தில் கோலிவுட் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வரும் படம் கூலி. இதில் நடிகர் நாகர்ஜுனாவின் மகனாக நடித்த நடிகர் கண்ணா ரவி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

கண்ணா ரவி
தற்போது தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடியே அதிக வரவேற்பைப் பெற்று வரும் படம் கூலி. இந்தப் படத்தில் நடித்த நடிகர்களின் நடிப்பு ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதில் அதிக ட்ரோல்களைப் பெறுவது நடிகர் நாகர்ஜுனாவின் மகனாக நடித்த கண்ணா ரவிதான் (Actor Kanna Ravi). நாகர்ஜுனாவின் சைமன் கதாப்பாத்திரத்தை ரசிகர்கள் குறிப்பாக ரசிகைகள் அதிகம் வரவேற்று வரும் நிலையில் அவரது மகனாக அர்ஜுன் சைமன் கதாப்பாத்திரத்தில் நடித்த கண்ணா ரவியை மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் ரசிகர்கள். இந்தப் படத்தில் காதலால் ஏமாறும் கதாப்பாத்திரமாக நடிகர் கண்ணா ரவி நடித்து இருப்பார். அவரை அந்த காதலில் இருந்து காப்பாற்றிவிட்டு நடிகர் ரஜினிகாந்த் அவரிடம் கூறிய “ஏமாந்துட்டோம்னு நினைக்காத தப்பிச்சோட்டும்னு நினச்சுக்கோ” என்று கூறிய வசனம் தியேட்டரில் ஆராவரார வரவேற்பைப் பெற்றது.
ஆனால் அதனை ரஜினிகாந்த் கூறி சென்ற சிறிது நேரத்திலேயே அவர் மீண்டும் அதே வேலையை செய்து படத்தில் உயிரிழந்துவிடுவார். இதானல் ரசிகர்கள் அவரை மிகவும் ட்ரோல் செய்து வருகின்றனர். இதனை தங்களது சொந்த வாழ்க்கையில் சம்பந்தப்படுத்தியும் பல மீம்ஸ்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
லவ்வர் படம் குறித்து மனம் திறந்து பேசிய கண்ணா ரவி:
கூலி படத்தில் தனது கதாப்பாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பு நடிகர் கண்ணா ரவிக்கு மகிழ்ச்சி அளிப்பதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார். மேலும் ரசிகர்கள் அவரின் கதாப்பாத்திரத்திற்கு மீம்ஸ்களை போடுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.
தொடர்ந்து பேசிய அவர் லவ்வர் படத்தில் அவரது கதாப்பாத்திரத்தை புரிந்துகொள்ளாமல் ரசிகர்கள் அவரை பாய் பெஸ்டி என ட்ரோல் செய்தது அவருக்கு மிகுந்த வேதனையை கொடுத்ததாக அவர் தெரிவித்து இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் ரசிகர்களிடையே வைர்லாகி வருகின்றது.