ராவோடு ராவா கோட்டையில உக்காந்துட்டு புதுபுது சட்டம் போடுவீங்க, தூங்கி எழுந்து பாத்தா நாங்க குற்றவாளியா? – தண்டகாரண்யம் படத்தின் ட்ரெய்லர் இதோ!
Thandakaaranyam Movie Trailer | நடிகர்கள் கலையரசன் மற்றும் தினேஷ் இருவரும் முன்னணி வேடத்தில் நடித்துள்ள படம் தண்டகாரண்யம். இந்தப் படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.

தண்டகாரண்யம்
இயக்குநர் அதியன் ஆதிரை (Director Athiyan Athirai) இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் தண்டகாரண்யம். இந்தப் படத்திற்கு இவர்தான் திரைக்கதை எழுதியுள்ளார். கோல்வுட் சினிமாவில் வெளியான இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு படத்தை 2019-ம் ஆண்டு வெளியான படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் தினேஷ் நாயகனாக நடித்து இருந்தார். படம் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கியுள்ள படம் தண்டகாரண்யம். இந்தப் படத்தில் நடிகர் கலையரசன் (Actor Kalaiyarasan) நாயகனாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து நடிகர் தினேஷ் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ரித்விகா, வின்சு சாம், ஷபீர் கல்லரக்கல், பால சரவணன், அருள்தாஸ், சரண்யா ரவிச்சந்திரன், யுவன் மயில்சாமி என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். மேலும் படத்தை இயக்குநர் பா ரஞ்சித் தனது நீலம் புரடெக்ஷன் சார்பாக தயாரித்துள்ள நிலையில் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
வெளியானது கலையரசனின் தண்டகாரண்யம் படத்தின் ட்ரெய்லர்:
இந்தப் படம் வருகின்ற 19-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவான இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லரை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.
மலை கிராமத்தில் வாழும் கலையரசன் போலீஸ் ட்ரெய்னிங் செல்லும் இடத்தில் பல இன்னல்களை சந்திக்கிறார். அதனைத் தொடர்ந்து என்ன நடக்கிறது என்பது ட்ரெய்லரில் காட்டப்படுகின்றது. இந்தப் படம் ஒடுக்கப்படும் சமூகத்திற்கும் அதிகாரத்திற்கும் இடையே நடக்கும் பிரச்னையை மையமாக வைத்து வெளியாக உள்ளது ட்ரெய்லரைப் பார்க்கும் போது தெரிகிறது.
Also Read… நடிகை திஷா பதானி வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை மிரட்டல்
தண்டகாரண்யம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
The lives in the forest of #Thandakaaranyam will open our eyes to many buried truths 🔥
Watch the powerful #ThandakaaranyamTrailer 🔗 https://t.co/9AAElwdOxN #ThandakaaranyamFromSept19 #தண்டகாரண்யம்
🎫 https://t.co/Ui6c6a94HP @beemji @LearnNteachprod @AthiraiAthiyan pic.twitter.com/b0CYtIuq5I
— Neelam Productions (@officialneelam) September 14, 2025
Also Read… ‘பிக்பாஸ் சீசன் 9’ நிகழ்ச்சி எப்போது தொடங்குகிறது? வெளியான அறிவிப்பு இதோ!