நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, சாய் பல்லவி, மணிகண்டனுக்கு கலைமாமணி விருது அறிவிப்பு

Kalaimamani Award Winners: தமிழக அரசின் சார்பில் கலை துறையில் உள்ளவர்களை கவுரவிக்கும் விதமாக வழங்கப்படும் விருது தான் கலைமாமணி விருது. இந்த நிலையில் 2021-ம் ஆண்டு, 2022-ம் ஆண்டு, 2023-ம் ஆண்டிற்கான விருது வென்ற நபர்களின் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, சாய் பல்லவி, மணிகண்டனுக்கு கலைமாமணி விருது அறிவிப்பு

எஸ்.ஜே.சூர்யா, சாய் பல்லவி, மணிகண்டன்

Published: 

24 Sep 2025 11:11 AM

 IST

தமிழக அரசின் சார்பில் இயல், இசை மற்றும் நாடகம் உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்து விளங்குவபர்களுக்கு வழங்கப்படும் விருது தான் கலைமாமணி விருது (Kalaimamani Award). ஒவ்வொரு ஆண்டும் தமிழ் சினிமாவில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி கடந்த 1954-ம் ஆண்டு முதல் இந்த விருது திரைத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி தற்போது 2021-ம் ஆண்டு, 2022-ம் ஆண்டு மற்றும் 2024-ம் ஆண்டு திரைத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு தற்போது கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நடிப்பு, இயக்கம் மற்றும் இசை ஆகிய பிரிவுகளில் உள்ள பிரபலங்களுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரபல பாடகர் கே.ஜே.ஏசுதாஸிற்கு (Singer KJ Yesudas) எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2021, 2022 மற்றும் 2023-ம் ஆண்டிற்கான இந்த விருது வழங்கும் விழா வருகின்ற அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்த விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் வழங்கப்பட உள்ளது. மேலும் இந்த கலைமாமணி விருது வென்றவர்களுக்கு தங்கப் பதக்கம் மற்றும் கேடயம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… சக்திமான் படத்திற்காக பேசில் ஜோசப் 2 வருசம் காத்திருந்தார் – அனுராக் காஷ்யப்

கலைமாமணி விருது பெரும் திரைக்கலைஞர்களின் பட்டியல்:

அதன்படி கடந்த 2021-ம் ஆண்டிற்கான கலைமாமணி விருது வென்றவர்களின் பட்டியலில் நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா மற்றும் சாய் பல்லவி, மற்றும் திரைப்பட இயக்குனர் என். லிங்குசாமி ஆகியோர் உள்ளனர். அதனைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டிற்கான விருது வென்றவர்களின் பட்டியலில் நடிகர் விக்ரம் பிரபு, பாடலாசிரியர் விவேகா ஆகியோரும், 2023-ம் ஆண்டிற்கான விருது வென்றவர்களின் பட்டியளில் நடிகர்கள் மணிகண்டன் மற்றும் ஜார்ஜ் மரியான், இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன், பாடகி ஸ்வேதா மோகன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி ஆகியோருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read… ஃபீல் குட் படம் பார்க்க நினைக்கிறீங்களா? அப்போ நெட்ஃபிளிக்ஸில் இந்த கிலோமீட்டர்ஸ் அண்ட் கிலோமீட்டர்ஸ் படத்தை பாருங்க