Radhika Apte: ஷூட்டிங் தளத்தில் நான் மட்டும்தான் பெண்.. என்னிடம் அதை செய்த சொன்னது மிகவும் அசௌகரியமாக இருந்தது- ராதிகா ஆப்தே ஓபன் டாக்!
Radhika Apte About South Indian Cinema: நடிகை ராதிகா ஆப்தே, தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து படத்தில் நடித்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், தென்னிந்திய சினிமாவில் ஷூட்டிங்கின்போது அவருக்கு நடந்த அசௌகரியமான விஷயம் குறித்து மனம்திறந்துள்ளார்.

ராதிகா ஆப்தே
நடிகை ராதிகா ஆப்தே (Radhika Apte) தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் கதாநாயகியாக நடித்து அசத்தியுள்ளார். இவர் தமிழகத்தில் பிறந்திருந்தாலும், இவர் ஒரு மராத்திய குடும்பத்தை சேர்ந்தவர். தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும், அந்த படங்கள் எல்லம் சூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது. இந்தியில் நடிகையாக நுழைந்த இவர், அதனை தொடர்ந்து தென்னிந்திய மொழிகளிலும் நடிக்க தொடங்கியிருந்தார். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) கபாலி (kabali), கார்த்தியுடன் (Karthi) ஆல் இன் ஆல் அழகுராஜா (All in All Azhagu Raja) போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் இவருக்கு மக்களிடையே பிரபலமும் கிடைத்திருந்தது. அதை தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு சினிமாவின் பக்கம் தனது கவனத்தை செலுத்தினார். ஆனாலும் அவ்வப்போது சில தமிழ் படங்களிலும் நடித்துவந்தார். அந்த வகையில் இவர் இறுதியாக கடந்த 2019ம் ஆண்டில் வெளியான சித்திரம் பேசுதடி 2 படத்தில் நடித்திருந்தார்.
அதை அடுத்தாக தமிழில் பெரியளவில் எந்த படங்களிலும் இவர் கதநாயகியாக நடிக்கவில்லை. மேலும் இவர் தற்போது வெப் தொடர்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டிவருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ராதிகா ஆப்தே, தென்னிந்திய சினிமாவில் படத்தில் நடிக்கும்போது தனக்கு நடந்த அசோகாரியமான விஷயம் குறித்து மனம் திறந்துள்ளார்.
இதையும் படிங்க: மணி ரத்தினத்துடன் இணையும் விஜய் சேதுபதி- சாய் பல்லவி… படத்தின் ஷூட்டிங் எப்போது தெரியுமா?
தென்னிந்திய சினிமாவில் தனக்கு நடந்த அசோகாரியம் குறித்து பேசிய ராதிகா ஆப்தே:
அந்த நேர்காணலில் நடிகை ராதிகா ஆப்தே, “தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து அருமையாக திரைப்படங்கள் வருகிறது. இருப்பினும் தென்னிந்திய சினிமாவில் நான் நடித்த படங்களில்ன் ஷூட்டிங்கின்போது சில கஷ்டங்களை மேற்கொண்டிருக்கிறேன். அந்த படத்தின் ஷூட்டிங்கில் நான் மட்டும்தான் பெண். அப்போது ஒரு கிராமத்தில் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தது. அந்த படத்தின் ஷூட்டிங்கின்போது என்னிடம் எனது மார்பகத்திலும், பின்பக்கத்திலும் பேடிங் பண்ண சொன்னார்கள். “அம்மா இன்னும் கொஞ்சம் அதிகமாக பேடிங் வைங்கன்னு” என்னிடம் சொன்னார்கள்.
இதையும் படிங்க: அரசன் பட ஷூட்டிங்கில் விஜய் சேதுபதி… தயாரிப்பாளர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு
நான் உடனே உதவியாளர்களை அழைத்து உங்கள் வீட்டில் உள்ள பெண்கள் இவ்வளவு அதிகமாக பேடிங் வைப்பார்களா? என கேட்டேன். ஒரு உடம்பை எவ்வாறு காட்டவேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள் என தெரியவில்லை. நான் உடனே அவர்களிடம் சொல்லிவிட்டேன் என்னால் எல்லாம் அதை வைக்கமுடியாது என்று, மேலும் அந்த ஷூட்டிங்கில் நான் மட்டும்தான் பெண். எனக்கு அப்போது மேனேஜர் கிடையாது, ஏஜென்ட் கிடையாது நான் ஒரு தனி பெண். என்னை சுற்றியுள்ள படக்குழு அனைவருமே ஆண்களாகத்தான் இருந்தார்கள்” என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் ஷூட்டிங் அனுபவம் குறித்த ராதிகா ஆப்தே பேசிய வீடியோ :
Radhika Apte praises South Indian cinema for consistently delivering strong films. However she also recalls an uncomfortable experience where she was the only woman on set & was asked to add padding to her bum & breasts.
All in All Azhagu Raja or Kabali?🙃pic.twitter.com/adriBIxCMu
— KARTHIK DP (@dp_karthik) December 20, 2025
தற்போது நடிகை ராதிகா ஆப்தே பேசியது தொடர்பான வீடியோ தமிழ் மக்களிடையே வைரலாகிவருகிறது. இவர் தெலுங்கை ஒப்பிடும்போது தமிழ் படங்களில் அதிகம் நடித்துள்ளார். அந்த வகையில் இவர் நடித்த ஆல் இன் ஆல் அழகுராஜா படத்திலா? அல்லது கபாலி படத்தில் இந்த சம்பவம் நடந்தா? என ரசிகர்களிடையே கேள்விகள் எழும்பியுள்ளது.