இந்த கமல் படத்தின் டைட்டில் ரஜினி சொன்னது – வெளியான ஆச்சரிய தகவல்
படையப்பா படம் எடுத்து முடிக்கப்பட்டபோது 4.30 மணி நேர படமாக இருந்திருக்கிறது. எவ்வளவோ முயன்றும் படத்தின் காட்சிகளை குறைக்க முடியவில்லை. இதனையடுத்து அப்படியே 2 இடைவேளைகளுடன் திரையரங்குகளில் வெளியிடலாம் என ரஜினி முடிவெடுத்திருக்கிறார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட கமல், அது படத்தின் வசூலை பாதிக்கும் என 2.30 மணி நேர படமாக குறைக்குமாறு சொல்ல அன் பிறகே ரஜினி சம்மதித்திருக்கிறார்.

கமல்ஹாசன் - ரஜினிகாந்த்
ஓடிடி, சோஷியல் மீடியா இல்லாத அந்த காலகட்டத்திலேயே பான் இந்தியன் ஸ்டார்களாக ஜொலித்தவர்கள் ரஜினிகாந்த் (Rajinikanth) – கமல்ஹாசன் (Kamal Haasan). அவர்களது படங்களுக்கு தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகும். மேலும் அவர்கள் நேரடி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கிறார்கள். திரையுலகின் ஆரம்ப காலகட்டத்தில் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார்கள். இருவரும் சேர்ந்து நடித்தால் தாங்கள் இருவரும் வளர முடியாது என கமல் சொல்ல, இனி இணைந்து நடிப்பதில்லை என முடிவெடுத்ததாக ரஜினி ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். அதன் பிறகு தனித்தனியாக நடிக்கத் தொடங்கியபோது இருவருக்கும் தொழில் போட்டி உருவானது. ரஜனியா, கமலா என ரசிகர்களும் மோதிக்கொள்ள துவங்கினர்.
வெளியில் இருந்து பார்த்தால் இருவரும் எதிரிகள் போல தோன்றினாலும் இருவரும் நல்ல நட்புடனே பழகி வந்திருக்கின்றனர். அதனை இருவருடனும் பணியாற்றிய இயக்குநர்கள் பலர் தெரிவித்திருக்கின்றனர். இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் முள்ளும் மலரும் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்துகொண்டிருக்கிறார். தயாரிப்பாளருக்கும் தனக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படப்பிடிப்புக்கு பணம் தர அவர் மறுத்திருக்கிறார். இந்தப் படம் உருவாக ஆரம்புள்ளியாக இருந்தவர் கமல் தான் என்பதால், கமல் தயாரிப்பாளரிடம் எவ்வளவோ பேசியும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதனையடுத்து தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சார்பாக படப்பிடிப்புக்கு பண உதவியும் கேமரா போன்ற உபகரணங்களையும் வழங்கியிருக்கிறார். அந்தப் படம் ரஜினிகாந்த்தின் திரையுலக பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது.
ரஜினிக்கு கமல் சொன்ன அறிவுரை
படையப்பா படம் எடுத்து முடிக்கப்பட்டபோது 4.30 மணி நேர படமாக இருந்திருக்கிறது. எவ்வளவோ முயன்றும் படத்தின் காட்சிகளை குறைக்க முடியவில்லை. இதனையடுத்து அப்படியே 2 இடைவேளைகளுடன் திரையரங்குகளில் வெளியிடலாம் என ரஜினி முடிவெடுத்திருக்கிறார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட கமல், அது படத்தின் வசூலை பாதிக்கும் என 2.30 மணி நேர படமாக குறைக்குமாறு சொல்ல அன் பிறகே ரஜினி சம்மதித்திருக்கிறார்.
கமல் படத்துக்கு பெயர் வைத்த ரஜினி
மேலும் தெனாலி படம் தயாராகிக்கொண்டிருக்கும்போது அந்தப் படத்தை கே.எஸ்.ரவிக்குமாரை தயாரிக்குமாறு கமல் சொல்ல முதலில் அவர் தயங்கியிருக்கிறார். இதுகுறித்து அறிந்துகொண்ட ரஜினி படத்தை தயாரியுங்கள் என ஊக்கமளித்திருக்கிறார். அதே போல கே.எஸ்.ரவிக்குமாரிடம் தெனாலி படத்தின் கதையை கேட்ட ரஜினி அந்தப் படத்துக்கு தெனாலி என்ற பெயர் சரியாக இருக்கும். நான் சொன்னேன் என கமலிடம் சொல்லாதீர்கள் என்றிருக்கிறார். அந்தப் படத்தின் வெற்றி விழாவில் இதுகுறித்து கே.எஸ்.ரவிக்குமார் பகிர்ந்துகொண்ட போது தான் இது கமலுக்கு தெரிய வந்திருக்கிறது.
கமல் குறித்து ரஜினி நெகிழ்ச்சி
இதே போல கமலின் ஹேராம் படத்தை தான் இதுவரை 20 முறைக்கும் மேல் பார்த்ததாக ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். எங்கள் காலத்தில் ரஜினியையும் என்னையும் போல சிறந்த நண்பர்கள் இருந்ததில்லை என கமல் தனது கமல் 50 நிகழ்ச்சியில் பேசும்போது தெரிவித்திருந்தார். கமல்ஹாசன் தனது திரையுலக வாழ்க்கையில் மிக முக்கிய நபர் எனவும் தான் அறிமுகமாகும்போது கமல் சூப்பர் ஸ்டாராக இருந்ததாகவும் அதே மேடையில் ரஜினியும் பகிரந்து கொண்டார்.