ஜேசன் சஞ்சய் – சந்தீப் கிஷன் படத்தின் டைட்டில் இதுதான் – அப்டேட் இதோ

Jason Sanjay Movie Title: நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வரும் நிலையில் படத்தில் டைட்டில் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஜேசன் சஞ்சய் - சந்தீப் கிஷன் படத்தின் டைட்டில் இதுதான் - அப்டேட் இதோ

சிக்மா

Published: 

10 Nov 2025 11:09 AM

 IST

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக இருக்கும் நடிகர் தளபதி விஜயின் மகன் தான் ஜேசன் சஞ்சய் (Jason Sanjay). வெளி நாட்டில் சினிமா தொடர்பான படிப்பை படித்துமுடித்த இவர் சின்ன சின்ன குறும்படங்களை இயக்கி உள்ளார். அந்த குறும்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜேசன் சஞ்சய் இயக்கிய குறும்படங்களில் அவரே நடித்து இருந்ததைப் பார்த்த ரசிகர்கள் அவரது தந்தையை தொடர்ந்து சினிமாவில் அவரும் நாயகனாவார் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்த எதுவும் இல்லாமல் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகிறார் என்று அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.

மேலும் இந்தப் படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்க உள்ளார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இவர் தமிழில் அவ்வபோது நடித்தாலும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்தப் படத்தில் சந்தீப் கிஷனுக்கு முன்னதாக பிரபல நடிகர் துல்கர் சல்மானை நாயகனாக நடிக்க வைக்க வேண்டும் என்று ஜேசன் சஞ்சய் விரும்பியதாகவும் ஆனால் அவருடனான கூட்டணி சில காரணங்களால் அமையாமல் போனதால் தான் இந்தப் படத்திற்கு சந்தீப் கிஷன் நாயகனாக அறிமுகம் ஆனார் என்றும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகம் ஆகும் படத்தின் பெயர் சிக்மா:

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா புரடெக்‌ஷன்ஸ் சார்பாக இயக்குநர் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தை தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் பணிகள் தொடங்கி ஒரு ஆண்டை நிறைவடைய உள்ள நிலையில் இன்று படத்தின் பெயர் என்ன என்பது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தப் படத்திற்கு சிக்மா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது தற்போது ரசிகரக்ளிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… நீதான் கல்யாணியா? ரோகிணி குறித்த உண்மையை தெரிந்துகொண்ட மீனா – பரபர திருப்பங்களுடன் வெளியான சிறகடிக்க ஆசை சீரியல்

லைகா தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பிக்பாஸ் 9-ல் முதன்முறையா குறும்படம்… யோசனையில் போட்டியாளர்கள் – உற்சாகத்தில் ரசிகர்கள்