இயக்குநர் எச். வினோத் பிறந்தநாள்… ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ

Jana Nayagan Movie: இயக்குநர் எச்.வினோத் இன்று தனது 44-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவர் தற்போது தளபதி விஜயின் ஜன நாயகன் படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் இவரது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக ஜன நாயகன் படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது

இயக்குநர் எச். வினோத் பிறந்தநாள்... ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ

ஜன நாயகன்

Published: 

05 Sep 2025 18:26 PM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான சதுரங்க வேட்டை என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் எச். வினோத் (H. Vinoth). இந்த சமூகத்தில் பேராசைப்படுவதால் மக்கள் எப்படி எல்லாம் ஏமாறுவார்கள் என்பதை மிகவும் அழகாக காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குநர் எச். வினோத். வாரத்திற்கு ஒருமுறையாவது செய்திகளில் சதுரங்க வேட்டை பட பாணியில் என்று ஒரு செய்தியாவது வெளிவராமல் இருக்காது. அப்படி பல திருட்டு வேலைகளை படமாக காட்டியும் மக்கள் பலர் இன்னும் ஏமாந்துகொண்டேதான் இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து இயக்குநர் எச். வினோத் அடுத்ததாக 2017-ம் ஆண்டு தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கினார். நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான இந்தப் படம் தனியாக இருக்கும் வீடுகளில் எப்படி கொள்ளை நடைபெறுகிறது என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது.

இந்தப் படமும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து இயக்குநர் எச். வினோத் தொடர்ந்து நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு என 3 படங்களிலும் நடிகர் அஜித் குமாரை வைத்து இயக்கினார். இந்தப் படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக இறுதியாக வெளியான துணிவு படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் எச். வினோத் நடிகர் கமல் ஹாசனின் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக நடிகர் விஜயின் படத்தை இயக்கி வருகிறார்.

எச். வினோத்திற்கு ஜன நாயகன் படக்குழு வீடியோ வெளியிட்டு வாழ்த்து:

இந்த நிலையில் நடிகர் விஜயின் இறுதிப் படம் என்று கூறப்படும் 69-வது படமான ஜன நாயகனை இயக்குநர் எச். வினோத் இயக்கி வருகிறார். படம் வருகின்ற 9-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்த நிலையில் படத்தின் இயக்குநர் எச். வினோத் இன்று 05-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு தனது 44-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் ஜன நாயகன் படக்குழு வீடியோ ஒன்றை அவர்களது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… மதராஸி குறித்து நெகிழ்ந்த சிவகார்த்திகேயன் – வைரலாகும் போஸ்ட்

ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… இணையத்தில் வைரலாகும் நடிகர் சூர்யாவின் ரீசென்ட் போட்டோஸ்!