ஏப்ரலில் வெளியாகும் ஜன நாயகன் படம்? வைரலாகும் தகவல்

Jana Nayagan Movie Release Update: நடிகர் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி ரசிகர்களிடையே தொடர்ந்து எதிர்பார்ப்பை ஏற்படுத்திவரும் படம் ஜன நாயகன். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அடுத்ததாக எப்போது வெளியாகும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

ஏப்ரலில் வெளியாகும் ஜன நாயகன் படம்? வைரலாகும் தகவல்

ஜன நாயகன்

Published: 

31 Mar 2026 21:04 PM

 IST

தமிழ் சினிமாவில் பல கோடி ரசிகர்களைக் கொண்டுள்ள ஒரு நடிகராக வலம் வருபவர் நடிகர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இதுவரை அடுத்தடுத்து 68 படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகர் தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான தி கிரேட்டஸ் ஆஃப் ஆல் டைம் படமும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து தனது 69-வது படத்திற்காக பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரடெக்‌ஷன்ஸ் உடன் கூட்டணி வைத்தார். இந்த நிறுவனம் தமிழில் தயாரித்த முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தை இயக்குநர் எச். வினோத் எழுதி இயக்கி உள்ளார்.

மேலும் இந்தப் படத்திற்கு ஜன நாயகன் என்று பெயர் வைக்கப்பட்டது. படத்தி படப்பிடிப்பு பணிகள் நடந்துகொண்டு இருக்கும் போது இதுதான் நடிகர் விஜயின் நடிப்பில் வெளியாகும் இறுதிப் படம் என்று தகவல்கள் வெளியானது. இதனை ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது. அவர் தமிக அரசியலில் தீவிரமாக களம் இருங்குவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஏப்ரல் மாதம் இறுதியில் வெளியாகும் ஜன நாயகன் படம்?

அதன்படி ஜன நாயகன் படம் தேர்தலுக்குப் பிறகு, ஏப்ரல் மாத இறுதியில் (ஏப்ரல் 30 அன்று வெளியாக வாய்ப்புள்ளது) வெளியாகத் திட்டமிட்டுள்ளது. எனவே, படக்குழுவினருக்கு தணிக்கைச் சான்றிதழ் உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், கோடை விடுமுறையும் இப்படத்திற்கு ஒரு சரியான வெளியீட்டு நேரமாக அமையும் என்றும் தெரிகிறது. தணிக்கை மற்றும் வெளியீட்டுத் திட்டங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read… Atlee: படத்துக்காக விஜய் ரசிகர்-னு சொன்னேனா.. விஜய் சார் ரசிகனாக காரணம் இதுதான் – அட்லீ ஓபன் டாக்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Soori: விஜய், சூர்யா தனுஷை தொடர்ந்து.. சூரிக்கு ஜோடியாகும் பிரபல இளம் நடிகை?.. அட இவர்தான்!

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..