வெற்றிமாறன் இயக்கத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா சிம்பு? வைரலாகும் தகவல்

Actor Silambarasan TR: கோலிவுட் சினிமாவில் வரிசையாக பல படங்களில் கமிட்டாகி மிகவும் பிசியான நடிகராக வலம் வருகிறார் நடிகர் சிம்பு. இவர் தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ளது குறித்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

வெற்றிமாறன் இயக்கத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா சிம்பு? வைரலாகும் தகவல்

வெற்றிமாறன், சிம்பு

Published: 

02 Jul 2025 13:17 PM

கோலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தற்போது கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன் (Actor Silambaran TR). இவரவை ரசிகர்கள் சிம்பு, எஸ்.டி.ஆர் என்றும் அன்புடன் அழைத்து வருகின்றனர். தொடர்ந்து வரிசையாக படங்களில் கமிட்டாகி நடித்து வரும் சிம்பு தற்போது இயக்குநர் வெற்றிமாறன் உடன் கூட்டணி வைத்துள்ளார். இந்த கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதன்படி வெற்றிமாறன் உடன் சிம்பு படப்பிடிப்பு தளத்தில் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி படு வைரலானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

அதன்படி வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும் படத்தில் அவர் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்க உள்ள இந்த தகவல் அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தப் படத்தின் அறிவிப்பு வீடியோ அடுத்த வாரத்தில் வெளியாக வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் வைரலாகும் செய்தி:

ரசிகர்களிடையே வரவேற்பை பெறும் வெற்றிமாறன் சிம்பு கூட்டணி:

வெற்றிமாறன் மற்றும் சிம்புவின் கூட்டணி தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்ற நிலையில் இவர்களின் படம் குறித்து சமீபத்தில் இயக்குநர் வெற்றிமாறன் பேட்டி ஒன்றில் பேசியதும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. அதன்படி நான் இயக்கும் அடுத்தப் படம் சிம்புவை வைத்து தான் என்று உறுதிப்படுத்தினார்.

தொடர்ந்து பேசிய இயக்குநர் வெற்றிமாறன் சிம்புவை வைத்து இயக்கும் படம் வடசென்னையை மையமாக வைத்து தான் இயக்க உள்ளதாகவும் ஆனால் அது தனுஷ் நடித்த வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் இல்லை என்றும் அன்புவின் எழுச்சி தனுஷ் மட்டும் தான் என்று தெரிவித்தார்.

ஆனால், வடசென்னை படத்தில் காட்டப்பட்ட காலத்தில் தான் சிம்புவின் படமும் இருக்கும் என்றும் தெரிவித்தார். இதனால் லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யுனிவர்ஸ் மாதிரி இது வெற்றிமாறனின் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்று ரசிகர்கள் தொடர்ந்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.