தளபதி விஜயின் ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் எப்போது? இணையத்தில் வைரலாகும் தகவல்

Jana Nayagan Movie Release Update: கோலிவுட் சினிமா ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்து ஏமாற்றம் அடைந்தது ஜன நாயகன் படத்தின் வெளியீட்டில்தான். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் எப்போது வெளியாகும் என்பது குறித்து தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தளபதி விஜயின் ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் எப்போது? இணையத்தில் வைரலாகும் தகவல்

ஜன நாயகன்

Published: 

25 Feb 2026 10:21 AM

 IST

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் பெரும் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகும் படம் என்று அறிவிப்பக்கப்பட்ட படம் ஜன நாயகன். விஜய் தீவிரமாக அரசியல் பணியில் ஈடுபடுவதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து காணப்பட்டது. படம் கடந்த 9-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக படம் திரையரங்குகளில் வெளியாகாமல் தள்ளிவைக்கப்பட்டது. தொடர்ந்து இந்தப் படத்தின் சென்சார் பிரச்சனை எப்போது முடியும் என்றும் படம் திரையரங்குகளில் எப்போது வெளியாகும் என்றும் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தப் படத்தை இயக்குநர் எச். வினோத் இயக்கி உள்ளார்.

மேலும் இந்த ஜன நாயகன் படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து நடிகர்கள் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உட்பட பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருந்த நிலையில் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தது. இந்த நிலையில் படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தளபதி விஜயின் ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் எப்போது?

இந்தப் படத்திற்கு சென்சார் விரைவில் வழங்கவேண்டும் என்று வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுக்கொண்டே சென்றது. இதனைத் தொடர்ந்து வழக்கை வாபஸ் பெற்றுவிட்டு ஜன நாயகன் படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பியது படக்குழு. இந்த ரிவைசிங் கமிட்டி இன்னும் படத்தைப் பார்க்கவில்லை என்று தெரிகிறது, அதனால்தான் ஜூன் 2026 இல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் படம் விஜய்யின் பிறந்தநாளில், ஜூன் 18,19 அல்லது ஜூன் 25,26 அன்று வெளியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… தலைவர் 173 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்… இயக்குநர் சொன்ன அப்டேட்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… அடுத்த 5 வருஷத்திற்கான திட்டத்தை ரஜினிகாந்த் என்னிடம் சொன்னார்… ஆர்.ஜே.பாலாஜி ஓபன் டாக்

Follow Us
Related Stories
Kayadu Lohar: ஐஆம் கேம் படம் முற்றிலும் வித்தியாசமானது.. நிச்சயம் அனைவர்க்கும் பிடிக்கும் – கயாடு லோஹர் பேச்சு!
Hi Movie: நயன்தாரா – கவின் நடிக்கும் ஹாய் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படக்குழு அறிவிப்பு!
அவன் குறுக்க மட்டும் போயிடாதீங்க சார் – 4 ஆண்டுகளை நிறைவு செய்தது கேஜிஎஃப் சாப்டர் 2 படம்
சரி என்று தெரியாமல் தவறு என்று புரியாமல் எதில் வந்து சேர்ந்தேன் நான் எதிர்பார்க்கவில்லை நான் – 19 ஆண்டுகளை நிறைவு செய்தது உன்னாலே உன்னாலே படம்
GV Prakash: ஜோ பட இயக்குநரின் புது படத்தில் இணைந்த ஜி.வி. பிரகாஷ்.. நடிகை யார் தெரியுமா?
புத்தாண்டை முன்னிட்டு குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்
வரலாறு படைத்துள்ளீர்கள் - ஆர்தமிஸ் விண்வெளி பயணக்குழுவை பாராட்டிய டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கத் திட்டம்!!
நடுவானில் விமானத்தின் 2 எஞ்சின்களும் செயலிழப்பு.. துரிதமாக செயல்பட்டு 69 பேரை காப்பாற்றிய பைலட்!
நடிகை ஹன்சிகா தனது மைத்துனி மீது கொடுத்த புகார்