2025-ல் முதல் ஆறு மாதத்தில் பாஸ் ஆபிஸில் கலக்கிய தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ
Kollywood Cinema: 2025-ம் ஆண்டு தொடங்கு 6 மாதங்கள் முடிந்துவிட்டது. இந்த நிலையில் கோலிவுட் சினிமாவில் முதல் ஆறு மாதங்களில் பல படங்கள் திரையரங்குகளில் வெளியானது. இதில் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் செய்த தமிழ் படங்களின் பட்டியல் குறித்து தற்போது பார்க்கலாம்.

தமிழ் படங்கள்
2025-ம் ஆண்டு தொடங்கி 6 மாதங்கள் முடிவடைந்த நிலையில் கோலிவுட் சினிமாவில் (Kollywood Cinema) பல படங்கள் வெளியாகி வெற்றிநடைப் போட்டது. ஜனவரி மாதம் தொடங்கியதில் இருந்து ஜூன் மாதம் முடியும் வரை பல முன்னணி நடிகர்களின் படங்கள் முதல் ஆறு மாதங்களில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தகது. பெரிய நடிகர்களின் படங்கள் மட்டும் இன்றி சிறிய பட்ஜெட்களில் வெளியான பலப் படங்கள் தமிழ் சினிமாவில் நல்ல வசூலைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த ஆண்டில் இதுவரை வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படங்களில் தொகுப்பை தற்போது பார்க்கலாம். நடிகர் அஜித் குமாரின் படம் முதல் நடிகர் பிரதீப் ரங்கநாதனின் படம் வரை இந்த வரிசையில் படங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஜனவரி முதல் ஜூன் வரை பாக்ஸ் ஆபிஸில் ஹிட அடித்தப் படங்கள்:
இந்த ஜனவரி மாதம் தொடங்கிய போது எதிர்பாராத விதமாக ஹிட் அடித்தப் படம் தான் மத கஜ ராஜா. இந்தப் படம் 12 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட மத கஜ ராஜா படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றி கிடப்பில் போடப்பட்ட பல படங்களுக்கு உந்துதலாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான படம் டிராகன். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் 100-வது நாள் விழா சமீபத்தில் படக்குழு கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.
டிராகன் படக்குழு 100-வது நாளிற்காக வெளியிட்ட வீடியோ:
Here’s to a journey full of love, laugh and Araajagam, here’s to the journey of #Dragon 💥♥️
🔗https://t.co/44lZONqLSD@pradeeponelife @Dir_Ashwath @leon_james @anupamahere @11Lohar#KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh @archanakalpathi @aishkalpathi… pic.twitter.com/gAzv3eneQ3
— AGS Entertainment (@Ags_production) June 30, 2025
மேலும் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் குட் பேட் அக்லி. கேங்ஸ்டராக இருக்கும் நடிகர் அஜித் குமார் தனது மகனுக்கா அனைத்தையும் விட்டுவிட்டு திருந்தி வாழ நினைப்பது தான் படத்தின் கதை. இந்தப் படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்த நிலையில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நாயகியாக நடித்து இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது போல வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.