Ilaiyaraaja: என் சம்பளத்தை வச்சிகோங்க.. தேசியப் பாதுகாப்பு நிதிக்கு இளையராஜா நன்கொடை!

Ilaiyaraaja Generous Donation : கோலிவுட் சினிமாவில் புகழ்மிக்க இசையமைப்பாளராக இருந்து வருபவர் இளையராஜா. இவர் தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே போர் நிலவி வரும் நிலையில், தேசிய பாதுகாப்பு நிதிக்கு நன்கொடை வழங்கவுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தனது கான்சர்ட் மற்றும் ஒரு மாத சம்பளத்தை இந்தியத் தேசியப் பாதுகாப்பு நிதிக்குக் கொடுக்கவுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Ilaiyaraaja: என் சம்பளத்தை வச்சிகோங்க.. தேசியப் பாதுகாப்பு நிதிக்கு இளையராஜா நன்கொடை!

இளையராஜா மற்றும் பிரதமர் மோடி

Updated On: 

10 May 2025 22:51 PM

உலகம் முழுவதும் இந்தியா மற்றும் பாகிஸ்தானின்  (India and Pakistan) போர் கலவரம் (War) குறித்த பேச்சுக்கள் நடந்து வருகிறது. மேலும் இந்தியா- பாகிஸ்தானிடையே போரானது உச்சத்தைத் தொட்டுள்ளது என்றே கூறலாம். பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் எல்லை கிராமப் பகுதிகளைக் குறித்து வைத்து தாக்கி வருகின்றனர். மேலும் இந்தியாவில் பஞ்சாப் போன்ற மாநிலங்களில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்களைத் தடுக்கும் வண்ணத்தில் இந்தியாவும் எதிர்த்துப் போரிட்டு வருகிறது. பாகிஸ்தானின் முக்கிய நகரங்களை இந்தியா தாக்கி அளித்திருக்கிறது. இவ்வாறு நாடு முழுவதும் போர் கலவரமானது பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியா அரசிற்கு உதவி புரியும் விதத்தில் பலரும் நிதியுதவிகளைக்  (Financial assistance) கொடுத்தது வருகின்றனர். அந்த வகையில் தமிழ் பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவும் (Music Director Ilaiyaraaja) நன்கொடையை (Donation) வழங்க முன்வந்துள்ளார்.

இது தொடர்பான அறிக்கையை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் தனது ஒரு மாத ஊதியத்தையும், நடத்தும் இசை நிகழ்ச்சிகளின் கட்டண நிதியையும்  (National defense fund) வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். தற்போது இந்த தகவலானது இணையத்தில் தீயாகப் பரவிவருகிறது . மேலும் இளையராஜாவைத் தொடர்ந்து பல நடிகர்களும் நிதி வழங்க முன்வருவார்கள் என்று கூறப்படுகிறது.

இசையமைப்பாளர் இளையராஜா வெளியிட்ட எக்ஸ் பதிவு :

நான் இந்த 2025 வருடம்தான் சிம்பொனியை இசையமைத்துப் பதிவு செய்து அதற்கு Valiant என்று பெயரிட்டேன். அதைத் தொடர்ந்து இந்த 2025 மே மாதத்தில் நமது உண்மையான நாயகர்கள், நமது ராணுவ வீரர்கள் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளைக் கொடூரமாகக் கொல்வதை எதிர்த்து எல்லைகளில் துணிச்சல் மற்றும் உறுதியுடன் செயல்படுவார்கள் என்று நடக்கும் எதிர்பார்க்கவில்லை.

நான் ஒரு இந்தியனாகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், பயங்கரவாதத்தை ஒழிக்கவும், நமது எல்லைகளையும் மற்றும் மக்களின் பாதுகாப்பிற்காகவும் நான் ஒரு முடிவு செய்துள்ளேன். நமது நாட்டின் துணிச்சலான நாயகர்களின் வீரம் மற்றும் அவர்களின் முயற்சிகளுக்காக எனது இசை நிகழ்ச்சியின் கட்டணம் மற்றும் எனது ஒரு மாத சம்பளத்தையும், நமது தேசியப் பாதுகாப்பு நிதிக்கு ஒரு சிறிய பங்களிப்பை நன்கொடையாக வழங்க முடிவெடுத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தற்போது இசைஞானி இளையராஜாவின் செயலானது மக்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது. இளையராஜாவைத் தொடர்ந்து கோலிவுட் சினிமாவின் நடிகர்களும் தேசியப் பாதுகாப்பு நிதிக்கு, தங்களால் முடித்த நிதி உதவியை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் போர் பதட்டத்தில் இருக்கும் நிலையில், நமது இந்திய அரசிற்கு உதவியாக நாம் இருக்கவேண்டும் என பலரும் தெரிவித்து வருகின்றனர்.