Meesaya Murukku 2: மீசையமுறுக்கு 2 பட முதல் பாடல் ரிலீஸ் எப்போது? அட இந்த நடிகையின் சிறப்பு நடனமா?
Meesaya Murukku 2 Movie: தமிழில் இசையமைப்பாளராக நுழைந்து, தற்போது படங்களில் கதாநாயகனாக நடித்துவருபவர் ஹிப்ஹாப் ஆதி. இவரின் நடிப்பில் தயாராகிவரும் படம்தான் மீசையமுறுக்கு 2. இந்த திரைப்படமானது பிரம்மாண்டமாக தயாராகிவரும் நிலையில், இதன் முதல் பாடல் எப்போது என படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மீசையமுறுக்கு 2
தமிழில் பிரபல நடிகராகவும், இசையமைப்பாளராகவும் இருந்துவருபவர் ஹிப்ஹாப் ஆதி (Hiphop Adhi). இவரின் நடிப்பில் தமிழில் இதுவரை பல படங்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் கடைசி உலகப்போர் (Kadaisi Ulaga Por) என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். கடந்த 2024ம் ஆண்டில் வெளியான இப்படமானது இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை. இந்த படமானது இவருக்கு தோல்வியில் முடிந்த நிலையில், 1 ஆண்டுக்கும் மேலாக எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இந்நிலையில் இவர் முதல் முதலில் கதாநாயகனாக அறிமுகமான படம்தான் மீசையமுறுக்கு (Meesaya Murukku). இதை ஹிப்ஹாப் ஆதியே இயக்கி, நடித்து மற்றும் இசையமைத்திருந்தார். கடந்த 2017ம் ஆண்டில் வெளியான இது மிகவும் பிரம்மாண்டமான வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இதன் தொடர்ச்சி படமாக மீசையமுறுக்கு 2 (Meesaya Murukku 2) படத்தை இயக்கியுள்ளார். இதில் ஹிப்ஹாப் ஆதி கிட்டத்தட்ட 3 வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் டீசர் சமீபத்தில் வெளியாகியிருந்த நிலையில், நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் முதல் பாடல் எப்போது ரிலீஸ் என்பது குறித்தும் படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் முதல் பாடல் வரும் 2026 மார்ச் 4ம் தேதியில் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: துபாயில் தாக்குதல்.. அஜித் குமாரின் நிலைமை என்ன? – மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம்!
மீசையமுறுக்கு 2 பட முதல் பாடல் குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பு பதிவு:
A 10/10 party vibe! All set to bring you a celebration 🪩
The 1st Single from #MeesayaMurukku2 is dropping on March 4th @hiphoptamizha #BenzzMedia #ACSArunKumar #AvniCinemax @khushsundar @anisundar_ @Harshatheee @TheKetikaSharma@dir_aswin @PoornimaRamasw1 @iambababaskar… pic.twitter.com/iIBc8UyS2W
— Avni Cinemax (@AvniCinemax_) February 28, 2026
மீசையமுறுக்கு 2 படத்தில் நடனமாடும் பிரபல தெலுங்கு நடிகை:
இந்த மீசையமுறுக்கு படத்தில் ஹிப்ஹாப் ஆதி 3 வேடத்தில் நடிக்கும் நிலையில், இதில் அவருக்கு ஜோடியாக நடிகைகள் சைத்ரா ஜே ஆச்சார் மற்றும் ராமயா ரங்கநாதன் நடித்துள்ளனர். அந்த வகையில் இப்படத்தில் சிறப்பு பாடல் ஒன்றில் பிரபல நடிகை ஒருவர் நடனமாடியுள்ளாராம். அவர் வேறு யாராயுமில்லை, தெலுங்கில் “அதுதா சர்ப்ரைஸு” என்ற பாடலுக்கு நடனமாடி ஒட்டுமொத்த தென்னிந்திய மக்கள் மத்தியிலும் பிரபலமான நடிகை கெட்டிகா சர்மா தான். இவர் இப்படத்தின் முதல் பாடலில் இடம்பெற்றுள்ளதாக படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: சினிமாவில் 25 ஆண்டுகள் நிறைவடைந்ததே நான் மறந்துவிட்டேன் – ஹாரிஸ் ஜெயராஜ்!
மீசையமுறுக்கு 2 படத்தின் கதை:
இந்த மீசையமுறுக்கு 2 படத்தின் கதை, பாகம் 1ல் இசைஅயமைப்பாளராக மாறுவதற்கு ஹிப்ஹாப் ஆதி படும் கஷ்டம் மற்றும் அவரின் காதல் தோல்வியை குறித்து இருந்தது. அதுபோலவே இந்த மீசையமுறுக்கு 2 படமானது கானா இசையமை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வரும் 2026ம் ஆண்டு மே மாதத்தில் வெளியிடுவதற்கு படக்குழு திட்டமிட்டுவருகிறதாம். விரைவில் இது குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.