70வது தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருது விழாவில் வெற்றிப் பெற்ற தமிழ் பிரபலங்கள் யார் யார்? லிஸ்ட் இதோ

70th Filmfare Awards South Winners List in Tamil: 70-வது தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருது விழா நேற்று கேரளாவில் நடைப்பெற்றது. இந்த விழாவில் தமிழ் சினிமா சார்பாக விருதுகளை வென்ற பிரபலங்கள் யார் யார் என்பது குறித்த பட்டியலை தற்போது பார்க்கலாம்.

70வது தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருது விழாவில் வெற்றிப் பெற்ற தமிழ் பிரபலங்கள் யார் யார்? லிஸ்ட் இதோ

பிரபலங்கள்

Published: 

22 Feb 2026 10:35 AM

 IST

உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் படங்களில் சிறந்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் திரைப்பட குழுவினருக்கு விருது வழங்கி கௌரவிப்பது என்பது வழக்கமாக தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது. அந்த வகையில் 70-வது தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருது விழா நேற்று 21-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு கேரளாவில் நடைப்பெற்றது. இந்த விருது விழாவில் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். ஒவ்வொரு மொழியிலும் கடந்த 2024-ம் ஆண்டில் வெளியான சிறந்த படங்கள், சிறந்த நாயகன்கள், சிறந்த நாயகிகள் மற்றும் இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், துணை நடிகர்கள் என பல பிரிவுகளின் கீழ் விருது வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் சினிமாவில் யார் யார் எல்லாம் விருதுகளை வென்றுள்ளனர் என்பதைப் பார்க்கலாம்.

2024-ம் ஆண்டைப் பொருத்தவரை தமிழ் சினிமாவில் பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள் வெளியாது. இது தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மக்களின் மனதை வென்ற எந்த எந்த படங்களுக்கு எல்லாம் 70-வது தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருது கிடைத்துள்ளது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

70-வது தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருது வென்ற தமிழ் பிரபலங்கள்:

அதன்படி தமிழ் சினிமாவில் அமரன் படத்திற்கு அதிக அளவில் விருதுகள் குவிந்துள்ளது என்று சொல்லலாம் இந்த 70-வது தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருது பட்டியளில் அமரன் படக்குழுவி, சிறந்த நாயகனுக்கான விருது சிவகார்த்திகேயனுக்கும், சிறந்த நாயகிக்கான விருது சாய் பல்லவிக்கும், சிறந்த இயக்குநருக்கான விருது ராஜ்குமார் பெரியசாமிக்கும், சிறந்த இசையமைப்பாளர் விருது ஜிவி பிரகாஷிற்கும் கிடைத்துள்ளது. அது மட்டும் இன்றி இந்தப் படத்தில் பாடல்கள் பாடிய பாடகர்கள் ஹரிசரண் மற்றும் ஸ்வேதா மோகனுக்கும் விருதுகள் கிடைத்துள்ளது.

Also Read… இரு முகன் இயக்குநருடன் மீண்டும் இணையும் சியான் விக்ரம்?

இதனைத் தொடர்ந்து மெய்யழகன் படத்தில் நடித்த நடிகர் அரவிந்த் சாமிக்கு விமர்சகர்களால் தேர்வு செய்யப்பட்ட சிறந்த நடிகர் மற்றும் சிறந்த துணை நடிகருக்கான விருது கார்த்திக்கும் கிடைத்துள்ளது. அது மட்டும் இன்றி தங்கலான், லப்பர் பந்து மற்றும் கொட்டுகாளி ஆகியப் படங்களுக்கு விருதுகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… வரலட்சுமி சரத்குமார் இயக்கி நடிக்கும் சரஸ்வதி படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட நடிகர் நானி!

Follow Us
Related Stories
Kayadu Lohar: ஐஆம் கேம் படம் முற்றிலும் வித்தியாசமானது.. நிச்சயம் அனைவர்க்கும் பிடிக்கும் – கயாடு லோஹர் பேச்சு!
Hi Movie: நயன்தாரா – கவின் நடிக்கும் ஹாய் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படக்குழு அறிவிப்பு!
அவன் குறுக்க மட்டும் போயிடாதீங்க சார் – 4 ஆண்டுகளை நிறைவு செய்தது கேஜிஎஃப் சாப்டர் 2 படம்
சரி என்று தெரியாமல் தவறு என்று புரியாமல் எதில் வந்து சேர்ந்தேன் நான் எதிர்பார்க்கவில்லை நான் – 19 ஆண்டுகளை நிறைவு செய்தது உன்னாலே உன்னாலே படம்
GV Prakash: ஜோ பட இயக்குநரின் புது படத்தில் இணைந்த ஜி.வி. பிரகாஷ்.. நடிகை யார் தெரியுமா?
புத்தாண்டை முன்னிட்டு குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்
வரலாறு படைத்துள்ளீர்கள் - ஆர்தமிஸ் விண்வெளி பயணக்குழுவை பாராட்டிய டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கத் திட்டம்!!
நடுவானில் விமானத்தின் 2 எஞ்சின்களும் செயலிழப்பு.. துரிதமாக செயல்பட்டு 69 பேரை காப்பாற்றிய பைலட்!
நடிகை ஹன்சிகா தனது மைத்துனி மீது கொடுத்த புகார்