டீசல் படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது – வைரலாகும் போஸ்ட்

Diesel Movie: நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து வெற்றியைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் லப்பர் பந்து படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் டீசல். இந்தப் படத்தின் டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

டீசல் படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது - வைரலாகும் போஸ்ட்

டீசல்

Published: 

15 Oct 2025 16:12 PM

 IST

தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதன் காரணமாக தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகராக வலம் வருகிறார் நடிகர் ஹரிஷ் கல்யாண் (Actor Harish Kalyan). இவரது நடிப்பில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் லப்பர் பந்து. கடந்த 2024-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட்டை மையாமாக வைத்து வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் டீசல்.

இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சண்முகம் முத்துசாமி எழுதி இயக்கி உள்ளார். நடிகர் ஹரிஷ் கல்யாண் தொடர்ந்து அறிமுக இயக்குநர்கள் பலருக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார். அப்படி ஹரிஷ் கல்யாண் அறிமுக இயக்குநர்களுடன் பணியாற்றும் படங்கள் எல்லாம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தொடர்ந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி ஹரிஷ் கல்யாண் நடிப்பில் அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கி கடந்த 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் தான் பார்க்கிங். இந்தப் படம் 2023-ம் ஆண்டிற்கான தேதிய விருது 3 பெற்றது குறிப்பிடத்தக்கது.

டீசல் படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது:

இந்த நிலையில் தற்போது நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த டீசல் படத்தையும் அறிமுக இயக்குநரே இயக்கி உள்ளார். படம் வருகின்ற 17-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.

தற்போது படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் படத்தின் டிக்கெட் முன்பதிவை தற்போது படக்குழு தொடங்கியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான தேர்ட் ஐ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… ஜெயிச்சுடு கபிலா… பைசன் காலமாடன் படத்தின் ட்ரெய்லரைப் புகழ்ந்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்

டீசல் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… மெண்டல் ஹாஸ்பிடல் மாதிரி இருக்கு… பிக்பாஸ் தமிழ் சீசன் 9 போட்டியாளர்களை விமர்சித்த சதீஸ்!