Diesel Movie: ஹரிஷ் கல்யானின் டீசல்… இயக்குநர் வெற்றிமாறன் செய்த விஷயம்!
Vetrimaaran And Harish Kalyan: தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் ஹரிஷ் கல்யாண். இவரின் முனன்ணி நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகியுள்ள திரைப்படம் டீசல். இந்த படத்திற்காக இயக்குநர் வெற்றிமாறன் தரமான விஷயம் ஒன்றை செய்துள்ளார். அது என்ன என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.

வெற்றிமாறன் மற்றும் ஹரிஷ் கல்யாண்
கோலிவுட் சினிமாவில் பிரபல இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் இருந்து வருபவர் வெற்றிமாறன் (Vetrimaaran). இவரின் முன்னணி நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் விடுதலை பார்ட் 2 (Viduthalai Part 2). இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் வெளியாகி கலவையான விமரசங்களை பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து , தற்போது இவர் நடிகர் சிலம்பரசனின் (Silambarasan) STR49 திரைப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் ப்ரீபுரொடக்ஷன் பணிகள் தொடங்கியிருக்கும் நிலையில், வரும் 2025 நவம்பர் தொடக்கத்தில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாணின் (Harish Kalyan) டீசல் (Diesel) படத்திற்காக இயக்குநர் வெற்றிமாறன் சிறப்பான விஷயம் ஒன்றை செய்துள்ளார். அவர் இந்த டீசல் திரைப்படத்திற்கு வாய்ஸ் ஓவர் (voice over) கொடுத்திருக்கிறார். இந்நிலையில் அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் எக்ஸ் பதிவது ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பைசன் தான் என் முதல் படம்னு நான் நினைக்கிறேன் – துருவ் விக்ரம் சொன்ன விசயம்!
வெற்றிமாறனுக்கு நன்றி தெரிவித்து வெற்றிமாறன் வெளியிட்ட எக்ஸ் பதிவு
#Diesel – A Vetrimaaran Voiceover 💥
நன்றிகள் கோடி #Vetrimaaran sir🙏❤️
#DieselDiwali pic.twitter.com/w9x9XNWnc7
— Harish Kalyan (@iamharishkalyan) October 6, 2025
டீசல் திரைப்படத்திற்கு இயக்குநர் வெற்றிமாறன் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ள நிலையில், எக்ஸ் பதிவில் நடிகர் ஹரிஷ் கல்யாண் வெற்றிமாறனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: கரூர் சோகம்.. தளபதி விஜய்யின் ஜன நாயகன் பட பர்ஸ்ட் சிங்கிள் ஒத்திவைப்பா?
ஹரிஷ் கல்யாணின் டீசல் திரைப்படம் :
நடிகர் ஹரிஷ் கல்யாணத்தின் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகியிருக்கும் இப்படமானது கடந்த 2022ம் ஆண்டிலே அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுவந்த நிலையில், தற்போது வெளியீட்டிற்கு காத்திருக்கிறது. இந்த படத்தை இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார். மேலும் இதில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அதுல்யா ரவி நடித்திருக்கிறார்.
இந்த படமானது வட சென்னை பகுதியை அடிப்படையாக கொண்டு தயாராகியுள்ளது. இப்படம் வரும் 2025 அக்டோபர் 17ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்தில் ரிலீசிற்கு இன்னும் சில நாட்கள் மட்டும் உள்ள நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தின் பாடல்களை தொடர்ந்து, படமும் ஹிட்டாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.