புத்தாண்டை முன்னிட்டு குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்
Actor Harish Kalyan Shares His Daughter's Photo On Social Media: தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவரக்கு சமீபத்தில் மகள் பிறந்து இருந்த நிலையில் அவரது புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.

மனைவி மற்றும் குழந்தையுடன் ஹரிஷ் கல்யாண்
தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார் நடிகர் ஹரிஷ் கல்யாண். இந்தப் படம் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் படங்களில் நடித்து வந்தார். ஆனால் பெரிய அளவில் அந்தப் படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறவில்லை. தொடர்ந்து படங்களில் பிசியாக வந்த நடிகர் ஹரிஷ் கல்யாண் சின்னத்திரையில் ஒளிபரப்பான பிக்பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியில் வைல்கார்ட் போட்டியாளராக களம் இறங்கினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றப் பிறகு தமிழ் சினிமா ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தார் நடிகர் ஹரிஷ் கல்யாண். அதனைத் தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் தமிழ் சினிமாவில் நாயகனாக நடித்தப் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பியார் ப்ரேமா காதல், ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு, ஓ மனப்பெண்ணே, பார்க்கிங், லப்பர் பந்து மற்றும் டீசல் என அனைத்துப் படங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றது தொடர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாண் தற்போது தாஷமக்கான் மற்றும் நூறு கோடி வானவில் ஆகியப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்:
சினிமவில் நடிகராக அறிமுகம் ஆன ஆரம்ப காலக்கட்டத்தில் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் சமீப காலமாக அவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் தமிழ் புத்தாண்டை கொண்டாடி வரும் நிலையில் ஹரிஷ் கல்யாண் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… தளபதி விஜயை தொடர்ந்து சூர்யாவை இயக்கும் எச்.வினோத்? விரைவில் வெளியாகும் அதிகாரப்பூர்வ அப்டேட்
நடிகர் ஹரிஷ் கல்யாண் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! 🌸✨
இப்படிக்கு,
Kriya, Narmada & Harish Kalyan ❤️🙏 pic.twitter.com/dQbZwIOoJK— Harish Kalyan (@iamharishkalyan) April 14, 2026
Also Read… தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்… மண்டாட்டி படத்தின் போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய சூரி