Happy Raj Movie: ‘துரு துரு’.. வெளியானது ஜி.வி.பிரகாஷ் குமாரின் ஹேப்பி ராஜ் பட செகண்ட் சிங்கிள்!
Happy Raj Movie Second Song: இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் நடிப்பில், தயாராகியுள்ள திரைப்படம்தான் ஹேப்பி ராஜ். இப்படமானது விரைவில் வெளியாக காத்திருக்கும் நிலையில், இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகிவருகிறது. அந்த வகையில் தற்போது இப்படத்திலிருந்து 2வது பாடலான துரு துரு என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஹேப்பி ராஜ் திரைப்படப் பாடல்
தென்னிந்திய சினிமாவில் சிறந்த மற்றும் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளராக அறியப்படுபவர் ஜி.வி.பிரகாஷ் குமார் (GV.Prakash Kumar). இவர் வெறும் இசையமைப்பாளராக மட்டுமில்லாமல், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் சினிமாவில் பணியாற்றிவருகிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் வித்தியாசமான ஸ்டோரியில் தயாராகியுள்ள படம்தான் “ஹேப்பி ராஜ்” (Happy Raj). இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா (Sri Gouri Priya) நடித்துள்ளார். இவர் தமிழில் லவ்வர் படத்தின் மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது ஜென்-ஜீ காதல் கதை மற்றும் இரு குடும்பத்திற்கும் இடையே நடக்கும் பிரச்சனைகளை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது.
இதை அறிமுக இயக்குநர் மரியா ராஜா எலாஞ்சியன் (Maria Raja Elanchezian) இயக்கியுள்ள நிலையில், ட்ரைடென்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கும் நிலையில், முதல் பாடல் ஏற்கனவே வெளியாகியிருந்தது. அதை தொடர்ந்து அப்பா மற்றும் மகனுக்கு இடையேயான பாசம் குறித்த “துரு துரு” (Thuru Thuru) என்ற 2வது பாடலானது தற்போது வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: நேரில் சந்தித்த இயக்குநர் சிஎஸ்அமுதன் – நடிகர் சிவா… வைரலாகும் புகைப்படம்
ஹேப்பி ராஜ் திரைப்படத்திலிருந்து வெளியான துரு துரு பாடல் குறித்த எக்ஸ் பதிவு:
A heartfelt melody for every father and son…#ThuruThuru from #HappyRaj out now..! ❤️✨
🎶 @justin_tunes
🎙️ #GangaiAmaran
✍️ @Lyricist_vivek @jaivarda04 @SureshJaikanth @gvprakash @actorabbas @srigouripriya @maria_raja_elan #GeorgeMaryan… pic.twitter.com/kqBqnSmJaH— Saregama South (@saregamasouth) March 10, 2026
ஹேப்பி ராஜ் திரைப்படத்தின் பட்ஜெட் :
இந்த ஹேப்பி ராஜ் திரைப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் மற்றும் ஸ்ரீ கௌரி பிரியாவுடன், நடிகர்கள் அப்பாஸ், ஜார்ஜ் மரியான், மதுரை முத்து, கீதா கைலாசம், அதிர்ச்சி அருண், பிரததனா நாதன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த் படமானது வரும் 2027 மார்ச் 27ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது. அந்த வகையில் தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் தொடங்கவுள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி… தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் ஜிவி பிரகாஷ் குமார்?
இப்படமானது கிட்டத்தட்ட ரூ 20 கோடி பட்ஜெட்டில் தயாராகியிருப்பதாக கூறப்படும் நிலையில், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் மூலம் நடிகர் அப்பாஸ் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சினிமாவில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் நடிகை ஸ்ரீ கௌரி பிரியாவின் தந்தையாக அவர் நடித்துள்ளார். இப்படத்தின் ரிலீஸ் தேதி கிட்ட நெருங்கும் நிலையில், இதன் ட்ரெய்லர் வரும் 2026ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி அல்லது அதற்கு முன் வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.