GV Prakash Kumar : 2வது முறையாக தேசிய விருதை வென்ற ஜி.வி பிரகாஷ் குமார்.. குவியும் வாழ்த்து!

Best Music Director Award : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் இசையமைப்பாளராகவும் இருந்து வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர் ஏற்கனவே சூரரைப்போற்று படத்திற்காகத் தேசியவிருதை வென்றிருந்தார். இதனையடுத்து 2வது முறையாக மீண்டும் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார். இதுகுறித்து விவரமாகப் பார்க்கலாம்.

GV Prakash Kumar : 2வது முறையாக தேசிய விருதை வென்ற ஜி.வி பிரகாஷ் குமார்.. குவியும் வாழ்த்து!

ஜி.வி. பிரகாஷ் குமார்

Published: 

01 Aug 2025 22:18 PM

கோலிவுட் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும், நடிகராகவும் இருந்து வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார் (GV Prakash kumar). இவர் தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தெலுங்கு போன்ற மொழிகளிலும் இசையமைப்பாளராகப் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவரின் இசையமைப்பில் பல படங்கள் உருவாகி வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வகையில் இவருக்குத் தேசிய விருதும் (National Film Award) கிடைத்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு வெளியான சூர்யாவின் (Suriya) சூரரைப்போற்று (soorarai pottru) திரைப்படத்திற்கு, இவர்தான் இசையமைத்திருந்தார். இந்த படத்திற்காகக் கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற, தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதைப் பெற்றிருந்தார். இந்நிலையில், மீண்டும் 2023ம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளர் விருது (Best Music Director Award) இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று 2025, ஆகஸ்ட் 1ம் தேதியில் நடைபெற்ற 71வது தேசிய திரைப்பட விருது (71st National Film Awards) அறிவிப்பில், 2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருது அறிவிக்கப்பட்டது. இதில் பல தமிழ் படங்களின் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் சிறந்த இசையமைப்பாளருக்கான அறிவிப்பில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷிற்கு அறிவிக்கப்பட்டிருந்தது. தனுஷின் (Dhanush) வாத்தி (Vaathi) படத்திற்காக, சிறந்த இசையமைப்பாளருக்கானத் தேசிய திரைப்பட விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 71வது தேசிய விருதுகள் அறிவிப்பு.. விருது வென்ற தமிழ் பிரபலங்கள்!

தேசிய விருது குறித்து ஜி.வி. பிரகாஷ் குமார் வெளியிட்ட பதிவு ;

வாத்தி திரைப்படம் :

கடந்த 2023ம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான திரைப்படம் வாத்தி. இந்த படத்தை தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியிருந்தார். தனுஷ் முன்னணி நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடித்திருந்தார். கடந்த 2023ம் ஆண்டு வெளியான இப்படமானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இப்படமானது வெற்றிப்படமாக அமைந்திருந்தது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.

இதையும் படிங்க : சிறந்த துணை நடிகர், சிறந்த திரைக்கதை, சிறந்த தமிழ் படம் – தேசிய விருதுகளை குவித்த ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங்

இப்படத்திலிருந்து வெளியான “ஒரு தல காதல தந்த” என்ற பாடல் தற்போது வரையிலும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த படத்திற்காகத்தான், இசையமைப்பாளர் ஜிவி. பிரகாஷ் குமார் இரண்டாவது முறையாகச் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை வென்றுள்ளார். 71வது தேசிய திரைப்பட விருது அறிவிப்பில், ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு வாத்தி படத்திற்காகச் சிறந்த இசையமைப்பாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் வெளியிட்ட வீடியோ  ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.