GV Prakash : செம ஹேப்பியில் ஜி.வி.பிரகாஷ் குமார்.. தேடி வந்த இன்னொரு விருது!
SIIMA Awards 2025 : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளராக இருந்து வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவரின் இசையமைப்பில் கடந்த 2024ம் ஆண்டு வெளியான பான் இந்திய படம் அமரன், இந்த படத்திற்காக சிறந்த இசையமைப்பாளாருக்கான சைமா விருதை வென்றுள்ளார், இது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜி.வி.பிரகாஷ் குமார்
கடந்த 2024ம் ஆண்டு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் (Rajkumar Periyasamy) இயக்கத்தில், வெளியான பயோ பிக் திரைப்படம்தான் அமரன் (Amaran). இந்த படமானது மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையினை, அடிப்படையாக கொண்டு வெளியாகியிருந்தது. இந்த படத்தில் முன்னணி ஹீரோவாக சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடித்திருந்தார். இவரின் நடிப்பில் வெளியான முதல் ஆக்ஷன் படமாக இந்த அமரன் படம் இருந்தது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்திருந்தார். சொல்லப்போனால், அமரன் படத்தில் சாய் பல்லவியின் (Sai Pallavi) கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் ரசிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் (G.V. Prakash Kumar) இசையமைத்திருந்தார்.
இந்த படத்தின் இசையமைப்பிற்காக பல பாராட்டுகளையும் இவர் பெற்றிருந்தார். இந்நிலையில், இந்த 2025ம் ஆண்டிற்கான சைமா (Siima) விருது வழங்கும் விழாவில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை (Best Music Director Award) வென்றுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : 2 நாட்களில் ரூபாய் 50 கோடி கலெக்ஷன்… மதராஸி படக்குழு வெளியிட்ட அப்டேட்
சைமன் சிறந்த இசையமைப்பாளார் விருதை வென்ற ஜி.வி. பிரகாஷ் வெளியிட்ட பதிவு :
Thanks siima for giving me the best music director award for #amaran . Thank you team #amaran . pic.twitter.com/jTCK2sVH1r
— G.V.Prakash Kumar (@gvprakash) September 7, 2025
தமிழ் சினிமாவில் ஏ.ஆர். ரஹ்மான், அனிருத் வகையில் பிரபலமான இசையமைப்பாளராக இருந்து வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவரின் இசையமைப்பில் தமிழில் பல படங்கள் வெளியாகியிருக்கிறது, மேலும் இவர் தளபதி விஜய் முதல் அஜித் குமார் வரை போன்ற உச்ச நடிகர்களின் படங்களிலும் இசையமைத்திருக்கிறார்.
இதையும் படிங்க : அஷ்வினாக அருண் விஜய்…. வெளியானது தனுஷின் இட்லி கடை பட அப்டேட்!
மேலும் இவர் தற்போது சினிமாவில் கதாநாயகனாகவும் கலக்கிவரும் நிலையில், இவரின் நடிப்பில் பிளாக்மெயில் என்ற படமானது வரும் 2025 செப்டம்பர் 12ம் தேதியில் வெளியாகவுள்ளது.
ஜி.வி. பிரகாஷின் பிளாக்மெயில் படம் :
இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில் தயாராகியுள்ள படம்தான் பிளாக்மெயில். இந்த படத்தில் நடிகர் ஜி.வி. பிரகாஷ் முன்னணி நாயகனாக நடிக்க, அவருடன் ஸ்ரீகாந்த், தேஜு அஷ்வினி, பிந்துமாதவி மற்றும் பாலா சரவணன் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது வரும் 2025, செப்டம்பர் 12ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.