மாமன் பட இயக்குநர் நடிக்கும் வாரண்ட் வெப் சீரிஸ் – அறிமுக டீசரை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் குமார்

Warrant Web Series Launch Teaser | தமிழ் சினிமாவில் இயக்குநராக மக்களிடையே அறிமுகம் ஆன இயக்குநர் பிரஷாந்த் பாண்டியராஜ் தற்போது கதையின் நாயகனாக நடித்து உள்ள வாரண்ட் என்ற் இணையதள தொடரின் அறிமுக டீசரை ஜிவி பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ளார்.

மாமன் பட இயக்குநர் நடிக்கும் வாரண்ட் வெப் சீரிஸ் - அறிமுக டீசரை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் குமார்

வாரண்ட்

Published: 

06 May 2026 18:23 PM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த 2017-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான புரூஸ் லீ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ். இந்தப் படத்தில் நடிகர் சிபி சத்யராஜ் நாயகனாக நடித்து இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றது. மேலும் இந்தப் படம் பெரிய அளவில் வெற்றியடையாத காரணத்தால் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து படங்களை இயக்கும் வாய்ப்பு பிரசாந்த் பாண்டிராஜுக்கு கிடைக்காமல் இருந்தது. இப்படி இருக்கும் சூழலில் கடந்த 2022-ம் ஆண்டு இயக்குநர் பாண்டிராஜ் ஜீ 5 தமிழ் ஓடிடி நிறுவனத்திற்காக நேரடியாக இணையதள தொடர் ஒன்றை எழுதி இயக்கி இருந்தார். விலங்கு என்று பெயர் வைக்கப்பட்ட அந்த தொடரில் நடிகர் விமல் கதையின் நாயகனாக நடித்து இருந்தார். இது நேரடியாக ஓடிடியில் வெளியாகி இருந்தாலும் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இயக்குநர் பாண்டிராஜ் நடிகர் சூரியை வைத்து மாமன் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படம் கடந்த 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து விலக்கு தொடரின் நீட்சியாக தற்போது வாரண்ட் என்ற இணையதள தொடர் உருவாகி உள்ளது. இந்த தொடரின் அறிகும டீசரை ஜி.வி.பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.

மாமன் பட இயக்குநர் நடிக்கும் வாரண்ட் வெப் சீரிஸ்:

இந்த தொடரின் மூலம் தமிழ் சினிமாவில் புதிய அவதாரம் எடுத்துள்ளார் பிரசாந்த் பாண்டிராஜ். மேலும் இந்த வாரண்ட் தொடரின் கதையை பிரசாந்த் பாண்டிராஜ் மற்றும் விக்னேஷ் நடராஜன் எழுதி உள்ள நிலையில் இயக்குநர் பணியையும் விக்னேஷ் நடராஜன் பார்த்துள்ளார். இந்த தொடரில் பிரசாந்த் பாண்டிராஜ் உடன் இணைந்து நடிகர்கள் பாலாஜி சக்திவேல், காளி வெங்கட், அருள் தாஸ், நம்ரிதா எம்வி, அருள் ஜோதி, சாயா தேவி, ஹலோ கந்தசாமி, மீனா, கௌசல்யா மற்றும் வையாபுரி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்த நிலையில் இந்த தொடரின் அறிமுக டீசர் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனர் ஆர்.பி.செளத்ரி சாலை விபத்தில் காலமானார்

ஜிவி பிரகாஷ் குமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Thalapathy Vijay: தமிழ் சினிமாவில் விஜய்யின் இடத்தை நிரப்பும் அடுத்த நடிகர் யார்? அந்த நடிகருக்குதான் அதிக வாய்ப்பு இருக்கு?

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..