Lucky Movie: நேரடியாக ஓடிடியில் வெளியாகும் ஜி.வி.பிரகாஷின் லக்கி படம்.. எப்போது? எதில் பார்க்கலாம்?
Lucky Movie Release Date: தென்னிந்திய சினிமாவில் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் கதாநாயகனாகவும் படங்களில் நடித்துவரும் நிலையில், இவரின் லக்கி என்ற படத்தின் ரிலீஸ் அறிவிப்பு வெளியாகியுள்ளது. நேரடியாக இப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகிறது என்பது குறித்து பார்க்கலாம்.

லக்கி தி சூப்பர் ஸ்டார்
பிரபல இசையமைப்பாளராக தென்னிந்திய சினிமாவை கலக்கிவருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார் (GV.Prakash Kumar). இவர் இசையமைப்பாளராக தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் சூர்யா (Suriya) வரை பல உச்ச நடிகர்களின் படங்களில் பணியாற்றியிருக்கிறார். அந்த விதத்தில் இவரும் தமிழ் மொழியில் தொடர்ந்து, கதாநாயகனாகவும் படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக தமிழில் “பிளாக்மெயில்” (Blackmail) என்ற திரைப்படமானது வெளியாகியிருந்தது. இந்த படமானது முற்றிலும் திரில்லர் கதைக்களத்தில் வெளியாகியிருந்த நிலையில், ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஓரளவு மட்டுமே வரவேற்பை கொடுத்திருந்தது. மேலும் கடந்த 2025ம் ஆண்டில் நடைபெற்ற தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் 2023ம் ஆண்டிற்கான சிறந்த இசையமைப்பாளர் என்ற விருதையும் பெற்று மேலும் பிரபலமானார்.
அந்த விதத்தில் இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்துவரும் நிலையில், இவரின் புது திரைப்படமான “லக்கி தி சூப்பர் ஸ்டார்” (Lucky The Superstar) என்ற படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் அனஸ்வரா ராஜன் (Anaswara Rajan) ஜோடியாக இணைந்து நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஜன நாயகன் படத்தில் 20 நிமிட காட்சிகள் நீக்கமா? – தயாரிப்பாளர் தனஞ்செயன் அதிரடி பதிவு!
ஜி.வி. பிரகாஷ் மற்றும் அனஸ்வரா ராஜனின் லக்கி பட ரிலீஸ் தேதி:
இந்த லக்கி திரைப்படத்தை அறிமுக இயக்குநர் உதய் மகேஷ் இயக்கியுள்ளார். இவர் பேமிலி மேன் என்ற வெப் சீரிஸில் செல்லம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த லக்கி படமானது நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது.
இதையும் படிங்க: சைக்கோ கொலையாளியாக மிரட்டும் மம்முட்டி… ஓடிடியில் வெளியாகியுள்ள கலம்காவல் படம் எப்படி இருக்கு?
இப்படமானது முற்றிலும் காதல் மற்றும் எமோஷனல் கதைக்களத்தில் அமைந்திருக்கும் நிலையில், வரும் 2026 பிப்ரவரி 20ம் தேதியில் “ஜியோ ஹாட்ஸ்டார்” ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ளது. தற்போது இது குறித்த அறிவிப்பை ஓடிடி நிறுவனமானது அறிவித்திருக்கும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது.
ஜி.வி. பிரகாஷ் குமாரின் லக்கி படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிக்கப்பட்ட பதிவு:
Meet the smallest superstar with the biggest impact 🌟🐕 | A direct OTT release after a long time 😍✨#HotstarSpecials #LuckyTheSuperstar streaming from Feb 20 only on #JioHotstar✨#LuckyTheSuperstarOnJioHotstar #LuckyTheSuperstarMovie #LuckyTheSuperstarMovieOnJHS… pic.twitter.com/QiDayZyPzy
— JioHotstar Tamil (@JioHotstartam) February 2, 2026
நடிகர் ஜி.வி. பிரகாஷின் நடிப்பில் தொடர்ந்து இந்த 2026ம் ஆண்டில் லக்கி படத்துடன் கிட்டத்தட்ட 4 படங்கள் வெளியாக காத்திருக்கிறது. அதில் ஹேப்பி ராஜ் மற்றும் மெண்டல் மனதில் போன்ற படங்களின் ஷூட்டிங் நிறைவடைந்து இறுதிக்கட்டத்தில் உள்ளது. இப்படங்களும் லக்கி படத்தின் ரிலீசிற்கு பின், தொடர்ந்து வெளியாகி மக்களிடையே வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.