Happy Raj: அச்சா.. ஆக்டிங் பகுத்தாச்சா… வெளியானது ஜி.வி.பிரகாஷின் ஹேப்பி ராஜ் படத்தின் ட்ரெய்லர்!

Happy Raj Movie Trailer: நடிகர் ஜி.வி. பிரகாஷின் நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்தில் வெளியாக காத்திருக்கும் படம்தான் ஹேப்பி ராஜ். இப்படமானது 2026 மார்ச் 27ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகும் நிலையில், இன்று (17/03/2026) இதன் ட்ரெய்லரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Happy Raj: அச்சா.. ஆக்டிங் பகுத்தாச்சா... வெளியானது ஜி.வி.பிரகாஷின் ஹேப்பி ராஜ் படத்தின் ட்ரெய்லர்!

ஹேப்பி ராஜ் திரைப்பட டிரெய்லர்

Updated On: 

17 Mar 2026 18:47 PM

 IST

அறிமுக இயக்குநர் மரியா ராஜா எலஞ்செழியன் (Maria Raja Elanchezhian) இயக்கத்தில், நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் (GV. Prakash Kumar) கதாநாயகனாக நடித்துள்ள புது திரைப்படம்தான் “ஹேப்பி ராஜ்” (Happy Raj). இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடித்துள்ள நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ கௌரி பிரியா (Sri Gouri Priya) நடித்துள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் லவ்வர் என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜோடியானது ஹேப்பி ராஜ் படத்தின் மூலம் முதல் முதலாக இணைந்துள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசடையமைக்க, பியோன்ட் பிக்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படமானது ஜி.வி. பிரகாஷ் குமாரின் “திரிஷா இல்லனா நயன்தாரா” படத்தின் வைப் போல இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்திலிருந்து பாடல்கள் டீசர் எல்லாம் வெளியாகிபடத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

அந்த வகையில் இப்படம் வரும் 2026 மார்ச் 27ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிறது. அந்த வகையில் அதை முன்னிட்டு இன்று 2026 மார்ச் 17ம் தேதியில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. முற்றிலும் வைப்பாக இருக்கும் இந்த ட்ரெய்லரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: லவ் டுடே படம் கொடுத்த அதே வைப் ஹேப்பி ராஜ் படம் கொடுத்தது – நடிகர் கவின்

நடிகர் தனுஷ் வெளியிட்ட ஜி.வி. பிரகாஷின் ஹேப்பி ராஜ் பட ட்ரெய்லர் குறித்த எக்ஸ் பதிவு:

ஹேப்பி ராஜ் பட ட்ரெய்லர் எப்படி இருக்கு:

இந்த ட்ரெய்லரில் காட்டியபடி, நடிகர் ஜி.வி. பிரகாஷ் ஹேப்பி ராஜ் என்ற வேடத்தில் நடித்துள்ளார். காதலுக்காக ஏங்கும் இவர், பல ரிஜெக்ஷனுக்கு பிறகு, நடிகை ஸ்ரீ கௌரி பிரியாவை காதலிக்கிறார். இவர்கள் திருமணத்தின்போது இரு குடும்பங்களுக்கு இடையே நடக்கும் தகராறை மையப்படுத்தியே இப்படத்தின் கதை அமைந்துள்ளது. இது ஆக்ஷன் காமெடி கதையில் அமைந்துள்ள நிலையில், ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு ஒரு ரீ-எண்ட்ரி படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹேப்பி ராஜ் பட நடிகர்கள்:

நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார், தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். இசையமைப்பாளராக இவர் தேசிய விருதுகளை பெற்றிருக்கும் நிலையில், தற்போது நடிகராகவும் முன்னேறி வருகிறார். அந்த வகையில் காமெடி, காதல் மற்றும் ஆக்ஷன் போன்ற படங்களை இவர் தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார்.

இதையும் படிங்க: ஹேப்பி ராஜ் படம் உங்களை அழவைக்கும், சிரிக்கவும் வைக்கும் – ஜி..வி. பிரகாஷ் குமார் பேச்சு!

அந்த வகையில் இந்த மூன்றும் கலந்து போல தயாராகியுள்ள படம்தான் ஹேப்பி ராஜ். இப்படமானது முழுக்க சிறப்பான வைப்பாக இருக்கும் என ட்ரெய்லரிலே தெரிகிறது. இதில் ஜி.வி. பிரகாஷுடன் ஸ்ரீ கௌரி பிரியா, அப்பாஸ் மற்றும் ஜார்ஜ் மரியான் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது பான் இந்திய படமாக தயாராகியுள்ள நிலையில், வரும் 2026 மார்ச் 27ம் தேதி முதல் வெளியாக காத்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு பின் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு இது மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்