GV Prakash: அஜித் சார் ஒரு கிரேட் எனர்ஜி.. புகழ்ந்து பேசிய ஜி.வி.பிரகாஷ் குமார்!
GV Prakash About Ajith: தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும், நாயகனாகவும் மக்கள் மத்தியில் பிரபலமானவராக இருப்பவர் ஜி.வி.பிரகாஷ் குமார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர், நடிகர் அஜித் குமார் மற்றும் அவரின் கார் ரேஸ் போட்டியை பார்த்தது குறித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

அஜித் குமார் மற்றும் ஜி.வி. பிரகாஷ்
தென்னிந்திய சினிமாவில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளராகவும், தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் இருந்துவருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார் (GV. Prakash Kumar). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்தில் படங்கள் தயாராகிவருகிறது. அந்த வகையில் இவர் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஹேப்பி ராஜ் (Happy Raj). இதை அறிமுக இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கியிருந்த நிலையில், எமோஷனல் மற்றும் வித்தியாசமான கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. ஜி.வி.பிரகாஷ் குமாரின் நடிப்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பின் இந்த ஹேப்பி ராஜ் படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இதையடுத்தும் புது படங்களில் இவர் நடித்துவருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்தனர். அப்போது மேடையில் பேசிய ஜி.வி.பிரகாஷ் குமார், அஜித் குமாரின் (Ajith Kumar) எனர்ஜி மற்றும் அவரின் கார் ரேஸ் (Car Race) குறித்த அனுபவம் பற்றி பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: மிஸ்டர் எக்ஸ் படம் இப்படிதான் இருக்கும் – நடிகர் கௌதம் ராம் கார்த்திக் பேச்சு
அஜித் குமார் குறித்து புகழ்ந்து பேசிய நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார்:
அந்த நிகழ்ச்சியின்போது பேசிய ஜி.வி.பிரகாஷ் குமார், “அஜித் சார் பயங்கரமான எனர்ஜி. அவர் ரேஸ் பண்ணதை துபாயில் நேரில் பார்த்தேன். அவரே என்னை அழைத்தார். துபாய்கு பொய் நேரில் சென்று அவரின் கார் ரேஸை பார்த்தேன். எனக்கு புது விதமான அனுபவமாக இருந்தது. பாடகர்களான நம்மக்கு எவ்வாறு ஒரு கான்சர்ட் ஒரு அனுபவமாக இருக்குமோ, அதுபோல இருந்தது.
இதையும் படிங்க: உமாபதி ராமையா இயக்கத்தில் பொலிட்டிகல் சட்டையர் பாணியில் வெளியான TN 2026 படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
அங்கு சென்று அவரின் ரேஸ் ட்ராக், அவரை கார் ஓட்டுறது எல்லாமே பார்ப்பதற்கு நன்றாக இருந்த்தது. அஜித் சார் அவரின் பேஷனை பண்ணிட்டு இருக்காரு. அவருக்கு ஒரு சக்திவாய்ந்த எனர்ஜி இருக்கு. அஜித் சாரை பொறுத்தவரையில் அவரை பார்க்க வருபவர்களை நன்றாக பார்த்துக்கொள்வார். நான் அவரை சந்திக்க போகும்போது, சாப்பிட்டீங்களா? என பயங்கரமாக கவனிப்பாரு” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.
அஜித்தின் குட் பேட் அக்லி படம் குறித்து ஜி.வி. பிரகாஷ் குமார் வெளியிட்ட பதிவு:
One Year of #GoodBadUgly 💥 Thanks everyone for the overwhelming response till date. It’s always special working with #AjithKumar sir ❤️ pic.twitter.com/e87ad6rFXz
— G.V.Prakash Kumar (@gvprakash) April 10, 2026
ஜி.வி. பிரகாஷ் குமார் தற்போது புதிய படங்களின் ஷூட்டிங்கில் பிசியாக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் இம்மார்ட்டல், மெண்டல் மனதில், ஆயிரம் ஜென்மங்கள், 4ஜி, காதலிக்க யாருமில்லை என பல படங்கள் திறக்கிவருகிறது. இப்படங்கள் தொடர்ந்து ஒன்றின் பின் ஒன்றாக வெளியாகும் என கூறப்படுகிறது.