யூடியூபில் புதிய சாதனை படைத்தது கோல்டன் ஸ்பாரோ பாடல் – ரசிகர்களிடையே கவனம் பெறும் படக்குழு வெளியிட்ட போஸ்ட்

Golden Sparrow Video Song | நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இந்தப் படத்தில் இருந்து வெளியான கோல்டன் ஸ்பாரோ பாடல் வீடியோ யூடியூபில் புது சாதனைப் படத்துள்ளது.

யூடியூபில் புதிய சாதனை படைத்தது கோல்டன் ஸ்பாரோ பாடல் - ரசிகர்களிடையே கவனம் பெறும் படக்குழு வெளியிட்ட போஸ்ட்

கோல்டன் ஸ்பாரோ பாடல்

Updated On: 

25 Sep 2025 20:14 PM

 IST

நடிகர் தனுஷ் (Actor Dhanush) இயக்கத்தில் மூனறாவதாக வெளியான படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இந்தப் படத்தின் தனுஷின் உடன் பிறந்த அக்காவின் மகன் பவிஷ் இந்தப் படத்தின் நாயகனாக நடித்து இருந்தார். இது இவர் நாயகனாக அறிமுகம் ஆன முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நாயகியாக நடிகை அனிகா சுரேந்திரன் நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், ஆர். சரத்குமார, வெங்கடேஷ் மேனன், ரபியா கட்டூன், ரம்யா ரங்கநாதன், ஆடுகளம் நரேன், சித்தார்த்த சங்கர், சரண்யா பொன்வண்ணன், டாக்டர் கார்த்திக் ஆஞ்சநேயன், ஸ்ரீதேவி, உதய் மகேஷ், அக்ஷய் கிருஷ்ணா ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

இளம் தலைமுறையினரின் காதல் கதையை மையமாக வைத்து உருவான இந்தப் படம் கடந்த 21-ம் தேதி பிப்ரவரி மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகரக்ளிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகரக்ளிடையே நல்லவரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

200 மில்லியன் பார்வைகளை கடந்தது கோல்டன் ஸ்பாரோ பாடல் வீடியோ:

இந்த நிலையில் படம் வெளியாவதற்கு முன்பே கோல்டன் ஸ்டாரோ பாடலின் லிரிக்கள் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் வெளியீட்டிற்கு பிறகு பாடலின் வீடியோ வெளியானது. இது தற்போது யூடியூபில் 200 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இது குறித்து படக்குழு அறிவிப்பு வீடியோவை வெளியிட்டு மகிழ்ச்சியை தெரிவித்துள்ளது.

Also Read… ஃபீல் குட் படம் பார்க்க நினைக்கிறீங்களா? அப்போ நெட்ஃபிளிக்ஸில் இந்த கிலோமீட்டர்ஸ் அண்ட் கிலோமீட்டர்ஸ் படத்தை பாருங்க

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ‘AK64’ படம் பற்றி சிறப்பான அப்டேட் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன்.. மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள்!