Thiruvasagam Song: ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகியுள்ள ‘திருவாசகம்’ பாடல் வெளியீடு!
GV Prakash Kumars Thiruvasagam Song : தென்னிந்திய சினிமாவில் சிறந்த இசையமைப்பாளராக இருப்பவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர் சமீபத்தில் திருவாசகம் பாடலை பிரதமர் நரேந்திர மோடியின் முன்னிலையில் பாடியிருந்த நிலையில், அந்த பாடலை தற்போது இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் திருவாசகம் பாடல்
தமிழ் சினிமாவில் சிறந்த இசையமைப்பாளர் மற்றும் நடிகராக இருப்பவர் ஜி.வி.பிரகாஷ் குமார் (G.V.Prakash Kumar). இவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிகராக படங்களில் நடித்துவரும் நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களுக்கு இசையமைத்துவருகிறார். இவரின் இசையமைப்பில் தமிழ் சினிமாவில் பல பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இவர் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். அந்த விதத்தில் இவரின் 100வது படமாக சமீபத்தில் பராசக்தி (Parasakthi) என்ற படமானது வெளியாகியிருந்தது. இந்த படமானது மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகியிருந்த நிலையில், கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது.
அந்த வகையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டெல்லியில் (Delhi) நடந்த பொங்கல் கொண்டாட்ட விழாவில், பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi) கலந்துகொண்டிருந்தார். அந்த விழாவில் ஜி.வி.பிரகாஷ், “திருவாசகம்” (Thiruvasagam) பாடலை இசையமைத்து பாடி அசத்தியிருந்தார். இந்நிலையில் தற்போது அந்த படலை இணையத்திலும் பகிர்ந்துள்ளார். இது தொடர்பான எக்ஸ் பதிவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது.
இதையும் படிங்க: கவின் – பிரியங்கா மோகன் படத்தில் இணையும் பிரபல நடிகை… யார் தெரியுமா?
திருவாசகம் பாடல் ரிலீஸ் குறித்து ஜி.வி. பிரகாஷ் குமார் வெளியிட்ட எக்ஸ் பதிவு :
It’s a special feeling to revisit a generational ode to Lord Shiva.
Happy to bring you #Thiruvasagam.
Streaming on all your favorite platforms now.
— G.V.Prakash Kumar (@gvprakash) January 22, 2026
திருவாசகம் என்பது இந்து கடவுளான சிவனை நினைத்து சிவனடியாராக மாணிக்கவாசகர் எழுதிய பாடல். இந்த பாடலின் வரிகளை இசையமைத்து ஜி.வி.பிரகாஷ் குமார் 2026ம் ஆண்டு டெல்லியில் நடந்த பொங்கல் பண்டிகையில் பாடியிருந்தார். தற்போது அந்த பாடலை இணையத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜி.வி. பிரகாஷின் புது படங்கள் :
கடந்த 2025ம் ஆண்டில் நடந்த தேசிய விருது வழங்கும் விழாவில், 2023ம் ஆண்டிற்கான சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு கிடைத்திருந்தது. இதனால் இவருக்கும் இசையமைப்பாளராக பல படங்களில் வாய்ப்புகள் கிடைத்திருந்தது. தமிழ் முதல் தெலுங்கு வரை கிட்டத்தட்ட 8-க்கும் மேற்பட்ட படங்களை தனது கைவசம் வைத்துள்ளார். மேலும் நடிகராகவும் யோவர் தமிழில் நடித்துவரும் நிலையில், இவரின் நடிப்பில் இம்மார்ட்டல், ஹேப்பி ராஜ், மெண்டல் மனதில் உள்ளிட்ட பல படங்கள் தயாராகிவருகிறது.
இதையும் படிங்க: சிம்புக்கு நோ.. சிவகார்த்திகேயனுக்கு எஸ்.. SK-வுடன் புது படத்தில் இணையும் பார்க்கிங் பட இயக்குநர்?
இதில் இந்த 2026ம் ஆண்டில் இம்மார்ட்டல் மற்றும் ஹேப்பி ராஜ் போன்ற படங்கள் வெளியாகும் என கூறப்படுகிறது. இதில் இம்மார்ட்டல் படத்தின் அறிவிப்பு ப்ரோமோ சமீபத்தில் வெளியாகியிருந்த நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.