தணல் முதல் பாம் வரை… இந்த வாரம் திரையரங்கில் வெளியாகும் படங்களில் லிஸ்ட் இதோ

Theatre Release Movies Tomorrow : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் முன்னணி நடிகர்கள் அல்லது அடுத்த நிலையில் உள்ள நடிகர்களின் படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. இந்த நிலையில் இந்த வாரம் வெளியாக உள்ள படங்களின் பட்டியல் குறித்து தற்போது பார்க்கலாம்.

தணல் முதல் பாம் வரை... இந்த வாரம் திரையரங்கில் வெளியாகும் படங்களில் லிஸ்ட் இதோ

படங்கள்

Published: 

11 Sep 2025 15:38 PM

 IST

தணல்: நடிகர் அதர்வா (Actor Atharva) நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் தணல். இவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான டிஎன்ஏ படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது உருவாகியுள்ள இந்தப் படத்தின் மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகின்றது. இந்தப் படத்தில் நடிகர் அதர்வா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்குநர் ரவீந்த்ர மாதவா எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் அதர்வா உடன் இணைந்து நடிகர்கள் லாவண்யா திருபாதி, அஸ்வின், ஷா ரா, பரணி, அழகம் பெருமாள், செல்வா, போஸ் வெங்கட் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். படம் நாளை செப்டம்பர் மாதம் 12-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தணல் படத்தின் ட்ரெய்லர் இதோ:

ப்ளாக் மெயில்: இயக்குநர் மு. மாறம் எழுதி இயக்கியுள்ள படம் ப்ளாக் மெயில். இந்தப் படத்தில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தி பணிகள் முன்னதாகவே முடிவடைந்த நிலையில் தொடர்ந்து படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு பின்பு தேதி ஒத்திவைக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. இந்த நிலையில் இறுதியாக இந்தப் படத்தின் வெளியீட்டைப் படக்குழு உறுதி செய்துள்ளது. அதன்படி படம் நாளை செப்டம்பர் மாதம் 12-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ப்ளாக் மெயில் படத்தின் ட்ரெய்லர் இதோ:

குமார சம்பவம்: சின்னத்திரையில் நாயகனாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் குமரன் தங்கராஜ். இவர் தற்போது நாயகனாக வெள்ளித்திரையில் அறிமுகம் ஆகியுள்ள படம் குமார சம்பவம். இந்தப் படத்தில் நடிகர் குமரன் தங்கராஜ் உடன் இணைந்து நடிகர்கள் பாயல் ராதாகிருஷ்ணா, ஜி.எம். குமார், குமரவேல், பால சரவணன், வினோத் சாகர், லிவிங்ஸ்டன், வினோத் முன்னா, சிவ அரவிந்த், கௌதம் சுந்தரராஜன், அர்ஜை, சார்லஸ் வினோத், விஜய் ஜாஸ்பர், சரவணன், கே. கோபால், டெலிபோன் ராஜ், சக்தி பாலாஜி கிருஷ்ணராஜ், வி. தரணி, கவிதா, ஷ்ரவன் ராமகிருஷ்ணன், யஷ்வன் ராமகிருஷ்ணன் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படம் நாளை செப்டம்பர் மாதம் 12-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

குமார சம்பவம் படத்தின் ட்ரெய்லர் இதோ:

பாம்: நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் வித்யாசமான கதைக்களத்தில் தற்போது உறுவாகியுள்ள படம் பாம். சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற படத்தை இயக்கிய இயக்குநர் விஷால் வெங்கட் இந்தப் படத்தை இயக்கி இருந்தார். காமெடியை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இதில் நடிகர்கள் காளி வெங்கட், ஷிவாத்மிகா ராஜசேகர், அபிராமி, நாசர், சிங்கம்புலி, பால சரவணன், டிஎஸ்கே, பூவையார் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் நாளை செப்டம்பர் மாதம் 12-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

பாம் படத்தின் ட்ரெய்லர் இதோ: