பறந்து போ முதல் 3 BHK வரை… கோலிவுட்டில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
Kollywood Movies: தமிழ் சினிமாவில் 2025-ம் ஆண்டு இந்த ஜூலை மாதம் தொடங்கிய முதல் வாரமே திரையரங்குகளில் வெளியாக படங்கள் வரிசைக் கட்டி காத்திருக்கின்றது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக உள்ள படங்களின் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

படங்கள்
பறந்து போ: இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர் சிவா நாயகனாக நடித்த படம் பறந்து போ. அப்பா மற்றும் மகன் இடையே நடக்கும் பாசப்போராட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் பிரபல மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனி நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படம் இவர் தமிழ் சினிமாவில் நடிக்கும் முதல் படம் ஆகும். மேலும், இந்தப் படத்தில் நடிகை அஞ்சலி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து மிகவும் எதார்த்தமான படமாக இந்தப் படம் இருக்கும் என்று படத்தை பார்த்தவர்கள் தங்களது விமர்சனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்தப் படம் வருகின்ற ஜூலை மாதம் 4-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
பறந்து போ படத்தின் ட்ரெய்லர்:
பீனிக்ஸ்: நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நாயகனாக நடித்துள்ள படம் பீனிக்ஸ். இந்தப் படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகியுள்ளார். மேலும் இந்தப் படத்தை ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கி உள்ளார். இவர் இயக்குநராக அறிமுகம் ஆவது இந்தப் படத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக்ஷன் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர் சூர்யா சேதுபதி உடன் இணைந்து நடிகர்கள் சம்பத், வரலட்சுமி சரத்குமார், தேவ தர்ஷினி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படம் வருகின்ற ஜூலை மாதம் 4-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
பீனிக்ஸ் படத்தின் ட்ரெய்லர்:
அஃகேனம்: நடிகர்கள் கீர்த்தி பாண்டியன் மற்றும் அருண் பாண்டியன் முன்னணி வேடத்தில் நடித்துள்ள படம் அஃகேனம். இந்தப் படத்தை இயக்குநர் உதய் கே இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார். மேலும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஆதித்யா ஷிவ்பிங்க், ஆதித்யா மேனன், பிரவீன் ராஜா, ரமேஷ் திலக், சீதா, ஜி.எம். சுந்தர் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். படம் வருகின்ற ஜூலை மாதம் 4-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அஃகேனம் படத்தின் ட்ரெய்லர்:
3 BHK: நடிகர் சித்தார்த் நாயகனாக நடித்து தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் 3 BHK. இந்தப் படத்தை இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கி உள்ளார். இவர் முன்னதாக 8 தோட்டாக்கள் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தார்.
இந்தப் படத்தில் நடிகர் சித்தார்த் உடன் இணைந்து நடிகர்கள் சரத்குமார், யோகிபாபு, மீத்தா ரகுநாத், தேவயானி என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். மேலும் படம் வருகின்ற ஜூலை மாதம் 4-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.