OTT Update : தனுஷின் குபேரா முதல் அதர்வாவின் டிஎன்ஏ வரை… இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் லிஸ்ட்!

This Week OTT Release Movies : தமிழ் சினிமாவில் திரைப்படங்கள் திரையரங்குகளில் பார்ப்பதை விடவும் , மக்கள் ஓடிடியில் பார்த்து மகிழ்கின்றனர் . அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் தமிழ்த் திரைப்படங்கள், என்னென்ன என்பதைப் பற்றிப் பார்க்கலாம். மேலும் அவைகள் எந்த ஓடிடியில் வெளியாகியுள்ளது என்பதைப் பற்றியும் விவரமாகக் காணலாம்.

OTT Update : தனுஷின் குபேரா முதல் அதர்வாவின் டிஎன்ஏ வரை... இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் லிஸ்ட்!

குபேரா மற்றும் டிஎன்ஏ திரைப்படம்

Published: 

19 Jul 2025 21:12 PM

குபேரா திரைப்படம் : நடிகர் தனுஷின் (Dhanush) நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் குபேரா (Kuberaa). பிரபல தெலுங்கு  இயக்குநர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் இப்படமானது கடந்த 2025, ஜூன் 20ம் தேதியில் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் நடிகர் தனுஷ் பிச்சைக்காரனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் நாகார்ஜுனா நடித்திருந்தார். இந்த படமானது அரசியல் மற்றும் ஆக்ஷ்ன் திரில்லர் கதைக்களத்துடன் வெளியாகியிருந்தது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்த படமானது தெலுங்கு , தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகியிருந்தது.

திரையரங்கு ரிலீஸில் இப்படமானது மொத்தம் சுமார் ரூ. 132 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இந்நிலையில், இப்படமானது வெளியாகி 1 மாதமான நிலையில், ஓடிடியில் வெளியாகியுள்ளது. அமேசான் ப்ரைம் வீடியோவில் (Amazon Prime Video) கடந்த 2025, ஜூலை 18ம் தேதி முதல் வெளியாகிவருகிறது.

இதையும் படிங்க : 2025-ம் ஆண்டில் இதுவரை நெட்ஃபிளிக்ஸில் வெளியான தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ

குபேரா ஓடிடி ரிலீஸ் பதிவு :

அதர்வாவின் டிஎன்ஏ திரைப்படம் :

நடிகர் அதர்வாவின் முன்னணி நடிப்பில் இறுதியாக வெளியான படம் டிஎன்ஏ . இந்தப் படத்தைத் தமிழ் பிரபல இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியிருந்தார். இந்த படமானது முற்றிலும் காதல் மற்றும் க்ரைம் திரில்லர் கதைக்களத்துடன் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் முன்னணி வேடத்தில் நடிகை நிமிஷா சஜயன் நடித்திருந்தார். இந்த படமானது ஒரு குழந்தையை விற்று நகரும் கதைக்களமாகும்.

இதையும் படிங்க :  துருவ் விக்ரமின் ‘பைசன்’.. தமிழ்நாடு ரிலீஸ் உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்!

கடந்த 2025, ஜூன் 20ம் தேதியில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. மேலும் சுமார் ரூ. 10 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த படமானது வெளியாகி சுமார் 4 வாரங்ககளை கடந்த நிலையில், இன்று 2025, ஜூலை 19ம் தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது. திரையரங்கைத் தொடர்ந்து ஓடிடியிலும் இந்த க்ரைம் திரில்லர் படம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

படை தலைவன் திரைப்படம்

நடிகர் விஜயகாந்த்தின் மகன், சண்முக பாண்டியனின் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியிருந்த திரைப்படம் படை தலைவன். இந்தப் படமானது முற்றிலும் மலைவாழ் கிராமத்துக் கதைக்களத்துடன் மிக பிரம்மாண்டமாக வெளியாகியிருந்தது. இந்த படத்தை இயக்குநர் அன்பு இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர் விஜயகாந்த்தின் ஏ.ஐ. காட்சிகளும் பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்த படமானது டெண்ட்கொட்டா என்ற ஓடிடியில் கடந்த 2025, ஜூலை 18ம் தேதி முதல் வெளியாகி வருகிறது.

மனிதர்கள் திரைப்படம்

தமிழில் அறிமுக இயக்குநர் ராம் இந்திரா இயக்கத்தில் வெளியான படம் மனிதர்கள். இந்த திரைப்படத்தில் பெண்களே இல்லாத திரில்லர் திரைப்படமாகும். இப்படத்தை ஸ்டூடியோ மூவிங் டர்டில் மற்றும் ஸ்ரீ கிரிஷ் பிக்சைஸ் போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தார். இந்த படமானது முற்றிலும் ஹாரர் பாடமாகவும், நகைச்சுவை படமாகவும் வெளியாகியிருந்தது. இந்நிலையில், தற்போது திரையரங்குகளைத் தொடர்ந்து, ஆஹா ஓடிடியில் கடந்த 2025, ஜூலை 18ம் தேதி முதல் வெளியாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.