தடையை மீறிய பிக்பாஸ் அர்ச்சனா ரவிச்சந்திரன்… விசாரணையில் வனத்துறையினர்
Bigg Boss Tamil 7 winner Archana Ravichandran: பிக்பாஸ் தமிழ் சீசன் 7 டைட்டில் வின்னரான அர்ச்சனா ரவிசந்திரன் தடையை மீறி அண்ணாமலையார் கோவில் மலையை ஏறியதாக புகார் எழுந்துள்ள நிலையில் வனத்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் அர்ச்சனா
தமிழ் சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி பாகம் 2 சீரியல் மூலம் தமிழக மக்களிடையே அறிமுகம் ஆனவர் அர்ச்சனா ரவிச்சந்திரன். இவர் இந்த சீரியலில் வில்லியாக நடித்து இருந்தார். ஒரு வில்லிக்கு இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளமா என்பது போல வில்லியாக நடிக்கும் போதே தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார் அர்ச்சனா ரவிச்சந்திரன். இந்த சீரியலில் இருந்து இவர் வெளியேறிய பிறகு தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன்படி பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்கார்ட் போட்டியாளராக பங்கேற்ற அர்ச்சனா ரவிச்சந்திரன் அந்த சீசனில் வெற்றியாளராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் தமிழ் வரலாற்றில் முதன் முறையக வைல்கார்ட் போட்டியாளர் வெற்றிப் பெற்றது அந்த 7-வது சீசனில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சீசனில் அர்ச்சனா வெற்றிப்பெற முக்கியக் காரணம் ரெட் கார்ட் பெற்ற பிரதீப் ஆண்டனி என்றே சொல்லலாம். ஏன் என்றால் வைல்கார்ட் போட்டியாளராக வந்த அர்ச்சனா பிரதீப்பிற்கு ஆதவராக தொடர்ந்து பேசியதே மக்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதன் காரணமாகவே அவர் டைட்டிலை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் கடந்த 2024-ம் ஆண்டு வெளியான டீமாண்டி காலணி 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணாமலையார் கோவிலில் தடையை மீறிய பிக்பாஸ் அர்ச்சனா ரவிச்சந்திரன்:
இந்த நிலையில் சமீபத்தில் நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன் மற்றும் நடிகர் அருண் குமார் இருவருக்கும் திருமண நிச்சயம் நடைப்பெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன் அண்ணாமலையார் கோவிலில் வனத்துறையினரிடம் அனுமதி பெறாமல் தடை மீறி மலை உச்சிவரை சென்று வந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு மலையேறிய அனுபவம் குறித்து பதிவிட்டு இருந்தார்.
Also Read… நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியானது ரவுடி & கோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
மேலும் அந்தப் பதிவில் அவர் பிறரை மலையேற ஊக்குவிப்பது தொடர்பாகவும் பேசியுள்ளார். அனுமதி இல்லாமல் மலையேறியது மட்டும் இன்றி மற்றவர்களையும் மலையேற ஊக்குவிப்பது குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் இது தொடர்பாக தற்போது வனத்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.