ட்ரெய்ன் படத்திலிருந்து வெளியானது கன்னக்குழிக்காரா பாடலின் லிரிக்கள் வீடியோ!

Kannakuzhikaaraa Song Lyrical Video | தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் டிரெய்ன். இந்தப் படத்தில் இருந்து இன்று கன்னக்குழிக்காரா படத்தின் லிரிக்கள் வீடியோவை வெளியிட்டுள்ளது.

ட்ரெய்ன் படத்திலிருந்து வெளியானது கன்னக்குழிக்காரா பாடலின் லிரிக்கள் வீடியோ!

கன்னக்குழிக்காரா பாடலின் லிரிக்கள் வீடியோ

Published: 

23 Dec 2025 19:52 PM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான லவ் பர்ட்ஸ் என்ற படத்தின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார் நடிகர் விஜய் சேதுபதி. இந்தப் படத்தில் பெயரிடப்படாகத கதாப்பாத்திரத்தில் நடித்த இவர் தொடர்ந்து 2004-ம் ஆண்டு வரை சின்ன சின்ன வேடங்களிலேயே நடித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான புதுப்பேட்டை படத்தில் இருந்து நடிப்பில் அடுத்தக்கட்டமாக பலப் படங்களில் நாயகன்களின் நண்பனாக நடித்தார் விஜய் சேதுபதி. சின்ன சின்ன வேடங்களில் நடிக்கும் போதே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து 2010-ம் ஆண்டு வெளியான தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் கதையின் நாயகனாக சினிமாவில் அறிமுகம் ஆனார். இந்தப் படத்தின் வரவேற்பைப் தொடர்ந்து அடுத்தடுத்துப் பலப் படங்களில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார் நடிகர் விஜய் சேதுபதி. தொடர்ந்து பலப் படங்களில் நாயகனாக நடித்தாலும் அவ்வபோது முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாகவும் கலக்கி வருகிறார்.

இந்த நிலையில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தெலுங்கு, இந்தி, மலையாளம் என பான் இந்திய மொழிப் படங்களிலும் வில்லன் மற்றும் நாயகன் என்று கலக்கி வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு மட்டும் திரையரங்குகளில் இதுவரை ஏஸ் மற்றும் தலைவன் தலைவி என இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் டிரெய்ன்.

வெளியானது கன்னக்குழிக்காரா பாடலின் லிரிக்கள் வீடியோ:

இயக்குநர் மிஷ்கின் எழுதி, இயக்கி, இசையமைத்துள்ள படம் டிரெய்ன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது வெளியீட்டிற்கான பணிகள் நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள நிலையில் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி உடன் இணைந்து நடிகர்கள் நாசர் மற்றும் ஸ்ருதி ஹாசன் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து கன்னக்குழிக்காரா என்ற பாடலின் லிரிக்கள் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

Also Read… ‘உலகின் தலைசிறந்த சொல்.. செயல்’ – திரையரங்குகளில் வெளியாகி 8 ஆண்டுகளைக் கடந்தது வேலைக்காரன் படம்

டிரெய்ன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தல பதிவு:

Also Read… நான் இப்படியிருக்க விஜய் சார்தான் காரணம்.. அவருக்கு நன்றி கடன்பட்டிருக்கிறேன்- தயாரிப்பாளர் லலித் குமார் பேச்சு!

கடத்தியவரின் ஸ்மார்ட் வாட்சை பயன்படுத்தி தப்பித்த இளைஞர் - என்ன நடந்தது?
விமான நிலையங்களில் கைவிடப்பட்ட பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் இளைஞர்
11 மாத வாடகை ஒப்பந்தம் முடிந்தும் வீட்டை காலி செய்ய மறுக்கும் வாடகையாளர்
2026ல் இந்த ஆபத்துகள் பூமியில் ஏற்படலாம்.. அதிர்ச்சி தரும் பாபா வங்காவின் கணிப்புகள்..