கோபம்.. கொந்தளிப்பு.. அனல் பறக்கும் மலையாள பிக்பாஸ்.. மோகன்லாலை பின்தொடர்வாரா விஜய்சேதுபதி?
Bigg Boss : பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியை முதலில் இந்தி சினிமாவில் தொடங்கினர். அங்கு பல வருடங்களாக ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு முதல் தென்னிந்திய மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி நடத்தப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மோகன்லால் - விஜய் சேதுபதி
இந்தி சினிமாவில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி தற்போது 19-வது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றது. இந்தியாவில் இந்தி சினிமாவில் தான் முதன் முதலாக ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்தியில் மட்டும் இன்றி மற்ற மொழிகளிலும் உள்ள ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற தொடங்கியதை அடுத்து கடந்த 2017-ம் ஆண்டு தென்னிந்திய மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கினர். அதன்பதி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்ட போது இந்தியில் முன்னணி நடிகர் சல்மான் கான் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது போல தமிழில் உலக நாயகன் கமல் ஹாசன், தெலுங்கு சினிமாவில் நாகர்ஜுனா, கன்னட சினிமாவில் நடிகர் கிச்சா சுதீப் தொகுத்து வழங்குகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 7 சீசன்களாக தமிழ் சினிமாவில் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் தனது சொந்த வேலை காரணமாகவும் படங்களில் பிசியாக நடித்து வருவதாலும் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியவில்லை என்று இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து யார் தொகுப்பாளராக இருப்பார்கள் என்று தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி விஜய் சேதுபதி கமல் ஹாசனை போல மழுப்பலாக இல்லாமல் போட்டியாளர்களிடம் கண்டிப்பாக நடந்துகொள்வார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் மீதும் தமிழ் ரசிகர்கள் அதிர்ப்த்தியை வெளிப்படுத்தினர். இந்த நிலையில் வருகின்ற அக்டோபர் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்க உள்ளது.
மலையாள பிக்பாஸில் மாஸ் காட்டும் மோகன்லால்:
இந்த நிலையில் மலையாள சினிமாவில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து 3 வாரங்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிலையில் மலையாளத்தில் பிக்பாஸ் போட்டியாளர்கள் செய்யும் தவறுகளை மோகன்லால் முகத்திற்கு நேராக மிகுந்த கோபத்துடன் கேட்கிறார்.
மேலும் எந்தவித மழுப்பலும் இல்லாமல் தவறு செய்யும் போட்டியாளர்களை கண்டித்து வருகிறார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் மோகன்லால் மாதிரி தமிழில் நடிகர் விஜய் சேதுபதி தவறு செய்யும் போட்டியாளர்களை கண்டித்து பேசுவாரா அல்லது முன்பு போலவே மழுப்பலாக பேசுவாரா என்று தமிழ் மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Also Read… அனிகா சுரேந்திரனின் செலிபிரிட்டி க்ரஸ் யார் தெரியுமா? அவரே சொன்ன விசயம்!
இணையத்தில் வைரலாகும் மோகன்லாலின் வீடியோ:
“Whether someone is straight, lesbian, or gay, it’s their choice. Everyone has the right to live their life as they see fit. No one should be questioned about it; first, respect humans. @Mohanlal Sir, the way you handled this is truly amazing! 🖤🔥#BiggBossMalayalam” pic.twitter.com/pNVOPNoTHE
— Ꮇᴀᴅʜᴀɴ (@_MadhanKMurali) September 14, 2025
Also Read… சார்பட்டா படத்தில் டான்ஸிங் ரோஸ் கேரக்டர் குறித்து நெகிழ்ந்து பேசிய ஷபீர்!