Entertainment News Live Updates: சூர்யாவின் கருப்பு படம் குறித்து ஆர்.ஜே. பாலாஜி அப்டேட்!
Entertainment News in Tamil, 17 July 2025, Live Updates: தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரனுக்கு மும்பை போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. பங்குச் சந்தையில் அதிக லாபம் பெற்றுத் தருவதாக மும்பையில் அஜய் ஜெகதீஷ் கபூர் என்பவரிடம் ரூ. 5.24 கோடி மோசடி செய்த வழக்கில் மும்பை போலீஸ் ரவீந்தரை சென்னையில் கைது செய்ய வந்துள்ளனர்.

LIVE NEWS & UPDATES
-
Stunt Master Mohanraj’s death: ஸ்டண்ட் செய்து யாரும் உயிரிழக்கக்கூடாது.. பாகுபலி ஸ்டண்ட் கலைஞர் லீ விட்டேக்கர் கருத்து!
பாகுபலி படத்தில் பணியாற்றியதற்காக அறியப்பட்ட ஸ்டண்ட் ஒருங்கிணைப்பாளர் லீ விட்டேக்கர், பா.ரஞ்சித்தின் படத்தில் உயிரிழந்த ஸ்டண்ட் கலைஞர் மோகன் ராஜ் இறப்பு குறித்து பேசியுள்ளார். அதில், “ஸ்டண்ட் செய்து யாரும் உயிரிழக்கக்கூடாது. கலைஞர் மற்றும் குழுவினரின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் உயர் தரங்களுடன் இருக்க வேண்டும். அப்படி, இல்லையென்றால், ஸ்டண்ட் ஒருபோது நடக்கக்கூடாது. தயாரிப்பு நிறுவனத்திடம் போதுமான நிதி இல்லை என்றால், இப்படியான ஸ்டண்ட்கள் ஒருபோதும் நடக்கக்கூடாது” என்று தெரிவித்தார்.
-
Karuppu Movie Update: சூர்யாவின் கருப்பு படம் குறித்து ஆர்.ஜே. பாலாஜி அப்டேட்!
நடிகர் சூர்யாவின் 45வது திரைப்படமாக உருவாகிவருவது கருப்பு. இப்படத்தை இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருக்கும் நிலையில், டிரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் சூர்யாவிற்கு ஜோடியாக திரிஷா கிருஷ்ணன் நடித்துள்ளார். இந்நிலையில் வரும் 2025, ஜூலை 23ம் தேதியில் சூர்யாவின் 50வது பிறந்தநாளை என்ற நிலையில், கருப்பு படம் குறித்த அப்டேட்டை ஆர்.ஜே. பாலாஜி கூறியுள்ளார். அவர், சூர்யாவின் கண் புகைப்படத்தை பகிர்ந்து ஆர்.ஜே. பாலாஜி, “Serving soon” என்ற பதிவை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் கருப்பு பட டீசர் மற்றும் முதல் பார்வை சூர்யாவின் பிறந்தநாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Serving soon 🔥🔥🔥@Suriya_offl ❤️❤️❤️#Karuppu 🖤🖤🖤 pic.twitter.com/UCD1dY6kUV
— RJB (@RJ_Balaji) July 17, 2025
-
Thanal Movie: அதர்வாவின் தணல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
நடிகர் அதர்வாவின் முன்னணி நடிப்பில், 2 வருடங்களுக்கு முன் தயாரான திரைப்படம் தணல். இயக்குநர் ரவீந்தர மாதவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை, அன்னம் பிலிம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அதிரடி ஆக்ஷ்ன் மற்றும் குற்றம் தொடர்பான கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. இதில் நடிகர் அதர்வாவிற்கு ஜோடியாகத் தெலுங்கு நடிகை லாவண்யா திரிபாதி நடித்துள்ளார். 2 ஆண்டுகளுக்கும் மேல் ரிலீசாகாமல் இருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி வரும் 2025, ஆகஸ்ட் 29ம் தேதி இப்படம் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
-
Thalaivan Thalaivii: விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி ட்ரெய்லர் வெளியானது..!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தலைவன் தலைவி. இப்படத்தில் அவருடன் கதாநாயகியாக நித்யா மேனன் நடித்துள்ளார். பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் 2025, ஜூலை 25ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகிறது. அதை முன்னிட்டு இப்படத்தின் ட்ரெய்லர் இன்று அதாவது 2025 ஜூலை 17ம் தேதி மாலை வெளியாகியுள்ளது. விவாகரத்து, குடும்பம் மற்றும் அதிரடி நகைச்சுவை என இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
-
Actor Vishal: திரையரங்க உரிமையாளர்களிடம் நடிகர் விஷால் சிறப்பு வேண்டுகோள்..!
ரெட் ஃப்ளவர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், நடிகர் விஷால் திரையரங்க உரிமையாளர்களிடம் ஒரு சிறப்பு வேண்டுகோள் விடுத்தார், அதில் படம் வெளியான முதல் மூன்று நாட்களில் திரையரங்குகளுக்குள் பொது விமர்சனங்களை படமாக்க அனுமதிக்க வேண்டாம் என்று வலியுறுத்தினார்.
-
ரூ.9 கோடி இழப்பீடு.. தயாரிப்பு நிறுவனத்தின் மீது ரவி மோகன் வழக்குப்பதிவு!
திரைப்பட ஒப்பந்தத்தை மீறியதாக நடிகர் ரவி மோகன் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க தயாரிப்பு நிறுவனமான பாபி டச் கோல்ட் யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தும், படப்பிடிப்பு திட்டமிட்டபடி தொடங்காததால், தனக்கு ஏற்பட்ட இழப்புக்கு ரூ.9 கோடி இழப்பீடு கோரி ரவி மோகன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
-
அதிவேகத்தில் உருவாகும் ‘பென்ஸ்’.. 2ம் கட்ட படப்பிடிப்பு தொடக்கம்..!
நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் நிவின் பாலி நடிப்பில் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணனின் ஆக்ஷன் த்ரில்லர் ‘பென்ஸ்’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் , தற்போது யூனிட் தனது இரண்டாவது படப்பிடிப்பை முடித்ததை உறுதிப்படுத்தியுள்ளார்.
-
நடிகர் கிங் காங்கின் மகள் திருமணம்.. 1 லட்சம் மொய் கொடுத்த வடிவேலு!
தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் கிங் காங்கின் மகள் கீர்த்தனாவின் திருமணத்திற்கு வர முடியவில்லை என்றாலும், நடிகர் வடிவேலு தனது மேலாளர் மூலம் 1 லட்சம் கொடுத்து அனுப்பியதாக கூறப்படுகிறது. முன்னதாக, நடிகர் வடிவேலு இல்லாதது நேரில் வராதது சிலரிடையே கேள்விகளை எழுப்பியது
-
Velu Prabhakaran passed away: திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார்..!
திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். கடந்த சில நாள்களாக உடல் பாதிக்கப்பட்டிருந்த வேலு பிரபாகரன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில், இன்று அதாவது 2025 ஜூலை 17ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
-
Actress Ranya Rao : தங்கக் கடத்தல் வழக்கு! நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை..!
தங்கக் கடத்தல் வழக்கில் கன்னட நடிகை ரன்யா ராவ் ஒரு வருடம் சிறை தண்டனை பெற்றுள்ளார். விக்ரம் உடன் “வாகா” படத்தில் நடித்த இவர், துபாயில் இருந்து 14.2 கிலோ தங்கத்துடன் பிடிபட்டார். அந்நிய செலாவணி பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இத்தண்டனை விதிக்கப்பட்டது. ஜாமீன் மனுக்கள் ஏற்கப்படவில்லை. வருவாய் புலனாய்வுத்துறை விசாரணை மேற்கொள்கிறது.
-
நடிகர் நிவின் பாலி, இயக்குநர் அப்ரித் ஷைன் மீது வழக்குப்பதிவு..!
கடந்த 2022ம் ஆண்டு வெளியான மஹாவீர்யார் படத்தின் தயாரிப்பாளர் அளித்த புகாரில் நடிகர் நிவின் பாலி, இயக்குநர் அப்ரித் ஷைன் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. படத்தின் தோல்வியால் ரூ.95 லட்சம் வழங்குவதுடன், ஆக்ஷன் ஹீரோ பிஜூ பார்ட் 2 படத்தை தயாரிக்க வாய்ப்பு வழங்குவதாக நிவின் பாலி உறிதியளித்திருந்ததாக தயாரிப்பாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
-
கூலி படத்தின் ‘மோனிகா’ பாடல் BTS காட்சி! நினைவுகளை பகிர்ந்த நடிகை பூஜா ஹெக்டே..!
கூலி படத்தில் சமீபத்தில் வெளியான மோனிகா பாடல் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் முதல் ரஜினிகாந்த் ரசிகர்கள் வரை இந்த பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் செய்து வருகின்றனர். இந்தநிலையில், கூலி படத்தின் ‘மோனிகா’ பாடல் BTS காட்சிகளை நடிகை பூஜா ஹெக்டே பகிர்ந்துள்ளார்.
-
பண மோசடி வழக்கில் தயாரிப்பாளர் ரவீந்திரனுக்கு சம்மன்..
தயாரிப்பாளர் மற்றும் பிக்பாஸ் பிரபலம் ரவீந்திரன் சந்திரசேகரனுக்கு மும்பை போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. பங்குச் சந்தையில் அதிக லாபம் பெற்றுத் தருவதாக மும்பையில் அஜய் ஜெகதீஷ் கபூர் என்பவரிடம் ரூ. 5.24 கோடி மோசடி செய்த வழக்கில் மும்பை போலீஸ் ரவீந்தரை சென்னையில் கைது செய்ய வந்துள்ளனர். ஆனால் அவரது உடல்நிலை கருத்தில் கொண்டு சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
நடிகை பிரியங்கா மோகனுடன் ஜோடி சேரும் நடிகர் கவின்..
நடிகர் கவின் தனது அடுத்த படத்தில் நடிகை பிரியங்கா மோகன் உடன் நடிக்க உள்ளார். இந்த புதிய படத்தை ‘கனா காணும் காலங்கள்’ தொடரை இயக்கிய இயக்குநர் கென் ராய்சன் ( Ken Royson) இயக்கவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் பூஜைகள் சமீபத்தில் நடைபெற நிலையில், இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
விஷால் – சாய் தன்ஷிகா திருமணம் தள்ளிப்போகிறதா? – வெளியான தகவல்
நடிகர் விஷால் – நடிகை சாய் தன்ஷிகா ஆகிய இருவரின் திருமணம் தள்ளிபோயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக விஷாலின் பிறந்தநாளான ஆகஸ்ட் 29ம் தேதி இருவரும் திருமணம் செய்துக்கொள்ள உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறடு.
-
நடிகர் அதர்வாவின் அடுத்தப்படம்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு
அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் அதர்வா, லாவண்யா திரிபாதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி நீண்ட நாட்களாக ரிலீசுக்கு காத்திருக்கும் தணல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
-
மாரீசன் படத்திற்கு யு/ஏ தரச் சான்றிதழ்..
இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில், உருவாகியிருக்கும் மாரீசன் படத்தில் முன்னணி நடிகர்களாக வடிவேலு மற்றும் ஃபகத் பாசில் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது வரும் 2025, ஜூலை 25ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கு சென்சார் குழு யு/ஏ தரச் சான்றிதழைக் கொடுத்துள்ளது.
-
லோகேஷ் கனகராஜ் இயக்கும் மிஸ்டர் பாரத்.. ஷூட்டிங் பணி முடிந்ததாக அறிவிப்பு…
பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக இருந்து வரும் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், இயக்குநர் நிரஞ்சன் இயக்கியிருக்கும் மிஸ்டர் பாரத் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், படத்தின் ஷூட்டிங் பணி முழுமையாக நிறைவடைந்துள்ளது. இது குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
-
மூன்று நாட்களுக்கு ரிவியூ கேட்க தியேட்டருக்குள் அனுமதிக்கக்கூடாது – நடிகர் விஷால்..
தற்போது தமிழ் படங்கள் வெளியாகும் நிலையில் அதற்கு பலரும் நெகடிவ் ரிவியூ கொடுத்து வருகிறார்கள். நெகடிவ் ரிவியூ என்பது தற்போது ட்ரெண்டாகி வருகிறது. இந்த சூழலில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் விஷால், முதல் 3 நாட்களுக்கு ரிவியூ சேகரிக்க மைக் நீட்டிக்கொண்டு வந்தால் தியேட்டருக்குள் அனுமதிக்கக்கூடாது என பேசியுள்ளார். வெளியே ரோட்டில் நின்று வேண்டுமானால் எடுத்துக்கொள்ளட்டும் என குறிப்பிட்டுள்ளார்.
-
நடிகை ரித்விகாவின் நிச்சயதார்த்தம்.. இணையத்தில் கவனம் ஈர்க்கும் புகைப்படங்கள்..
பிக்பாஸ் புகழ் ரித்விகா தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்தின் கபாலி, மெட்ராஸ் போன்ற திரைப்படங்களில் தனது இயல்பான நடிப்பு மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். தற்போது நடிகை ரித்விகா தனது சமூக வலைத்தள பக்கத்தில் தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது..
-
கூலி படத்தின் மோனிகா பாடல் மேக்கிங் வீடியோ..
கூலி படத்தில் இருந்து இதுவரை சிக்கிட்டு, மோனிகா என இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக பூஜா ஹெக்டே நடனமாடியுள்ள மோனிகா பாடல் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்தப் பாடலின் மேக்கிங் வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
-
மாரீசன் படத்துக்கு யூ/ஏ சான்றிதழ்
நடிகர் வடிவேலு மற்றும் பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்துக்கு யூ/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை மலையாள இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கியுள்ளார்.
-
நெகட்டிவ் விமர்சனங்கள் – நிவேதா தாமஸ் பதிலடி
நிவேதா தாமஸின் உடல் எடை கூடியுள்ளதால் இணையத்தில் பலரும் உருவக்கேலி செய்து வருகின்றன. இந்நிலையில் எந்த உருவக்கேலிகளும், நெகட்டிவ் விமர்சனங்களும் தன்னை பாதிக்காது என அவர் பதிலடி கொடுத்துள்ளார்
-
மிகப்பெரிய உணர்வு தருணம் – நித்யாமேனன்
அந்த அனுபவம் குறித்து பேசிய நித்யாமேனன், நான் திருச்சிற்றம்பலம் படத்துக்காக தேசிய விருது வாங்க செல்வதற்கு முதல் நாள் இந்த சாணம் அள்ளும் காட்சி படமாக்கி கொண்டிருந்தார். முதல் நாள் சாணம் அள்ளிய அந்த கை தான் மறுநாள் விருதை வாங்கியது. அது ஒரு மிகப்பெரிய உணர்வு தருணம் என்றார்
-
மாட்டுச் சாணம் அள்ளிய அனுபவம் – நித்யாமேனன்
நடிகை நித்யா மேனன் பேட்டி ஒன்றில், தேசிய விருது வெற்றிக்கு முந்தைய நாள் மாட்டுச் சாணம் அள்ளிய அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். “இட்லி கடை” படப்பிடிப்பின் போது இந்த அனுபவம் ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார்
-
அடுத்தப்படம் த்ரில்லர் – பிரேம்குமார்
96 படத்துக்கு அடுத்தப்படியாக இயக்குநர் பிரேம் குமார் 96 படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் திரில்லர் படம் என இரண்டு படங்களுக்கு திரைக்கதை அமைத்து வருவதாக தெரிவித்திருந்தார். ஒரு பேட்டி ஒன்றில் இதனை அவர் தெரிவித்தார். இந்த நிலையில் விக்ரம் உடனான படம் த்ரில்லர் படமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
-
நடிகர் விக்ரமின் அடுத்த படம்
நடிகர் விக்ரமின் அடுத்த படத்தை 96 படத்தை இயக்கிய பிரேம்குமார் இயக்கவுள்ளார். விக்ரமுக்கு கடைசியாக வீர தீர சூரன் படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் புதுப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
-
12 காட்சிகளுக்கு விமர்சனம் வேண்டாம் – விஷால்
முதல் 3 நாட்கள், குறைந்தபட்சம் 12 காட்சிகளுக்கு தியேட்டரில் நுழைந்து மக்களிடம் விமர்சனங்களைப் பதிவு செய்யக் கூடாது என கேட்டுக்கொண்டார். தியேட்டருக்கு வெளியே வேண்டுமானால் விமர்சனம் பெற்றுக்கொள்ளட்டும் என்றும், இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்
-
Actor Vishal : யூடியூப் விமர்சனம் – விஷால் பரிந்துரை
திரைப்பட விமர்சனம் தொடர்பாக கோலிவுட்டில் சர்ச்சை எழுந்து வரும் நிலையில் தியேட்டர்களில் முதல் 3 நாட்களில் படம் குறித்து மக்களிடம் கருத்து கேட்க அனுமதிக்கக் கூடாது என நடிகர் விஷால் கேட்டுக்கொண்டார்
தமிழ் சினிமாவில் (Tamil Cinema Update) புதுப்புது அப்டேட்கள் தினம் தினம் வெளியாகி வருகின்றன. டீசர், ட்ரைலர் வெளியீடுகள், புதுப்படம் அறிவிப்புகள் , படம் ரிலீஸ் தொடர்பான அறிவிப்புகள் என தொடர்ந்து அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. சினிமா அப்டேட் மட்டுமின்றி சினிமா தொடர்பான சில செய்திகளும் முக்கியச் செய்திகளில் இடம்பெற்று வருகின்றன. சமீபத்தில் வேட்டுவம் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் ஷூட்டிங்கின்போது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல, கால்ஷிட் தொடர்பான பிரச்னைக்கு நீதிமன்றம் படியேறியுள்ளார் ரவிமோகன்.. இதுபோன்ற பாலோஅப் செய்திகளும் தொடர்கின்றன. இப்படியான அனைத்து சினிமா தொடர்பான செய்திகளையும் இங்கு உடனுக்குடன் அப்டேட்களாக பெற முடியும்
தமிழ் சினிமா வரலாற்றை பொருத்தவரை, தனது பயணத்தை 1918 ஆம் ஆண்டில் இயக்குநர் ஆர். நடராஜ முதலியார் இயக்கிய “கீச்சக வாதம்” என்ற ஊமைப் படத்தின் மூலம் தொடங்கியது. இந்த ஆரம்பம், பின்னாளில் ஒரு பெரிய திரையுலக மரபாக வளர்ந்தது. நடிப்பு, இசை, தயாரிப்பு என தமிழ் சினிமா பல துறைகளில் முன்னேறி, பல திறமைசாலிகளை உருவாக்கியுள்ளது. அவர்கள் பலர் இந்தியாவின் பிற மொழிச் சினிமாக்களில் மட்டுமல்ல, உலக நாடுகளிலும் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், உலகளவில் தமிழ் சினிமாவை “Kollywood” என்றழைப்பது வழக்கமாகியுள்ளது. இந்திய சினிமாவில் ஹிந்தி படங்களுக்கு அடுத்தபடியாக தமிழ்ப்படங்களுக்கே உலகளவில் அதிக ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், இலங்கை உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் தமிழ் திரைப்படங்கள் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன. இதனால், தமிழ் சினிமாவுக்கு உலக அளவில் ஒரு தனித்துவமான அடையாளம் உருவாகியுள்ளது.
Published On - Jul 17,2025 7:56 AM