நடிகர் ஸ்ரீ நல்லா இருக்காரு… – லோகேஷ் கனகராஜ் தகவல்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது கூலி படம் தொடர்பாக பேட்டியளித்து வருகிறார். நடிகர் ஸ்ரீ தற்போது நன்றாக இருப்பதாகவும், சமீபத்தில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளதாகவும் பிரபல தொகுப்பாளர் கோபிநாத்தின் சேனலுக்கு அளித்த பேட்டியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா செய்திகள்
LIVE NEWS & UPDATES
-
தலைவன் தலைவி முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் இணைந்து நடித்துள்ள தலைவன் தலைவி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தப் படம் தமிழ்நாடு அளவில் முதல் நாளில் ரூ.5.25 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ஏகே 64ல் அஜித்துக்கு ஜோடியாகும் பிரபல நடிகை!
குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் குமாரின் அடுத்தப் படத்தை இயக்கவிருப்பதாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக லப்பர் பந்து நடிகை சுவாசிகா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
வர்ஷாவின் கான்ஸ்டபிள் கனகம் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
வர்ஷா பொல்லம்மா நடித்துள்ள கான்ஸ்டபிள் கனகம் இணைய தொடரை ஈடிவி வின் ஓடிடி தளத்தில் வருகிற ஆகஸ்ட் 14, 2025 அன்று முதல் ஒளிபரப்பாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரை பிரசாந்த் குமார் இயக்கியுள்ளார். இந்த தொடர் கிரைம் திரில்லர் ஜானரில் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.
-
ஹவுஸ் மேட்ஸ் படத்திலிருந்து வெளியான வீடியோ பாடல்
சிவகார்த்திகேயன் தனது எஸ்கே புரொடக்சன்ஸ் சார்பாக தயாரித்திருக்கும் படம் ஹவுஸ் மேட்ஸ். இந்தப் படத்தில் தர்ஷன் ஹீரோவாக நடித்துள்ள நிலையில், காளி வெங்கட் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து மின்னலி என்ற வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ள இந்தப் பாடலை மோகன்ராஜன் எழுதியுள்ளார்.
ஹவுஸ் மேட்ஸ் படத்தில் இருந்து வெளியான பாடல்
#Minnali is here 🎶
A gentle tune that captures the mood of #HouseMates.Music: @RajeshMRadio | Lyrics: @Lyricist_Mohan#HouseMatesFromAug1 – in theatres August 1!@Siva_Kartikeyan @KalaiArasu_ @archanakalpathi @aishkalpathi @agscinemas @rajvel_hbk… pic.twitter.com/Q4ZNF4agVu
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) July 26, 2025
-
தனுஷுக்கு நன்றி சொன்ன சந்தீப் கிஷன்
நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் வெளியாகி ஜுலை 26, 2025 அன்றுடன் ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து படக்குழுவினர் தங்கள் ராயன் பட அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சந்தீப் கிஷன், இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்காக தனுஷிற்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
-
இட்லி கடை பாடலை கீபோர்டில் வாசித்த தனுஷ் – ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட வீடியோ
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் இட்லி கடை. இந்தப் படத்தில் இருந்து முதல் பாடல் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு ஜூலை 28, 2025 மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்தப் பாடலை நடிகர் தனுஷ் கீபோர்டில் வாசிக்கும் வீடியோவை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.
-
ஸ்ரீ ரொம்ப நல்லா இருக்காரு… – லோகேஷ் கனகராஜ் தகவல்
கூலி படம் தொடர்பாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தொகுப்பாளர் கோபிநாத்தின் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். அப்போது நடிகர் ஸ்ரீ குறித்து விளக்கம் அளித்தார். அவர் பேசியதாவது, நடிகர் ஸ்ரீ ரொம்ப நல்லா இருக்காரு. மகிழ்ச்சியாக இருக்கிறார். இப்பொழுது கூட புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார் என்று விளக்கம் அளித்துள்ளார்.
-
உசுரே படக்குழுவுக்கு கமல்ஹாசன் வாழ்த்து!
டிஜே அருணாச்சலம், பிக்பாஸ் ஜனனி நடித்துள்ள உசுரே திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 1, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் உசுரே படக்குழுவினர் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்தப் படத்தை நவீன் டி கோபால் இயக்கியுள்ளார்.
-
விஷால் – ரவி அரசு பட ஷூட்டிங் அப்டேட்
நடிகர் விஷால் அடுத்ததாக இயக்குநர் ரவி அரசு நடிக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். சூப்பர் குட் ஃபிலிம்ஸ் சார்பாக ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கவிருக்கிறார். இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூலை 27, 2025 அன்று முதல் துவங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
என்றும் நன்றியுடன் இருப்பேன் – துஷாரா விஜயன் நெகிழ்ச்சி
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் எழுதி இயக்கி, நடித்துள்ள ராயன் படம் வெளியாகி ஜூலை 26. 2025 அன்றுடன் ஒரு வருடத்தை நிறைவு செய்கிறது. இந்த நிலையில் இந்தப் படத்தில் தனுஷின் தங்கை வேடத்தில் நடித்திருந்த துஷாரா விஜயன் தனது எக்ஸ் பக்கத்தில் ராயன் படம் தொடர்பாக பதிவிட்டுள்ளார். அதில், ராயன் படக்குழுவுக்கு என்றும் நன்றியுடன் இருப்பேன். அவர்களுக்கா இந்தப் பாடலை சமர்பிக்கிறேன், உசுரே நீதானே நீ தானே என குறிப்பிட்டுள்ளார்.
-
கூலியைத் தொடர்ந்து மீண்டும் ரஜினியுடன் இணையும் லோகேஷ் கனகராஜ்!
கூலிப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் ரஜினிகாந்த்துடன் இணையவுள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேட்டி ஒன்றில் பேசிய லோகேஷ் கனகராஜ், கூலி படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் உடன் மீண்டும் இணையவிருக்கிறேன். அந்தப் படம் கைதி 2 படத்துக்கு பிறகு தொடங்கப்படலாம் என்றார்.
-
பெங்களூருவில் தலைவன் தலைவி பட போஸ்டரில் கன்னட எழுத்துகள்!
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி படம் நேரடியாக தமிழில் வெளியாகியிருந்தது. தமிழில் போஸ்டர் ஒட்டப்பட்டதற்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து கன்னடத்தில் போஸ்டர் ஒட்டபப்பட்டுள்ளது. இது குறித்து புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
-
எதிர் கருத்து வைக்கும் நண்பர்களுக்கு….. அய்யா படம் குறித்து சேரன் விளக்கம்
பாமக நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை இயக்குநர் சேரன் இயக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் ராமதாஸ் வேடத்தில் ஆரி நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூலை 25, 2025 அன்று வெளயானது. இந்த நிலையில் இயக்குநர் சேரன் தனது எக்ஸ் பக்கத்தில், அய்யா திரைப்படத்தின் போஸ்டர் டிசைன்களை பார்த்து பாராட்டிய அனைவருக்கும் நன்றி.. இப்போதுதான் இதன் வேலைகள் ஆரம்பிக்கிறது.. ஆகையால் மாற்றுக்கருத்து அல்லது எதிர்கருத்து வைக்கும் நண்பர்கள் திரைப்படம் வரும்வரை பொறுமை காத்து அதன் பின்னர் கருத்துக்களை சொல்லவும்.. நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
-
சிவகார்த்திகேயனின் மதராஸி படம் எப்படி இருக்கும்? முருகதாஸ் தகவல்
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்போது மதராஸி படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மினி வசந்த் நடித்துள்ளார். இந்த நிலையில் இந்தப் படம் தொடர்பாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அளித்த பேட்டியில், இந்தப் படம் திரைக்கதையில் கஜினி மாதிரியும், ஆக்சன் காட்சிகளில் துப்பாக்கி மாதிரியும் இருக்கும் என்றார்.
-
தனுஷின் ராயன் வெளியாகி ஓராண்டு நிறைவு!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் எழுதி இயக்கி நடித்துள்ள படம் ராயன். இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அடங்காத அசுரன் உள்ளிட்ட பாடல்கள் படத்துக்கு பக்கபலமாக அமைந்திருந்தது. இந்த நிலையில் இந்தப் படம் வெளியாகி ஓராண்டு நிறைவு செய்துள்ளது. இதனையடுத்து தனுஷ் ரசிகர்கள் ஹேஷ்டேக் அமைத்து கொண்டாடி வருகின்றனர்.
-
விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட சென்சார் விவரம்!
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள கிங்டம் படம் வருகிற ஜலை 31, 2025 அன்று வெளியாகவுள்ளது. கௌதம் தின்னூரி இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். பாக்யஸ்ரீ போர்ஸ் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த நிலையில் இந்தப் படத்துக்கு தணிக்கைத்துறை யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
-
10 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘கூலி’ படத்தின் பவர் ஹவுஸ் பாடல்
அனிருத் இசையில் ரஜினிகாந்த்தின் கூலி படத்தில் இருந்து கூலி பவர் ஹவுஸ் என்ற பாடல் வெளியான சில நாட்களிலேயே யூடியூபில் 10 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இந்தப் பாடலை அறிவு எழுதி, அனிருத்துடன் இணைந்து பாடியுள்ளார். இந்தப் பாடல் கூலி படத்தின் ஹைலைட்டாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
அஜித் படத்தை இயக்குவது 100% உறுதி – லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ் கூலி படம் தொடர்பாக பிரபல தொகுப்பாளர் கோபிநாத்தின் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருந்தார். அதில், அஜித் சாரின் படத்தை இயக்குவது தொடர்பாக கடந்த 10 மாதங்களுக்கு முன் பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது. எனது ஸ்டைலில் அவரை வைத்து ஒரு ஆக்ஷன் படம் இயக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்று பேசினார்.
-
மகள் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் பெருமிதம்!
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராமில் மகள் ரஹீமா குறித்து பதிவிட்டுள்ளார். அதில், என் மகள் ரஹீமா கிளியன் உயர்கல்வி நிலையத்தில் பட்டம் பெற்றிருக்கிறார். பெருமைமிகு தந்தை என குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் அவருக்கும் அவரது மகளுக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
-
கடைக்குட்டி சிங்கம் படத்தின் வசூலை தலைவன் தலைவி முறியடிக்கும் – பாண்டிராஜ் நம்பிக்கை!
பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி – நித்யா மேனன் இணைந்து நடித்துள்ள தலைவன் தலைவி படம் கடந்த ஜூலை 25, 2025 அன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில் இந்தப் படம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் பாண்டிராஜ், தலைவன் தலைவி படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்தப் படம் எனது கடைக்குட்டி சிங்கம் படத்தின் வசூலை முந்தும் என நம்பிக்கை தெரிவித்தார்.
-
கூலியில் மேக்கப் இல்லாமல் நடித்திருக்கிறேன் – ஸ்ருதி ஹாசன்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படம் வருகிற ஆகஸ்ட் 14, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் தெலுங்கு சேனல் ஒன்றுக்கு ஸ்ருதி ஹாசன் அளித்த பேட்டியில் கூலி படத்தில் மேக்கப் இல்லாமல் நடித்திருப்பதாக தெரிவித்திருந்தார்.
-
கமலுக்கு ஆரம்பிக்கலாமா? ரஜினிக்கு முடிச்சிடலாமா? – லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த சீக்ரெட்!
கோபிநாத் சேனலுக்கு பேட்டியளித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், சுவாரசியத் தகவலைப் பகிர்ந்துகொண்டார். அவர் பேசியதாவது, ”விக்ரம் படத்தில் கமல்ஹாசன் ஆரம்பிக்கலாமா என்ற வசனம் பிரபலமானது. அதே போல கூலியில் என்ன வசனம் இருக்கலாம் என யோசித்தபோது, முடிச்சிடலாமா என சொன்னால் சரியாக இருக்கும் தோன்றியது. அந்த காட்சி இடைவேளையின் போது வரும். படத்தின் முக்கியமான காட்சியாக இருக்கும்” என்றார்.
-
சுவாரசியமான வாரமாக இருக்கப்போது… அப்டேட் கொடுத்த நடிகர் கிருஷ்ணா
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார் நடிகர் கிருஷ்ணா. இந்த நிலையில் அவர் தனது எக்ஸ் பக்கத்தில், சுவாரசிமான வாரமாக இருக்கப்போகிறது. அது குறித்து விரைவில் அப்டேட் செய்யப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார். அவர் நடிக்கவிருக்கும் புதுப்படம் குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
-
ஆமீர்கானை வைத்து இரும்புக்கை மாயாவி படமா? – லோகேஷ் கனகராஜ் மறுப்பு
சூர்யாவுக்காக நான் எழுதிய இரும்புக்கை மாயாவி படத்தை தான் ஆமீர்கானை வைத்து நான் இயக்குவதாக எல்லாரும் நினைக்கிறார்கள். அது உண்மை இல்லை என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். சொல்லப்போனால் இந்த 10 ஆண்டுகளில் அந்த கதையில் இருந்து சில முக்கிய காட்சிகளை எனது படங்களில் பயன்படுத்தி விட்டேன். இனிமேல் புதிதாக கொஞ்சம் மாற்றி தான் அந்த படத்தின் கதை எழுத வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
-
கேங்ஸ்டர் கேரக்டரில் நடிக்கிறேன்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நான் ஒரு ஆக்ஷன் படத்தில் கேங்ஸ்டர் கேரக்டரில் நடிக்கிறேன் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அந்த படத்திற்காக நான் உடல் எடை குறைப்பு மற்றும் தாடி வளர்த்து வருகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
-
திருமணம் செய்துக் கொள்வது என்பது நீண்ட நாள் கனவு .. நடிகை மிருணாள் தாகூர்
திருமணம் செய்துக் கொண்டு தாயாக மாறுவது என்பது தன்னுடைய சிறுவயது கனவு என நடிகை மிருணாள் தாகூர் கூறியுள்ளார். ஆனால் தன்னுடைய கவனம் முழுவதும் தற்போது சினிமாவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
-
6 ஆண்டுகளை நிறைவு செய்த டியர் காம்ரேட் படம்!
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான ‘டியர் காம்ரேட்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் படம் பற்றிய பல்வேறு நினைவுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.
-
முடிவுக்கு வரும் பாக்கியலட்சுமி சீரியல்.. கண்ணீரில் பிரபலங்கள்
விஜய் டிவியில் கடந்த 5 வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த பாக்கியலட்சுமி சீரியல் இம்மாத இறுதியில் நிறைவு பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அதில் நடித்த பிரபலங்கள் கடைசி நாள் ஷூட்டிங் என தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு தங்கள் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
-
சிரஞ்சீவியுடன் நடனமாடும் மௌனி ராய்.. வைரலான புகைப்படம்
தெலுங்கில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்க மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் விஸ்வம்பரா படத்தின் சிறப்பு பாடலுக்கான ஷூட்டிங் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நடிகை மௌனி ராய் ஆடியுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
-
தமிழில் ரீமேக்காகும் நானியின் கோர்ட்.. ஹீரோயினாகும் நடிகையின் மகள்
தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நடிகர் நானி தயாரித்த கோர்ட் படம் தமிழில் ரீமேக்காக உள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படத்தின் மூலம் நடிகை தேவயானியின் மகள் இனியா ஹீரோயினாக அறிமுகமாவுள்ளதாக கூறப்படுகிறது.
-
சினிமாவில் 16 ஆண்டுகளை நிறைவு செய்த ஸ்ருதிஹாசன் – குவியும் வாழ்த்து!
நடிகர் கமல்ஹாசனின் மகளாக சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டு, தன்னுடைய திறமைகளால் தனியிடம் பிடித்துள்ள நடிகை ஸ்ருதிஹாசன் சினிமாவில் 16 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இந்தியில் லக் படத்தின் மூலம் அறிமுகமான அவர் தமிழில் ஏழாம் அறிவு படம் மூலம் எண்ட்ரீ கொடுத்தார். விஜய், அஜித், சூர்யா, விஜய் சேதுபதி என பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்திருக்கிறார். அடுத்ததாக ரஜினி நடிப்பில் வெளியாகவுள்ள கூலி படத்திலும் ஸ்ருதிஹாசன் இடம் பெற்றிருக்கிறார்.
-
Maareesan: மாரீசன் படம் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
சுதீஷ் ஷங்கர் இயக்கத்தில் வடிவேலு, ஃபஹத் ஃபாசில் நடித்த மாரீசன் படம் முதல் நாளில் மட்டும் ரூ.2.2 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றாலும் முதல் நாளில் வசூல் பெரிதாக இல்லை என சொல்லப்படுகிறது.
-
ஷூட்டிங்கில் நடிகை மிர்ணாள் தாகூருக்கு காயம்.. படக்குழு அதிர்ச்சி
அதிவி சேஷ் ஹீரோவாக நடிக்கும் டக்கோயிட்: எ லவ் ஸ்டோரி படத்தின் ஷூட்டிங்கில் நடிகை மிர்ணாள் தாகூருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகவுள்ளதால் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் இப்படியான சம்பவம் அரங்கேறியுள்ளது.
-
Samyuktha Hegde: வலிமைக்கு ஆண், பெண் பேதமில்லை: நடிகை சம்யுக்தா ஹெக்டே
தமிழில் ஜெயம் ரவி நடித்த கோமாளி படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை சம்யுக்தா ஹெக்டே சமீபகாலமாக தீவிர உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதுதொடர்பான புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர் வலிமைக்கு ஆண், பெண் பேதமில்லை. நாங்களும் மனிதர்கள் தான். புதிய முயற்சிக்காக பெண் அங்கீகரிக்கும்போது அச்சுறுத்தல் குறைகிறது” என தெரிவித்துள்ளார்.
-
திருமணம் நடந்தாலும் மகிழ்ச்சி.. நடிகை நித்யா மேனன் கொடுத்த பதில்!
வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்துக் கொள்ள மாட்டேன் என்ற நிபந்தனையுடன் தான் வாழவில்லை என நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார். மேலும் திருமணம் நடந்தாலும் மகிழ்ச்சி.. நடக்காவிட்டாலும் அதை விட மகிழ்ச்சி எனவும் அவர் கூறியுள்ளார்.
-
தலைவன் தலைவி படம் பார்க்க வந்தவர்ளுக்கு இலவசமாக பரோட்டா, சிக்கன் குருமா
சென்னை குரோம்பேட்டையில் உள்ள தியேட்டரில் தலைவன் தலைவி படம் பார்க்க வந்த மக்களுக்கு இலவசமாக பரோட்டா, சிக்கன் குருமா வழங்கப்பட்ட சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி பரோட்டா மாஸ்டராக நடித்திருக்கிறார்.
-
ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற தலைவன் தலைவி படம்.. முதல் நாள் வசூல் நிலவரம்
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யாமேனன் நடிப்பில் ஜூலை 25ம் தேதி வெளியாகியுள்ள தலைவன் தலைவி படம் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் முதல் நாளில் ரூ.4.15 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு
வெற்றி நடித்துள்ள சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் ஹீரோயினாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். அனீப் அஷ்ரப் இயக்கியுள்ள இந்த படம் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வைகோவையும்,கமல்ஹாசனையும் பாராட்டிய வைரமுத்து
நாடாளுமன்றம் சார்ந்துபுதிதாகப் பொறுப்பேற்றுக்கொண்டநண்பர்களையும்குறிப்பாக இருவரையும் பாராட்டுகிறேன் என கவிப்பேரரசு வைரமுத்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நாடாளுமன்றத்தை நிறைவு செய்த வைகோவையும், புதிதாக அடியெடுத்து வைத்துள்ள கமல்ஹாசனையும் குறிப்பிட்டுள்ளார்.
வைரமுத்துவின் பதிவு
நாடாளுமன்றம் சார்ந்து
புதிதாகப்
பொறுப்பேற்றுக்கொண்ட
நண்பர்களையும்
குறிப்பாக இருவரையும்
பாராட்டுகிறேன்ஒருவர்
நாடாளுமன்றத்தை
நிறைவுசெய்கிறவர்;
இன்னொருவர்
நாடாளுமன்றத்தில்
நுழைவு செய்கிறவர்மனித உரிமைகளுக்கும்
தமிழ் தமிழர்
தமிழ்நாட்டு உரிமைகளுக்கும்
சங்கு முழங்கிய… pic.twitter.com/8GJKlG2p7U— வைரமுத்து (@Vairamuthu) July 26, 2025
-
கூலி படத்தில் தன்னுடைய கேரக்டர் பற்றி பேசிய ஸ்ருதிஹாசன்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த நடிப்பில் உருவாகியுள்ள படம் கூலி. இப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ளது. இப்படியான நிலையில் கூலி படத்தில் தான் சத்யராஜ் மகளாக நடித்திருப்பதாக நடிகை ஸ்ருதிஹாசன் தனது கேரக்டர் பற்றி பேசியுள்ளார்.
-
மணிகண்டன் இயக்கினால் நான் ஹீரோவாக நடிக்க ரெடி – அஸ்வத் மாரிமுத்து
ஓ மை கடவுளே, டிராகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து, நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது தமிழ் சினிமாவில் நடிப்பில் கலக்கி வரும் மணிகண்டன் இயக்கினால் தான் படத்தில் ஹீரோவாக நடிக்க ரெடி எனவும் கூறியுள்ளார். மேலும் படிக்க
-
டாக்டர் ராமதாஸின் வாழ்க்க வரலாறு.. ஷூட்டிங் எப்போது தெரியுமா?
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸின் வாழ்க்க வரலாறு சினிமாவாக எடுக்கப்பட உள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பின் இப்படத்தை சேரன் இயக்குகிறார். இதில் ராமதாஸாக நடிகர் ஆரி நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் செப்டம்பரில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 25ஆம் தேதி வெளியான தலைவன் தலைவி மற்றும் மாரீசன் ஆகிய இரு படங்கள் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. விடுமுறை நாட்களில் புதிய வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 28ஆம் தேதி நடிகர் தனுஷ் தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இதனை முன்னிட்டு அவர் நடித்து 2006 ஆம் ஆண்டு வெளியான புதுப்பேட்டை படம் இன்று ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று (ஜூலை 25) பிரதீப் ரங்கநாதனின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான போஸ்டரில் ரிலீஸ் தேதி இல்லாததால் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். நடிகர் தனுஷ் நடித்துள்ள இட்லி கடை படத்தின் முதல் பாடல் ஜூலை 27 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகும் இந்த பாடலை தனுஷ் எழுதி பாட துணையாக ஸ்வேதா மோகன் பாடியுள்ளார்.