Dulquer Salmaan: எனது கேரியரில் ஸ்பெஷல் திரைப்படம் காந்தா.. நெகிழ்ச்சியாக பேசிய துல்கர் சல்மான்!

Dulquer Salmaan About Kaantha Movie: சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் துல்கர் சல்மான். இவரின் நடிப்பிலும், தயாரிப்பிலும் மிக பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம்தான் காந்தா. இந்த படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சி இன்று நடைபெற்றிருந்த நிலையில், அதில் இப்படத்தை பற்றி அவர் கூறிய தகவல் குறித்து பார்க்கலாம்.

Dulquer Salmaan: எனது கேரியரில் ஸ்பெஷல் திரைப்படம் காந்தா.. நெகிழ்ச்சியாக பேசிய துல்கர் சல்மான்!

துல்கர் சல்மான்

Published: 

06 Nov 2025 15:59 PM

 IST

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan). இவர் வெறும் நடிகராக மட்டுமில்லாமல், தயாரிப்பாளராகவும் திரைப்படங்களை தயாரித்துவருகிறார். இவர் இறுதியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் “லோகா” (Lokah) என்ற திரைப்படத்தை தயாரித்து இருந்தார். இந்த திரைப்படத்தின் வெற்றியை அடுத்ததாக, இவரின் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள படம்தான் காந்தா (Kaantha). இப்படத்தை இயக்குநர் செல்வமணி செல்வராஜ் (Selvamani Selvaraj) இயக்கியுள்ளார். இவர் இயக்க துல்கர் சல்மான், சமுத்திரக்கனி (Samuthirakani), பாக்யஸ்ரீ போர்ஸ் (Bhagyashri Borse) மற்றும் நடிகர் ராணா டகுபதி என பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்திருக்கிறார்கள். இந்த படமானது வரும் 2025 நவம்பர் 14ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி கிட்ட நெருங்கும் நிலையில், இன்று 2025 நவம்பர் 6ம் தேதியில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருந்தது.

இப்படத்தின் ட்ரெய்லரை சிலம்பரசன் மற்றும் ரெபெல் ஸ்டார் பிரபாஸ் (Prabhas) இணைந்து வெளியிட்டிருந்தனர். அதை தொடர்ந்து இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சி இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடந்திருந்தது. அதில் பேசிய நடிகர் துல்கர் சல்மான், “இந்த காந்தா படம் எனக்கு மட்டுமில்ல இதில் நடித்த அனைவருக்கும் ஒரு ஸ்பெஷலான படம்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நயன்தாரா எனக்கு போட்டியா? அனைவருக்கு அதை சொல்ல காரணம் இதுதான்- திரிஷா கிருஷ்ணன்!

துல்கர் சல்மானின் காந்தா திரைஇப்பட ட்ரெய்லர் பதிவு :

காந்தா திரைப்படம் குறித்து மேடையில் பேசிய துல்கர் சல்மான் :

அந்த நிகழ்ச்சியின்போது பேசிய துல்கர் சல்மான், “இந்த படத்தின் மீது எங்கள் அனைவருக்கும் அவ்வளவு ஆசை, மேலும் நம்பிக்கையும் இருக்கிறது. ஏனென்றால் இப்படம் அவ்வளவு ஸ்பெஷல். எனக்கு மட்டுமில்ல இந்த படத்தில் நடித்த அனைவருக்கும் காந்தா ஒரு ஸ்பெஷல் திரைப்படமாக இருக்கும் . இந்த படமும் நிறைய வித்தியாசமான கதையில் உருவாகியுள்ளது. எனக்கு தமிழ் என்றால் மிகவும் பிடிக்கும். எனது பள்ளி பருவத்தில் 3வது மொழியாக தமிழ் இருந்தது, நானும் தமிழ்தான் படித்தேன். என்னுடன் பணியாற்றிய மலையாள இயக்குநர்களும் சார் உங்களுக்கு மலையாளத்தை விடவும் தமிழ் மொழி மிகவும் நன்றாக வருகிறது என்றும் கூறுவார்கள்.

இதையும் படிங்க: ஊதித் தள்ள நான் ஒன்னும் மண்ணு இல்லை… மலை – வெளியானது துல்கர் சல்மானின் காந்தா பட ட்ரெய்லர்!

அந்த மாதிரி எனக்கு அவ்வளவு பிடித்த மொழி தமிழ்தான். சினிமா மொத்தமாக இந்த கோடம்பாக்கத்தில் இருந்து டிராக் மாதிரி, மற்ற மொழிகளில் சென்று மிக பிரம்மாண்டமாக மாறியிருக்கிறது. இந்த காந்தா படத்தில், அந்த காலத்து சினிமா ஸ்டூடியோ எப்படி இருக்கும் என நினைக்கிறீர்களோ, அதை உணர்த்துக்கொள்வீர்கள். அதை பற்றி நீங்கள் அதிகம் தெரிந்துகொள்வீர்கள். அதன் காரணமாக இந்த் படத்தை 4 & 5 மொழிகளில் டப் பண்ணவில்லை. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் மட்டும்தான் டப்பிங் செய்திருக்கிறோம்” என்று அந்த நிகழ்ச்சியில் அவர் தெரிவித்திருந்தார்.