Happy Raj: மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த ஜிவி பிரகாஷ்… ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!

Happy Raj First Look: தென்னிந்திய சினிமாவில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவர்தான் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர் நாயகனாகவும் படங்களில் நடித்துவரும் நிலையில், சமீபத்தில் ஹேப்பி ராஜ் என்ற படத்தின் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இன்று (2025 டிசம்பர் 7ம் தேதி) இப்படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது.

Happy Raj: மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த ஜிவி பிரகாஷ்... ஹேப்பி ராஜ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!

ஹேப்பி ராஜ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

Published: 

07 Dec 2025 18:27 PM

 IST

நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் (GV. Prakash Kumar) நடிப்பில் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்தில் திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் பிளாக்மெயில் (Blackmail). இந்த படமானது கடந்த 2025 செப்டம்பர் மாதத்தில் வெளியான நிலையில், அந்தளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இந்த 2025ம் ஆண்டில்  ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் மட்டும் கிங்ஸ்டன் (Kingston) மற்றும் பிளாக்மெயில் என 2 படங்கள் வெளியாகியிருந்தது. அந்த வகையில் படங்களில் நடிப்பதை தொடர்ந்து, சினிமாவில் பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு இசையமைத்துவருகிறார். இவரின் இசையமைப்பில் சிவகார்த்திகேயனின் பராசக்தி (Parasakthi) திரைப்படமானது பிரம்மாண்டமாக உருவாகிவரும் நிலையில், இப்படத்திலிருந்து 2 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. மேலும் இவர் புது படங்களிலும் நடித்துவருகிறார். அந்த வகையில் அறிமுக இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன் (Maria Raja Elanchezian) இயக்கத்தில் ஹேப்பி ராஜ் (Happy Raj) என்ற புது படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் கடந்த 2025 டிசம்பர் 6ம் தேதியில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து இன்று 2025 டிசம்பர் 7ம் தேதியில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் முதல் பார்வையை நடிகர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan) வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மீண்டும் ஒரு வெற்றி.. மலேசியாவில் நடைபெற்ற கார் ரேஸில் 4வது இடத்தை பிடித்த அஜித் அணி!

ஜி.வி. பிரகாஷ் குமாரின் ஹேப்பி ராஜ் பட முதல் பார்வையை வெளியிட்ட துல்கர் சல்மான் :

இந்த ஹேப்பி ராஜ் படத்தில் மீண்டும் ஜி.வி. பிரகாஷ், லவ்வர் பாயாக நடிக்கவுள்ளார். இவரின் நடிப்பில் வெளியான திரிஷா இல்லனா நயன்தாரா படத்தை போன்று இந்த படத்திலும் வித்தியாசமான வேடத்தில் நடிக்கவுள்ளாராம். இந்த படத்தை அறிமுக இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன் இயக்க, பேயொண்ட் பிக்ச்சர்ஸ் என்ற புது தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இதையும் படிங்க: பூஜையுடன் தொடங்கியது சூர்யா 47 படம்… வைரலாகும் போட்டோ

மற்ற படங்களை போல இந்த படத்திற்கு ஜிவி.பிரகாஷ் பதிலாக இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இந்த படத்தில் கதாநாயகி யார் என்பது தொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

ஜி.வி. பிரகாஷ் கைவசம் உள்ள படங்கள் :

இவர் ஏற்கனவே செல்வராகவன் இயக்கத்தில் மெண்டல் மனதில் என்ற படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைய உள்ளது. பின் இமார்ட்டல் என்ற படத்திலும் நடிகை கயாடு லோஹர் உடன் இணைந்து நடித்துவருகிறார். இந்த படங்களை அடுத்ததாகதான் இந்த ஹேப்பி ராஜ் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகரித்து வரும் தங்க குத்தகை.. என்ன காரணம்?
மக்களை காக்கும் வவ்வால்கள் - கிராம மக்களின் விசித்திர நம்பிக்கை
உங்கள் அறையின் ஓரத்தில் நிற்பது பேயல்ல. அது ஸ்லீப் பேரலிசிஸ்!
ஏலியனுடன் தொடர்பில் இருந்த ஜார்ஜ் புஷ்? அமேசான் பிரைம் ஆவண படத்தால் சர்ச்சை