மலையாள சினிமாவில் ஒரு ஜாதி ஜாதகம் படத்தை மிஸ் பண்ணிடாதீங்க!
Oru Jaathi Jaathakam: ஓடிடி பயன்பாடு வந்த பிறகு தமிழ் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் வெளியாகும் படங்களை தொடர்ந்து தற்போது தமிழ் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். அந்த வகையில் மலையாத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற இந்த ஒரு ஜாதி ஜாதகம் படத்தை மிஸ் பண்ணிடாதீங்க.

ஒரு ஜாதி ஜாதகம்
மலையாள சினிமாவில் (Malayala Cinema) நடிகர், இயக்குநர், பாடகர் என பன்முகத் தன்மையோடு இருப்பவர் நடிகர் வினித் சீனிவாசன். இவர் மலையாள பழம்பெரும் நடிகர் சீனிவாசனின் மூத்த மகன் ஆவர். இவரது நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ஒரு ஜாதி ஜாதகம். இந்தப் படத்தை இயக்குநர் மோகன் இயக்கி இருந்த நிலையில் திரைக்கதை ராஜேஷ் மண்டோட்டி எழுதி இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் வினித் சீனிவாசன் உடன் இணைந்து நடிகர்கள் நிகிலா விமல், பாபு ஆண்டனி, கயாடு லோஹர், இந்து தம்பி, சிப்பி தேவஸ்ஸி, பி.பி.குன்கிகிருஷ்ணன், அமல் தாஹா, பூஜா மோகன்ராஜ், சயனோரா பிலிப், மிருதுல் நாயர், ஐஸ்வர்யா மிதுன் கோரோத், ஷான் ரோமி, ரஞ்சி கன்கோல், ரெஜிதா மது, வர்ஷா ரமேஷ், அரவிந்த் ரெகு, ஷரூன் லக்ஷ்மன், சிவதாஸ் கண்ணூர், சரத் சபை, ஹரிதா பரோகோட், நிர்மல் பாலாழி, விஜயகிருஷ்ணன், அனுஸ்ரீ அஜிதன், திவாகரன் விஷ்ணுமங்கலம், விது பிரதாப், இஷா தல்வார், ஸ்ரீலட்சுமி மேலாதத் என பலர் நடித்து இருந்தனர்.
இசையமைப்பாளர் குணா பால சுப்ரமணியம் ஒரு ஜாதி ஜாதகம் படத்திற்கு இசையமைத்து இருந்த நிலையில் படத்தை வர்ணசித்ரா பிக் ஸ்கிரீன் என்ற தயரிப்பு நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் மகா சுபைர் இந்தப் படத்தை தயரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு விஸ்வஜித் ஒடுக்கத்தில் ஒளிபதிவு செய்திருந்த நிலையில் ரஞ்சன் ஆபிரகாம் எடிட்டிங் பணியை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஒரு ஜாதி ஜாதகம் படத்தின் கதை என்ன?
நடிகர் வினித் சீனிவாசன் திருமண வயது கடந்து அவரது கண்டிஷன்களுக்கு எல்லாம் ஒத்து போகிற ஒரு பெண்ணைதான் திருமணம் செய்ய வேண்டும் என்ற கனவோடு வாழ்ந்து வருபவர். அவர்களின் குடும்பத்தில் திருமணத்திற்கு ஜாதகம் என்பது மிகவும் முக்கியம் என்று நினைக்கின்றனர். அதனை வினித் சீனிவாசனும் நம்பும் நபராக இருக்கிறார்.
மேலும் ஐடியில் வேலை செய்து கொண்டு இருந்தாலும் சில பிற்போக்குதனமான விசயங்களை நம்பி இருப்பதால் இவருக்கு பெண் கிடைப்பதே கடினமான ஒன்றாக இருக்கிறது. பார்க்கும் ஒவ்வொரு பொண்ணையும் எதாவது குறை கூறி தட்டிக்கழித்து வருகிறார் வினித் சீனிவாசன்.
Also Read… மெர்சல் படத்தில் நித்யாமேனன் கதாப்பாத்திரம் எனக்குதான் வந்தது – ஜோதிகா சொன்ன விசயம்!
ஒரு கட்டத்தில் வயது அதிகமாகி இவர் சரி திருமணம் செய்துகொள்ளலாம் என்ற முடிவில் அவரது கண்டிசன்கள் அனைத்தையும் தளர்த்திக்கொண்டு பெண் தேடும் போது அந்த பெண்கள் இவரை எதாவது ஒரு காரணத்திற்காக மறுக்கின்றனர். இறுதியாக இவருக்கு திருமணம் நடந்ததா இல்லையா என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது அமேசான் பிரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
ஒரு ஜாதி ஜாதகம் படத்தின் ட்ரெய்லர் இதோ:
Also Read… திருமணத்தை ஒத்திவைப்பதாக சொன்ன பிக் பாஸ் ரித்விகா – அதிர்ச்சியில் ரசிகர்கள்